கல்முனை பொதுச் சந்தைக்கு அருகில் நீண்ட நாட்களாக தேங்கியுள்ள நீர் ; வடிகான் உடைந்து நடுவே விழுந்து இடைமறித்து காணப்படும் பாரிய சுவர் துண்டு – சீர் செய்யுமாறு கோரும் பொது மக்கள் ..!
Thinappuyal News -0
(நூருள் ஹுதா உமர், எம்.என்.எம். அப்ராஸ்)
கல்முனை மாநகர பொதுச் சந்தைக்கு அருகில் உள்ள வடிகான் துப்புரவு இன்றியும் வடிகானின் ஒரு பகுதி உடைந்தும், வடிகானின் இடைநடுவே பாரியளவிலான சுவர் துண்டு உள்ளதுடன் நீண்ட நாட்களாக நீர் ஓடாமல் தேங்கி காணப்படுகின்றமையினால் இடைக்கிடையே துர்நாற்றம் வீசுவதுடன் இதனால் வீதியினால் பயணிப்போர், அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து சந்தைக்கு வருகின்ற பொதுமக்கள் இதனால் சிரமத்தை எதிர்நோக்குவதாக தெரிவிக்கின்றனர் .
நாளாந்தம்...
ஆசிரியர் விடுமுறை தொடர்பிலான சுற்றுநிரூபம் கோரி இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் அவசரக் கடிதம் !
Thinappuyal News -
நூருல் ஹுதா உமர்
ஆசிரியர் விடுமுறை மற்றும் கைவிரல் அடையாள இயந்திரத்தின் பயன்பாடு தொடர்பில் சுற்று நிரூபம் ஒன்றினை நடைமுறைப்படுத்தி அதிபர்களுக்கு அறிவுறுத்துமாறு கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளருக்கு இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது
இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஜெஸ்மி எம்.மூஸா பெக்ஸ் மூலம் அவசரக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில் ஆசிரியர் தொடர்பாகப் பல்வேறு பிரச்சினைகள் முன்வைக்கப்படுகின்ற...
பெஸ்ட் ஒப் யங் அமைப்பினால் அல் மஸ்லம் வித்தியாலய மாணவர்களுக்கு கற்றல் ஏடுகள் வழங்கி வைப்பு !!
Thinappuyal News -
நூருல் ஹுதா உமர்
அம்பாறை மாவட்ட அரச சார்பற்ற நிறுவனமான நிந்தவூர் பெஸ்ட் ஒப் யங் சமூக சேவைகள் அமைப்பு "மாணவர் மகிமை" எனும் வேலைத்திட்டத்தின் கீழ் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் ஏடுகள் கையளிக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக பாதிக்கப்படும் மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்கு கரம் கொடுக்கும் வகையில் பெஸ்ட் ஒப் யங் அமைப்பின் மூலம் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த கற்றல் ஏடுகள் வழங்கும்...
உத்தியோகத்தர்கள் தேவைக்கேற்ப மின்சாரப் பவனை மற்றும் ஏனைய பாவனைகளை மிக சிக்கனமாக பயன்படுத்தவும் – மாகாண ஆணையாளர் வேண்டுகோள்
Thinappuyal News -
பைஷல் இஸ்மாயில் –
கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களுடனான கலந்துரையாடல் இன்று காலை மாகாண ஆணையாளர் வைத்திய கலாநிதி (திருமதி) இ.ஸ்ரீதர் தலைமையில் சுதேச மருத்துவத் திணைக்கள கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில், சுதேச மருத்துவத் திணைக்கள திட்டமிடல் பிரிவு வைத்தியர் எஸ்.சதீஸ், கணக்காளர், நிருவாக உத்தியோகத்தர் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
நாட்டில் தற்போது நிலவுகின்ற எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின்...
