முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று (திங்கட்கிழமை) கொழும்பு பிரதான நீதவான் ரங்க திஸாநாயக்க முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட இருந்த நிலையில், அவர் நீதிமன்றிற்குச் சமூகமளித்திருக்கவில்லை. இதனால் குறித்த வழக்கை எதிர்வரும் நவம்பர் மாதம் 5 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்குமாறு பதில் நீதவான் பிரியந்த லியனகே உத்தரவிட்டுள்ளார். பிணைமுறி ஆணைக்குழுவின் முன்னிலையில் முன்னாள் நிதி அமைச்சர்...
தேசியத் தலைவரால் பெற்றுதர முடியாத ஈழத்தையோ எந்த உரிமையையோ  சம்பந்தனாலோ விக்னேஸ்வரனாலோ வேறு எந்த தலைவராலுமே தமிழ் மக்களுக்கு பெற்றுக்கொடுக்க முடியாது என தமிழர் விடுதலை கூட்டணியின் சிரேஷ்ட உபதலைவரும் மட்டும் மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஞானமுத்து கிருஷ்ணப்பிள்ளை தெரிவித்தார். தமிழர்களும் முஸ்லிம்களும் இந்நாட்டின் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் என்றே பெரும்பான்மையினர் கருதுகின்றனர். அவ்வாறு இருக்கையில் இனங்கள், மதங்களுக்கிடையிலான முரண்பாடுகளை ஏற்படுத்துவோர் அரசியலில் இருந்து விடுபட வேண்டும். முரண்பாடுகள்...
சிறுபான்மையின மக்களுக்கு எதுவுமே செய்யவில்லை என எம் மீது குற்றம் சுமத்தும் அரசாங்கம் இன்று அந்த மக்களின் அபிவிருத்தி மற்றும் ஜனநாயக உரிமைகள் என அனைத்தையும் சீரழித்துள்ளதாக குற்றம் சுமத்தியுள்ள முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ , அன்று மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக போலியான பிரசாரங்கள் தமிழ் - முஸ்லிம் மக்கள் மத்தியில் பரப்பப்பட்டதாகவும் தெரிவித்தார். இலங்கையில் போர் நடைபெற்ற காலப்பகுதியிலும் கூட ஐ.நா அமைதி காக்கும் படைக்கு...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமை என்பது தென்னிலங்கை அரசியலுக்கு பாரிய சவாலாக இருக்கிறது என்பதே உண்மையான விடயமாகும். அரசியல் நீரோட்டத்திற்காக தமிழீழ விடுதலைப்புலிகளால் திட்டமிட்ட வகையில் தேசியத் தலைவர் பிரபாகரனின் நெறிப்படுத்தலிலும், ஊடகவியலாளர் சிவராம் அவர்களின் ஆலோசனையினாலும் உருவாக்கப்பட்ட இந்தத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஏதோவொரு வகையில் இல்லாதொழித்துவிட்டால் விடுதலைப்புலிகளது போராட்டத்திற்கும், அரசியல் முன்னெடுப்பிற்கும் தொடர்புகள் அற்றுப்போகும் ஒரு நிலைமை உருவாக்கப்பட்டு, விடுதலைப்புலிகளது அமைப்பு பயங்கரவாத அமைப்பு என...
