சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு இன்று (10) மூதூர் பிரதேச செயலகத்தின் முன் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றும் மகஜர் கையளிப்பும் இடம்பெற்றது. மூதூரிலுள்ள சம்பூர் கங்குவேலி படுகாடு காணிகளுக்கான ஆவணங்களை வழங்கக்கோரி குறித்த ஆர்ப்பாட்டம்  இடம்பெற்றது. இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை ஜனநாயக மக்கள் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டது. இதன் போது திருகோணமலை மாவட்டத்தில் இராணுவம் ஆக்கிரமித்துள்ள காணிகள் அனைத்தையும் உடனடியாக பொது மக்களிடம் கையளிக்க அரசாங்கம் நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும்...
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கிடையிலான சந்திப்பொன்று இன்று இடம்பெறவுள்ளது. இந்த சந்தப்பில் கலந்துகொள்வதற்கு முன்பாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து செயற்படும் கட்சித் தலைவர்கள் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேச்சுவார்த்தை ஒன்றினை மேற்கொண்டுள்ளனர். அத்துடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவான கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷவுக்குமிடையே சந்திப்பொன்று நேற்று இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.
ரஜினி ரசிகர்கள் உலகம் முழுவதும் உள்ளனர். அதுவும் இன்று நடந்த பேட்ட வெளியீட்டு விழாவில் ரசிகர்கள் அரங்கத்தை அதிரும் அளவுக்கு ரசிகர்களின் சத்தம் இருந்தது. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்துடன் போட்டோ எடுக்கும் வாய்ப்பு அவ்வளவு எளிதில் கிடைக்காது என்பதால் பேட்ட இசை வெளியீட்டு விழாவில் அவர் அமர்ந்த சீட்டுடன் போட்டோ எடுத்துள்ளனர். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. https://twitter.com/thamizhur/status/1071818881558167552
பேட்டை சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு விருந்தாக பொங்கலுக்கு திரைக்கு வரவுள்ளது. இப்படத்தை எதிர்நோக்கி இந்திய திரையுலகமே காத்திருக்கின்றது. இந்நிலையில் பேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று பிரமாண்டமாக நடந்து முடிந்தது, இதில் விஜய் சேதுபதி நான் தான் வில்லன் என்று கூறிவிட்டார். இதில் ரஜினிகாந்தை ஏன் விஜய் சேதுபதி எதிர்க்கின்றார் என்று குறும்புக்கார ரசிகர் ஒருவர் 96 படத்தின் த்ரிஷாவையும், பேட்ட த்ரிஷாவையும் ஒப்பிட்டு செம்ம கலாய் கலாய்த்துள்ளார், அந்த...
சன் என்ற பெரிய தொலைக்காட்சியில் கடந்த பல வருடங்களாக குறிப்பிட்ட நேரத்தில் சீரியல்களாக நடித்து வருகிறார் ராதிகா சரத்குமார். தன்னுடைய ராடான் நிறுவனம் மூலம் இதுவரை பல சீரியல் தயாரித்து நடித்து வருகிறார். கடைசியாக இவர் நடித்த வாணி ராணி சீரியல் முடிவுக்கு வந்தது. உடனே அடுத்த சீரியலுக்கு தயாராகிவிட்டார் ராதிகா. சந்திரமுகி என்ற பெயரில் புதிய சீரியலில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த சீரியலுக்கான புரொமோக்கள் கடந்த சில நாட்களாக...
வட மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால்  ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் ஜனவரி மாதம் 31 ஆம் திகதி வரை மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் தீர்ப்பு இன்றைய தினம் மேன்முறையீட்டு நீதிமன்றினால் இன்று வழங்கப்படவிருந்த நிலையிலேயே வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் டெஸ்ட் தொடரில் இந்திய அணி 31 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. கடந்த 07 ஆம் திகதி அடிலெய்டில் ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதல் இன்னங்ஸுக்காக அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 250 ஓட்டங்களை குவித்தது. இதன் பின்னர் தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த அவுஸ்திரேலிய அணி 235 ஓட்டங்களுக்குள் சுருண்டது. 15 ஓட்டங்கள் என்ற முன்னிலையுடன் தனது இரண்டாவது...
2018 ஆம் ஆண்டுக்கான உலக அழகிப் போட்டி (மிஸ் வேர்ல்ட்) சீனாவில் நடைபெற்றது. இதில் இவ்வாண்டுக்கான உலக அழகிப் பட்டத்தை மெக்ஸிகோவைச் சேர்ந்த வனிசா போன்ஸ் டி லியோன் பெற்றுள்ளார். இதன்போது கடந்தாண்டு உலக அழகி பட்டத்தை வென்ற இந்தியாவை சேர்ந்த மனுஷி சில்லர் வனிசாவுக்கு உலக அழகி கிரீடத்தை சூட்டினார்.
சவுதி ஊடகவியலாளர் ஜமால் கசோக்கியின் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களை நாடு கடத்துமாறு துருக்கிய அரசாங்கம் விடுத்த கோரிக்கையினை சவுதி அரேபியா நிராகரித்துள்ளது. ஜமால் கசோக்கியின் கொலையுடன் தொடர்புடைய 11 நபர்களை நாடு கடத்துமாறு துருக்கிய ஜனாதிபதி சவுதி அரேபியாவிடம் கோரிக்கை விடுத்திருந்தார். இந் நிலையில் தமது நாட்டின் பிரஜைகளை நாடு கடத்துவதில்லை என தெரிவித்து சவுதி அரேபிய வெளிவிவகார அமைச்சர் அந்த கோரிக்கையை மறுத்துள்ளார். அத்துடன் சந்தேக நபர்களை கைதுசெய்வதற்கான பிடியாணையை...