சூரிய சக்தியில் நாளொன்றுக்கு 70 கிலோ மீட்டர் தூரம் இயங்கக் கூடிய சோலார் கார் நெதர்லாந்தில் உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி மின்சார சார்ஜிங் இன்றி இந்த காரை பயன்படுத்த முடியும். நெதர்லாந்தை சேர்ந்த லைட் இயர் என்ற தொடக்க நிலை மின்சார கார் தயாரிப்பு நிறுவனம் தான் இந்த அசத்தலான காரை உருவாக்கி உள்ளது. லைட் இயர் 0 மொடல் காரின் மேற்பகுதி மற்றும் பேனட் பகுதியில் 5 சதுர மீட்டர் சுற்றளவுக்கு...
  தொழில்நுட்ப ஜாம்பவான்களான கூகுள், ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரை ஐரோப்பிய ஒன்றியம் எச்சரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. Google, Facebook, Twitter மற்றும் பிற தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் தளங்களில் உள்ள deepfake (போலி வீடியோக்கள்) மற்றும் போலி கணக்குகளை எதிர்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது புதுப்பிக்கப்பட்ட ஐரோப்பிய ஒன்றிய நடைமுறைக் குறியீட்டின் கீழ் அதிக அபராதம் விதிக்கப்படும். ஐரோப்பிய ஆணையம், போலிச் செய்திகளுக்கு எதிரான ஒடுக்குமுறையின் ஒரு பகுதியாக, தவறான தகவல்...
  மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் பிரவுசர் பயன்பாடு இன்று முதல் முடிவுக்கு வருகிறது. கடந்த 27 ஆண்டுகளுக்கு முன்னர் 1995 ஆகஸ்ட் 26ஆம் திகதி இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் பிரவுசர் அறிமுகம் செய்யப்பட்டது. உலகில் பரவலான மக்கள் கணினி பயன்பாட்டை தொடங்கிய காலத்தில் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் துணை கொண்டே பயனர்கள் தங்களுக்கு தேவையானவற்றை இணையவெளியில் தேடி, தெரிந்துகொண்டனர். படிப்படியாக பல்வேறு அப்டேட்களை கண்டது இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர். கடைசியாக கடந்த 2013 வாக்கில் இன்டர்நெட்...
  வாட்ஸ் அப் மீண்டும் அசத்தலான அப்டேட்டை தங்கள் பயனர்களுக்கு கொடுத்துள்ளது. சமீபத்தில் வழங்கப்பட்ட அப்டேட்டில் ஒரே வாட்ஸ் அப் குரூப்பில் 512 உறுப்பினர்களை சேர்க்க முடியும் என அந்த நிறுவனம் தெரிவித்தது. மேலும் இனி ஒரே நேரத்தில் 32 பேர் வாட்ஸ் அப் குழு அழைப்புகளில் கலந்துரையாடலாம் என அந்த நிறுவனம் கூறியிருந்தது. இந்நிலையில் வாட்ஸ் அப் குழு அழைப்புகள் தொடர்பிலேயே புதிய அப்டேட் தற்போது வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தற்போது குழு...
  ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துவர்கள் அதிகம் சந்திக்கும் பிரச்சனை சார்ஜிங் போடுவது தான். அந்த பிரச்சனைக்கு தீர்வு காண Oukitel WP19 என்கிற பெயர் கொண்ட ஸ்மார்போனை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 21,000 mAh பேட்டரி பேக் அப் உடன் வருகிறது. இதனை ஒரு முறை சார்ஜ் செய்தால் ஒரு வாரம் வரை பயன்படுத்திக் கொள்ளலாமாம். தொடர்ந்து பயன்படுத்தினால் 4 நாட்கள் வரை பேட்டரி தாங்கும் என கூறப்படுகிறது. Oukitel WP19 ஸ்மார்ட்போன் 33W...
  தொழில்நுட்ப வளர்ச்சி உச்சத்தை தொட்டுள்ள காலக்கட்டத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம். எந்தளவுக்கு தொழில்நுட்பத்தால் நல்லது நடக்கிறதோ அதே அளவில் பிரச்சனைகளும் ஏற்படுகிறது. குறிப்பாக குறிப்பாக மின்னஞ்சல் மூலமாக நடந்தப்படும் ஓன்லைன் மோசடிகள் அதிகரித்துள்ளன. எடுத்துக்காட்டுக்கு அதிகம் நடக்கும் ஒரு மோசடியை காண்போம். ஒரு குறிப்பிட்ட யூஸருக்கு அவரது Gmail, Yahoo, Outlook ஆகிய ஏதாவது ஒரு தளத்தில் இருந்து மெயில் ஒன்று அனுப்பப்படும், அதில் DHL மூலமாக உங்களுக்கு ஒரு டெலிவரி வந்துள்ளதாகவும்,...
  5ஜி தொழிநுட்ப சேவைகளுக்காக காத்து இருக்கும் இந்திய மக்களுக்கு மகிழ்ச்சி தரும் விதமாக, இந்தியாவில் இந்த ஆண்டு ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்கள் முதல் 5ஜி இணைய சேவைகள் தொடங்கும் என தொலைத்தொடர்பு அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் சனிக்கிழமை தெரிவித்தார். இந்த புதிய சேவை அறிமுகத்தால் இந்தியாவில் டேட்டாகளின் விலை பிற உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் குறைவாக இருக்கும், மேலும் 5ஜி சேவைகளை வரிசைப்படுத்துதல் வரும் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர்...
  ஆப்பிளின் முதல் ஐபோன் தொடர்பிலான ஒரு ரகசியம் 15 ஆண்டுகளுக்கு பின்னர் கசிந்துள்ளது. ஸ்டீவ் ஜாப்ஸ் ஆப்பிள் நிறுவனத்தின் ஒரிஜினல் ஐபோனை கடந்த 2007-ம் ஆண்டு வெளியிட்டார். அது வெளியாகி கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் ஆகிறது. அந்த சாதனம் தான் நவீன ஸ்மார்ட்போன் கான்செப்டின் துவக்கமாக இருந்தது என்றே கூறலாம். ஒரிஜினல் ஐபோன் ஒரு புரட்சிகரமான சாதனமாக இருந்தாலும், அதில் கட், காபி, பேஸ்ட் செய்யும் அம்சம் இடம்பெறவில்லை. ஆப்பிளின் முதல்...
  ஒப்போ நிறுவனம் அதன் ரெனோ 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை கடந்த மாதம் சீனாவில் அறிமுகப்படுத்தியது. இந்த 8 சீரிஸில் வெண்ணிலா ரெனோ 8, ரெனோ 8 ப்ரோ மற்றும் ரெனோ 8 ப்ரோ பிளஸ் ஆகிய மொடல்களை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் இந்த மாதம் இந்தியாவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதுகுறித்து எந்தவித அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. சமீபத்திய தகவல் படி ரெனோ 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் வருகிற...
  அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதிக்கு வழங்கப்படும் அனுமதி தொடர்பில் வர்த்தகத்துறை அமைச்சு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி அரிசி, சீனி, பருப்பு, பால்மா உட்பட 10 அத்தியாவசிய பொருட்களை திறந்த கணக்குகள் மூலம் எதிர்வரும் மாதம் முதலாம் திகதி முதல் இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொருட்களுக்கு தட்டுப்பாடு இதேவேளை ஏற்கனவே, அனைத்து அத்தியாவசிய உணவுப் பொருட்களையும் போதுமான அளவு கையிருப்பில் வைத்திருக்குமாறும் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாதவாறு பார்த்துக்கொள்ளுமாறும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அதிகாரிகளுக்கு...