வீடொன்றில் தனிமையில் இருந்த விஷேட தேவையுடைய 20 வயதான யுவதி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த இளைஞனை கைது செய்துள்ளதாக ஆணமடுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஆணமடுவ, தோனிகல பகுதியை சேர்ந்த 31 வயதுடைய திருமணம் ஆகத ஒருவரே இவ்வாறு கைது செய்யப்ட்டுள்ளார். குறித்த யுவதி தனது தாயுடன் வசித்து வருவதுடன் தாய் கூலி வேளைகளுக்கு செல்லும் போது அவர் தனியாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு தனிமையில் இருந்த சந்தர்க்கத்தில் சந்தேகநபர் குறித்த யுவதியை...
117 நகரங்களை சேர்ந்த சிவில் சமூக மத குருக்கள் சமாதானம் மற்றும் சமாதான எதிர்ப்பு நடவடிக்கை களைவு என்பவற்றிற்கு முற்றுமுழுதாக ஒத்துழைப்பை பரிந்துரைத்துள்ளது. தென்கொரியாவில் இடம்பெற்ற சமாதான ஒலிம்பிக்கை தொடர்ந்து வட கொரியா - அமெரிக்க பேச்சுவார்த்தையில் எட்டப்பட்ட வரலாற்று தீர்மானத்தையிட்டு உலகளாவிய சமூகம் ஆர்வத்துடன் தமது உற்சாகத்தை தெரிவித்து வருகின்றன. சமாதான பிரகடனம் மற்றும் போர் இடைநிறுத்தம் குறித்த இரண்டாவது ஆண்டு நினைவு நிகழ்வை கொரியாவை தளமாக கொண்ட சர்வதேச...
கிளிநொச்சி நகரில் யுத்த அழிவின் சின்னமாக காட்சிப்படுத்தப்பட்டிருந்த குறித்த நீர்தாங்கியை அகற்றுவதற்கான செயற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. குறித்த பகுதியில் இருந்த நீர்தாங்கி ஒன்று 2000 ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலப்பகுதியில் வீழ்த்தப்பட்டிருந்ததுடன், புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நீர்த்தாங்கியும் இறுதி யுத்த்தின்போது வீழ்த்தப்பட்டிருந்தது. இந்நிலையில் குறித்த நீர்த்தாங்கி யுத்தம் முடிவுற்றதன் பின்னர் யுத்த ஞாபக சின்னமாக காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இதையடுத்து  தற்போது குறித்த நீர்த்தாங்கி அங்கிருந்து அகற்றப்பட்டு வருகின்றமையை அவதானிக்க முடிகின்றது.
தென்­னா­பி­ரிக்­கா­வுக்கு எதி­ரான மூன்­றா­வது டெஸ்ட் போட்­டியில் பந்தின் தன்­மையை மாற்ற துணை போன, ஸ்டீவ் ஸ்மித் அவுஸ்­தி­ரே­லிய தலைவர் பத­வி­யி­லி­ருந்து நீக்­கப்­பட்­டுள்ளார். இந்த விவகாரத்தை அடுத்து ஸ்மித் உடனடியாக பதவி விலக வேண்டும் என அவுஸ்திரேலிய அரசின் அமைப்பான அவுஸ்திரேலிய விளையாட்டு ஆணையம் வலியுறுத்தியிருந்தது. இந்த சம்பவத்தை முன்னே அறிந்து வைத்திருந்த யாராக இருந்தாலும், தலைமைக்குழு உறுப்பினர்கள் அல்லது பயிற்சி ஊழியர்களாக இருந்தாலும், ஸ்மித்துடன் சேர்ந்து அவர்களும் பதவி விலக வேண்டும்...
