கர்ப்பிணி ஆசிரியைகளுக்கு புதிய உடை கல்வி அமைச்சில் அறிமுகம் செய்யபட்டது. இந் அறிமுகமும் அதற்கான சுற்று நிருபமும் வெளியிடும் நிகழ்வு இன்று கல்வி அமைச்சில் நடைபெற்றது. இந் நிகழ்வினை கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் அதிதிகளாக கலந்துக் கொண்டு ஆரம்பித்து வைத்தனர். இவர்களுடன் கல்வி அமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டியாராச்சி¸ வைத்தியர்கள்¸ பல்கலைகழக விரிவுரையாளர்கள். அமைச்சின் மேலதிக செயலாளர்கள்¸ அதிகாரிகள் ஆகியோர் கலந்து...
தமிழகம், தூத்துக்குடியில்  சூழலை மாசுபடுத்தும் வகையில் செயற்பட்டுவந்த வேதந்ரா ஸ்ரெர்லயிட்  (Vedanta Sterlite)  நிறுவனத்தின் தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் கழிவுகளால் சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவதனை சுட்டிக்காட்டி அந்த ஆலையை மூடுமாறுகோரி அமைதிவழியில் போராடி வந்த தமிழக மக்கள் மீது கடந்த 22.05.2018 அன்று  காவற்துறையினர்  துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளனர். குறிப்பாக இப்போராட்டங்களை ஒழுங்கு செய்த போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மீது காவற்துறையினர் குறிசூட்டுத்தாக்குதல் நடத்தியதன் மூலம் பன்னிரண்டுபேர் கொல்லப்பட்டுள்ளதுடன், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். ஜனநாயக வழியிலான போராட்டத்தை...
சரியான நோக்கத்தில் சரியான தொழில் விருத்திக்காக நுண்கடன்களைப் பயன்படுத்திக் கொண்டால் அதனை ஒரு அடிப்படையாக வைத்து முன்னேற்றம் காண முடியும் என மண்முனைப் பற்று பிரதேச செயலாளர் என். சத்தியானந்தி  தெரிவித்தார். மண்முனைப் பற்று பிரதேச சபைக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற சாதாரண தரப் பரீட்சையில் புலமை காட்டி, உயர் தரத்தில் கற்றுக் கொண்டிருக்கின்ற மாணவர்களுக்கு மாதாந்த ஊக்குவிப்பு உதவு  தொகை  வழங்கும் நிகழ்வில் அவர் பிரதம அதிதியாகக் கலந்து...
வவுனியா ஏ9 வீதியில் புட்சிட்டிக்கு எதிராக அமைந்துள்ள ஆடை விற்பனை நிலையம் இரவு ( 24.05.2018) இரவு 10.00 மணியளில் திடிரேன ஏற்பட்ட தீ காரணமாக தீப்பற்றிக்கொண்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த இலங்கை மின்சார சபையினர் மின்சாரத்தினை துண்டித்தும், வவுனியா நகரசபை தீயனைப்பு படையினரின் உதவியுடன், வவுனியா பொலிஸாரும் இணைந்து தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். . . இத்தீ விபத்துக்கு மின் ஒழுக்கே காரணம் என முதற்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருகிறது,...
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனுஷ்டித்த வங்கி (HNB) ஊழியர் இடைநிறுத்தப்பட்ட விவகாரத்தில் அரசியல்வாதிகள் தலையிட்டு இந்த ஊழியருக்கு உதவி வழங்கவேண்டும் - இல்லையேல் தமிழ் மக்கள் வங்கியின் செயற்பாட்டை முடக்க அரசியல் தலைமைகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட ஈழத்தமிழர்களை நினைவு கூர்ந்து சுடர் ஏற்றிய தனியார் வங்கியின் உதவி முகாமையாளரும் ஓர் ஊழியரும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.   கிளிநொச்சியிலுள்ள தனியார் வங்கியில், கடந்த 18 ஆம் திகதி அதிகாரிகளும் ஊழியர்களும் ஒன்று...