கொழும்பின் இருவேறு பகுதிகளில் நேற்று 268 கிராமுக்கும் அதிகமான நிறையுடைய ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது. மட்டக்குளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேவாலயம் ஒன்றுக்கருகில் வைத்து வெள்ளவத்தை ஊழல் தடுப்பு பிரிவு பொலிஸாரால் இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டார். இதன்போது மட்டக்குளியைச் சேர்ந்த 26 வயதுடைய லியனதுரு லக்மால் தில்ருக்ஷ என்பவரே இவ்வாறு 250 கிராம் 560 மில்லிகிராம் நிறையுடைய ஹெரோயினுடன் கைதுசெய்யப்பட்டார். நேற்று  கைது செய்யப்பட்ட இவர் மேலதிக...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ‘எழுச்சிபெறும் பொலன்னறுவை’ அபிவிருத்தி திட்டத்தின்கீழ் பொலன்னறுவை, தம்பாளை குடிநீர் வழங்கல் திட்டத்தின் பூர்வாங்க வேலைகளை ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் மற்றும் மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபா ஆகியோர் நேற்று அல்ஹிலால் புரத்தில் ஆரம்பித்து வைத்தனர். 270 மில்லியன் ரூபா செலவில் ஆரம்பிக்கப்படும் இத்திட்டத்தின் மூலம் தம்பாளை, வெவேதென்ன, ரிபாய்புரம், அல்ஹிலால் புரம், சேவாகம, லங்காபுர...
நாட்டிற்கு அந்நிய செலாவணியை ஈட்டித்தரும் பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினையை உடனடியாக தீர்த்து வைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென வடக்கு மாகாணசபை உறுப்பினர் வைத்தியர்.ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள விவகாரம் தொடர்பில் இன்று (திங்கட்கிழமை) ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது- “நாட்டில் அந்நியரின் ஆட்சி நிலவிய காலத்தில் தேயிலை செய்கையை நாட்டில் மேற்கொள்வதற்காக மலைநாட்டுப் பகுதிகளுக்கு இந்தியாவிலிருந்து அழைத்து வரப்பட்ட...
வவுனியா வளாகத்தை வன்னிப்பல்கலைக்கழகமாக மாற்றுவதற்கு அரசியல் ரீதியான உயர் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் கே.கே.மஸ்தான் தெரிவித்துள்ளார். வவுனியா வளாகத்தை வன்னிப்பல்கலைக்கழகமாக மாற்றுவது தொடர்பில் வவுனியா வளாக முதல்வர் கலாநிதி ரி.மங்களேஸ்வரன் தலைமையில் பொது அமைப்புக்கள், கல்விமான்கள் உடனான கலந்துரையாடல் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) இம்பெற்றது. இந்த கலந்துரையாடலின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “வவுனியா வளாகத்தை வன்னிப்பல்கலைக்கழகமாக...
2019 ஆம் ஆண்டு முதல் அரிசிக்குக்  கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க,  விவசாய அமைச்சு முடிவு செய்துள்ளது. சந்தையில் அரிசிக்கு நிலையான விலையைப்  பேணும் நோக்கத்துடனேயே, இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அரிசிக்கு சந்தையில் தற்போது இருக்கின்ற விலையை விட,  10 ரூபாவைக்  குறைக்க ஆலை உரிமையாளர்கள் ஒப்புக் கொண்டுள்ளதாக, விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இதற்கிடையில், அடுத்த மாதம் முதல் "பி.எம்.பீ.  அரிசி" என்ற அரிசி வகையை விற்பனை செய்ய,...
பர்முயுலா-1 கார்பந்தயத்தில் அமெரிக்கன் கிராண்ட் பிரிக்ஸ் சுற்றில், பெர்ராரி அணியின் வீரரான கிமி ரெய்க்கோனன், முதலிடம் பெற்றுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் ‘பார்முலா-1’ கார் பந்தயம், 21 சுற்றுகளாக நடைபெறும். ஒவ்வொரு சுற்றும் ஒவ்வொரு நாடுகளில் நடைபெறும். இதன்படி, நடப்பு ஆண்டின் 18ஆவது சுற்றான அமெரிக்கன் கிராண்ட் பிரிக்ஸ் சுற்று, நேற்று அமெரிக்காஸ் ஓடுதளத்தில் நடைபெற்றது. இதில் 308.728 கிலோ மீட்டர் பந்தய தூரத்தை நோக்கி, 10 அணிகளை சேர்ந்த 20 வீரர்கள் காரில்...