தெற்­கா­சிய கனிஷ்ட மெய்­வல்­லுநர் சம்­பி­யன்ஷிப் போட்­டிகள் இம்­முறை இலங்­கையில் நடத்­தப்­ப­ட­வுள்­ளன. அந்த வகையில் மூன்­றா­வது தெற்­கா­சிய கனிஷ்ட மெய்­வல்­லுநர் சம்­பி­யன்ஷிப் தொடர் எதிர்­வரும் மே மாதம் 5 மற்றும் 6ஆம் திக­தி­களில் கொழும்பு சுக­த­தாஸ விளை­யாட்­ட­ரங்கில் நடை­பெ­ற­வுள்­ள­தாக இலங்கை மெய்­வல்­லுநர் சம்­மே­ளனம் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­வித்­துள்­ளது. தெற்­கா­சிய கனிஷ்ட விளை­யாட்டுப் போட்­டிகள் கடந்த 2007ஆம் ஆண்டு முதன்­மு­த­லாக இலங்­கையில் நடத்­தப்­பட்­டன. அத­னை­ய­டுத்து இறு­தி­யாக 2013ஆம் ஆண்டு இந்­தி­யாவின் ராஞ்­சி­யிலும் நடை­பெற்­றமை குறிப்­பி­டத்­தக்­கது. இத­னை­ய­டுத்து போட்­டி­களை நடத்­து­வ­தற்­கான...
இங்கிலாந்தில் அடுத்த வருடம் நடைபெறும் 50 ஓவர் உலகக்கோப்பை தொடருக்கான தகுதிச் சுற்றுத் தொடர் ஜிம்பாப்வேயில் நடைபெற்றது. லீக் மற்றும் சூப்பர் சிக்ஸ் சுற்றுகள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் உலகக்கோப்பை தொடருக்கு தகுதிப் பெற்றன. முதல் இரண்டு இடங்களும் பிடித்த இந்த அணிகள் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் சாம்பியன் பட்டத்திற்காக பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் தேர்வு செய்தது. அதிரடி மன்னர்கள்...
தென்ஆப்பிரிக்கா – ஆஸ்திரேலியா இடையிலான 3-வது டெஸ்ட் கேப் டவுன் நியூலேண்ட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தின்போது தென்ஆப்பிரிக்கா பேட்டிங் செய்து கொண்டிருந்தது. அப்போது பீல்டிங் செய்து கொண்டிருந்த ஆஸ்திரேலியா தொடக்க பேட்ஸ்மேன் பான்கிராப்ட், பையில் இருந்து ஒரு பொருளை எடுத்து பந்தின் மீது தேய்த்தார். இது கேமராவில் தெளிவாக தெரிந்தது. இதுகுறித்து நடுவர் அழைத்து பானிகிராப்ட் இடம் விசாரித்தார். நடுவர் அழைத்ததும் அந்த பொருளை...
திருமணம் ஆன பிறகும் கூட நமீதா தன்னுடைய கவர்ச்சியை மட்டும் விடவில்லை என்பதை இந்த புகைப்படம் உணர்த்தியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகள் ஒருவராக இருந்தவர் நமீதா. ஒரு சில படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் பிரபல கவர்ச்சி நடிகையாக வலம் வந்தார். அதன் பின்னர் சினிமா வாய்ப்பு இல்லாததால் நடிப்பிற்கு முழுக்கு போட்டார். பின்னர், கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து...
தெஹிவளை – கல்கிஸ்சை மாநகர சபையின் புதிய மேயராக,  பொதுஜன பெரமுனவின் நாவலகே ஸ்டேன்லி டயஸ் வாக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்த வாக்கெடுப்பில்  பொதுஜன பெரமுனவின் நாவலகே ஸ்டேன்லி டயஸூக்கு ஆதரவாக 23 வாக்குகளும் ஐக்கிய தேசிய கட்சியின் சுனேத்ரா ரணசிங்கவுக்கு 21 வாக்குகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 5ம் திகதி நடத்தப்படவுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் தற்போது பொறுப்பேற்கப்படுகின்றன என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பி.சனத் பூஜித அறிவித்துள்ளார்