கொட்டும் மழையிலும் மாணவர்கள், பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம். வவுனியா பாவற்குளம் கணேஸ்வரா வித்தியாலய பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர் இன்று கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வவுனியா பாவற்குளம் கணேஸ்வரா வித்தியாலயத்தில் கடமையாற்றிய அதிபர் கடந்த டிசம்பர் மாதத்துடன் இடமாற்றம் பெற்று சென்றிருந்தார். அதன் பின்னர் கடந்த ஐந்து மாதங்களாக இப்பாடசாலை அதிபர் இன்றியே இயங்கி வந்திருந்தது. அத்தோடு பாடசாலை அதிபர் இன்றியே  மெய்வல்லுனர் போட்டியும் நடைபெற்றிருந்தது. இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்த  வவுனியா...
. செயற்கை நுண்ணறிவு நிரல்களில் மனிதர் களை இன ரீதியில் வேறு படுத்திப் பார்க்கும் தன்மை வந்து விடாமல் தடுக்க வேண்டும் என, மனித உரிமையின் மீது அக்கறையுள்ள பல அமைப்புகள் 'டொரன்டோ பிரகடனம்' மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளன. இப்போதே செயற்கை நுண்ணறிவு நிரல்களை பயன்படுத்தி, அரசுகளும், தனியார் பெரு நிறுவனங்களும் பல முடிவுகளை எடுக்க ஆரம்பித்துள்ளன. எனவே தான் இந்த முன்னெச்சரிக்கை என, அந்த அமைப்புகள் தெரிவித்துள்ளன. செயற்கை நுண்ணறிவு செயல்படுவது...
சிகரெட் புகைத்த பின் எறியப்படும், பஞ்சுடன் கூடிய கழிவு துண்டுகளை ரோடு போட பயன்படுத்த முடியுமாம். ரோடு போட‘பாராபின் வேக்ஸ்’ எனப்படும் மெழுகு மற்றும் ரசாயன பொருளுடன் சிகரெட் கழிவு துண்டுகளும் சேர்த்து ஒரு கலவை தயாரிக்கப்படுகிறது. இதை கொண்டு போடப்படும் ரோடு பலம் வாய்ந்ததாகவும்,  அந்த ரோட்டில் வெப்பம் அதிகம் வெளியேறுவதும் தடுக்கப்படுமாம்.
. 1) ஸ்ட்ராபெர்ரி : உடலில் போதிய அயோடின் இல்லாவிட்டால், தைராய்டு சுரப்பியினால் எதையும் சரியாக செய்ய முடியாது. எனவே ஸ்ட்ராபெர்ரியை அதிகம் சாப்பிட்டால், தைராய்டில் இருந்து குணமாகலாம். ஏனெனில் அதில் அயோடின் அதிக அளவில் உள்ளது. 2) காளான் : செலினியம் குறைபாடும் தைராய்டு ஏற்படுவதற்கு ஒரு முக்கிய காரணம். எனவே செலினியம் அதிகம் உள்ள காளானை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும். 3) பூண்டு : செலினியம் அதிகம் உள்ள...
நெய் ;(Ghee)  என்பது தெற்காசிய நாடுகளில் சமையலுக்குப் பயன்படும் தெளிந்த வெண்ணெய் ஆகும். பாற்பொருட்களில் கூடுதல் சுவையையும், நறுமணத்தையும் கொண்டது - நெய்;. தனியாகப் பிரித்தெடுத்த வெண்ணெய் அல்லது பாற்கொழுப்பை உருக்கும் போது நெய் உருவாகின்றது. வெண்ணெய்யை ஏறத்தாழ 100 பாகை செல்சியசு வெப்பத்தில் உருக்குகின்ற போது அதிலுள்ள நீர் ஆவியாகி, நெய் கிடைக்கின்றது. நெய்யானது அதிலுள்ள செம்மியத்தின் அடிப்படையில் வெள்ளை நிறத்திலிருந்து இளம் மஞ்சள் நிறம் வரையான நிறங்களில்...