நூருல் ஹுதா உமர்
சிறந்த ஆளுமையுடையவர்களை கௌரவிக்கும் நோக்கில், ஸ்கை தமிழ் ஊடக வலையமைப்பு மற்றும் துணிந்தெழுவினால் 2022ஆம் ஆண்டிற்கான துணிந்தெழு எனும் விருது தெரிவு செய்யப்பட்ட ஆளுமையுடையவர்களுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் இந்தியாவில் மட்டுமன்றி வெளிநாடுகளிலும் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தனக்கென தனித்துவமான இடத்தைப் பிடித்து தன் நடிப்பு திறமையால் உலகை திரும்பிப் பார்க்கச் செய்த தென்னிந்தியாவில் பிறந்து தொழில் நிமிர்த்தம் கத்தார் சென்று தனது...
எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு அருகில் வாள்வெட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த வாள்வெட்டு சம்பவத்தில் காயமடைந்த 4 பேர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
சம்பவம்
இந்த சம்பவம் வெல்லவாய எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு அருகில் நேற்றிரவு(24) இடம்பெற்றுள்ளது.
வாள்வெட்டுக் காயங்களுக்கு இலக்கான நால்வரே வெல்லவாய ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
பொலிஸ் விசாரணை
மேலும், சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் ஒருவர் மொனராகலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
தாக்குதல் நடத்திய நபர் தப்பி சென்றுள்ள நிலையில், வெல்லவாய பொலிஸார்...
ஹட்டன் பிரதான வீதியை மறித்து பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
கடந்த சில நாட்களாக மண்ணெண்ணெய் வழங்கப்படவில்லை எனத் தெரிவித்தே குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்று வருகின்றது.
ஹட்டன் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கும் விநாயகர் கோவிலுக்கும் இடைப்பட்ட பகுதியிலேயே குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்று வருகின்றது.
எரிபொருள் நிலையம் முற்றுகை
அத்துடன் அப்பகுதியிலுள்ள எரிபொருள் நிலையமொன்றும் மக்களால் முற்றுகையிடப்பட்டுள்ளது.
1000க்கும் மேற்பட்ட பெருந்திரளான மக்கள் குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாங்கள் இருக்கும் ஃபார்மிற்கு இந்தியா மட்டுமல்ல, எந்த அணியும் நிகரில்லை! பாகிஸ்தான் முன்னாள் வீரர்
Thinappuyal News -
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தற்போது வலுவாக இருப்பதால், எந்த அணியையும் அதனுடன் ஒப்பிட முடியாது என முன்னாள் வீரர் லத்தீப் கூறியுள்ளார்.
டி20 கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணி முதலிடத்திலும், பாகிஸ்தான் அணி 3வது இடத்திலும் உள்ளன. ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் பாகிஸ்தான் அணி 3வது இடத்தில் உள்ள நிலையில், இந்திய அணி 4வது இடத்தில் உள்ளது.
இந்த இரு அணிகளும் ஆசிய கோப்பை பலப்பரீட்சை நடத்த உள்ளன. அதேபோல் டி20...
இங்கிலாந்தின் அதிரடி துடுப்பாட்ட வீரர் ஜோஸ் பட்லர் ஒரு தொடரில் அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
நெதர்லாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணி முழுவதுமாக வென்றது.
கடைசி போட்டியில் அதிரடியில் மிரட்டிய இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லர், 64 பந்துகளில் 5 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 86 ஓட்டங்கள் விளாசினார்.
இரண்டாவது ஒருநாள் போட்டியில் களமிறங்காத பட்லர், முதல் போட்டியில் 14 சிக்ஸர்கள் விளாசியிருந்தார். இதன்மூலம்...
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 160 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
இலங்கை அணி 3-1 என்ற கணக்கில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றிய நிலையில், இன்று கடைசி ஒருநாள் போட்டியில் விளையாடி வருகிறது.
முதலில் ஆடிய இலங்கை அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. குசால் மெண்டிஸ் 26 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்த நிலையில், ஏனைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் வெளியேறினர்.
ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தபோது, மறுமுனையில் சமிகா...