இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணியில் ரிஷப் பண்ட்க்கு தொடர்ந்து ஆதரவு வழங்குவோம் என்று தற்காலிக பயிற்சியாளர் விவிஎஸ் லக்ஷ்மன் கூறியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் உச்சம் தொட்டுள்ள ரிஷப் பண்ட், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய மண்களில் சதம் விளாசி பெரிய சாதனை படைத்திருக்கிறார். எனினும் ரிஷப் பண்டால் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஏற்படுத்திய தாக்கத்தை, ஒருநாள் மற்றும் டி20 போட்டியில் ஏற்படுத்த முடியவில்லை. நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் ரிஷப் பண்ட்...
ஆஸ்திரேலியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெர்த் மைதானத்தில் நேற்று தொடங்கியது. முதலில் ஆடிய ஆஸ்திரேலியா நேற்றைய முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 293 ரன் எடுத்து இருந்தது. தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா 65 ரன் எடுத்தார். 3-வது வீரராக களம் இறங்கிய மார்னஸ் லபுஸ்சேன் சதம் அடித்தார். அவர் 154 ரன்னும், ஸ்டீவ் சுமித் 59 ரன்னும் எடுத்து...
உலக கோப்பை கால்பந்து போட்டியில் இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு 'சி' பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள மெக்சிகோ-ஆசியாவில் உள்ள சவுதி அரேபியா அணிகள் மோதின. 2-வது சுற்று வாய்ப்பை பெற கட்டாயம் வெற்றி என்ற நிலையில் இரு அணிகளும் விளையாடின. ஆக்ரோஷத்துடன் ஆடியதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருந்தது. முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்க கடுமையாக போராடின. ஆனால்...
தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தின் வெற்றியால் இந்தியா முழுவதும் அறியப்பட்ட விஜய் தேவரகொண்டா, பான் இந்தியா கதாநாயகனாக உயர்ந்தார். அவர் தெலுங்கில் நடித்த படங்களை அனைத்து மொழிகளிலும் வெளியிடுகின்றனர். தமிழில் நோட்டா என்ற படத்தில் நடித்து இருக்கிறார். சமீபத்தில் வெளியான அவரது லைகர் திரைப்படம் தோல்வி அடைந்தது. பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்த லைகர் படம் கடந்த ஆகஸ்ட் மாதம் 25-ந் திகதி ரிலீசானது. இப்படத்தை பூரி ஜெகன்நாத்...
மேயாத மான், பெண்குயின், பபூன், 777 சார்லி உள்ளிட்ட பல வெற்றி படங்களை தயாரித்த ஸ்டோன் பென்ச் நிறுவனம் தற்போது விஜய் சேதுபதி நடிப்பில் 'டி.எஸ்.பி' என்ற படத்தை தயாரித்துள்ளது. விஜய் சேதுபதி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள இப்படத்தை வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், சீமராஜா உள்ளிட்ட பல படங்களை இயக்கிய பொன்ராம் இயக்கியுள்ளார். இப்படத்தில் அனு கீர்த்தி கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தின் போஸ்டர் மற்றும் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல...
இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் நடிகர் வடிவேலு கதையின் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'நாய் சேகர் ரிட்டன்ஸ்'. இந்த படத்தில் 'குக் வித் கோமாளி' புகழ் சிவாங்கி, ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ், விக்னேஷ்காந்த், லொள்ளு சபா சேஷு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். லைகா புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஸ்கரன் தயாரிக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.   நாய் சேகர் ரிட்டன்ஸ் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது பின்னணி...
கன்னடம், தமிழ், தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகையாக இருந்தவர் ரம்யா என்கிற திவ்ய ஸ்பந்தனா. 'சான்டல்வுட் குயின்' என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்ட ரம்யா, திரைத்துறையில் இருந்து ஒதுங்கினார். பின்னர் காங்கிரஸ் சார்பில் மண்டியா தொகுதி நாடாளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு எம்.பி.யாக தேர்வானார். தற்போது அவர் அரசியலில் இருந்தும் ஒதுங்கி உள்ளார். திரைத்துறைக்கு ரம்யா மீண்டும் மறுபிரவேசம் செய்து உள்ளார். ரம்யா 'உத்தர கன்னடா' என்ற படத்தில் அவர் நடித்து...
ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தலைவர் அபு ஹசன் அல்-ஹாஷிமி அல்-குராஷி, போரில் கொல்லப்பட்டதாக அந்த அமைப்பு இன்று அறிவித்துள்ளது. ஈராக்கைச் சேர்ந்த ஹாஷிமி, கடவுளின் எதிரிகளுடன் நடந்த போரில் கொல்லப்பட்டதாக அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் கூறியிருக்கிறார். இது தொடர்பாக ஆடியோ செய்தி வெளியாகி உள்ளது. ஆனால் அவர் எப்போது இறந்தார்? எப்படி இறந்தார்? என்பது குறித்து எந்த விவரத்தையும் செய்தித் தொடர்பாளர் அந்த ஆடியோவில் வெளியிடவில்லை. அதேசமயம், ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் புதிய...
பெய்ஜிங், இந்தியா-அமெரிக்காவின் கூட்டு ராணுவ பயிற்சியின் 18வது பதிப்பு தற்போது உத்தரகாண்ட் மாநிலத்தில், சீன எல்லையில் இருந்து 100 கிமீ தொலைவில் நடைபெற்று வருகிறது. பேரிடர் நிவாரண நடவடிக்கைகளில் இரு படையினரும் இணைந்து பணியாற்றுவதை மேம்படுத்துதல், போர் நிபுணத்துவத்தை பகிர்ந்து கொள்வது உள்ளிட்டவையை நோக்கமாக கொண்டு இந்த கூட்டு பயிற்சி நடைபெறுகிறது. இதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பெய்ஜிங்கில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர்...
ஆப்கானிஸ்தானின் வடக்கு பகுதியில் உள்ள மதரசா பள்ளி ஒன்றில் வெடிகுண்டு வெடித்ததில் குறைந்தது 10 மாணவர்கள் கொல்லப்பட்டதாக தலிபான் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். சமங்கன் மாகாணத்தின் தலைநகரான அய்பக்கில் உள்ள அல் ஜிஹாத் மதரசா பள்ளியில் பிற்பகல் நடைபெற்ற தொழுகையின் போது குண்டு வெடிப்புச் சம்பவம் நடைபெற்றதாக அப்பகுதி நகரவாசி ஒருவர் கூறியுள்ளார். அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களில் பெரும்பாலானோர் சிறுவர்கள். குண்டு வெடிப்பு தொடர்பாக தலிபான்களால் ஊடகங்களுக்கு விநியோகிக்கப்பட்ட வீடியோ...