போக்குவரத்துத்துறை நடத்திய ஆய்வொன்றில் பிரித்தானியாவில், வேல்ஸ் மற்றும் ஸ்காட்லாந்து ஆகிய இடங்களில் 22,990 மைல் தொலைவுக்கு சாலைகள் மோசமான நிலையில் உள்ளது தெரியவந்துள்ளது. ஏற்கனவே மோசமான நிலையில் காணப்பட்ட சாலைகள் ‘Beast from the East’ என்னும் சைபீரியக் காற்றுகளுக்கு பின் இன்னும் மோசமான நிலைக்குச் சென்று பயணம் செய்வோருக்கு மிகுந்த ஆபத்தை ஏற்படுத்தும் நிலைக்குள்ளாகியுள்ளன என்று நெடுஞ்சாலைத்துறையின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார். பிரித்தானியாவில் உள்ளூர் அதிகாரிகளால் பராமரிக்கப்படும் சாலைகளில்...
லண்டனில் நேற்று இரவு இரண்டு பேர் மர்ம நபர்களால் குத்தி கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் Walthamstow பகுதியில் நேற்று இரவு உள்ளூர் நேரப்படி 09.50 மணியளவில் 40 வயது மதிக்கத் தக்க நபர் கத்தியால் குத்துபட்டு உயிருக்கு போராடியுள்ளார். இது குறித்து தகவல் அறிந்த பொலிசார் அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பு வைத்துள்ளனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார் இறந்த நபரின்...
கடந்த 2017ஆம் ஆண்டு நாடளாவிய ரீதியில் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கான நாள் குறிக்கப்பட்டுள்ளது. இதன்படி எதிர்வரும் 28ஆம் திகதி வெளியிடுவதற்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த விடயத்தினை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார். அன்றைய நாள் பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பரீட்சைப் பெறுபேறுகளை பார்வையிடமுடியும் என்றும் அதற்கு அடுத்த நாள் கொழும்பில் உள்ள பாடசாலைகளுக்கு...
மனிதவுரிமை ஆணைக்குழுவும் நீதியைப் பெற்றுத் தராது எம்மை கைவிட்டு விட்டது என பாதிக்கப்பட்ட வவுனியா மாவட்ட தொண்டர் ஆசிரியர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது, வடமாகாணத்தில் கடந்த பல வருடங்களாக தொண்டர் ஆசிரியர்களாக கடமையாற்றி வந்தவர்களை ஆசிரிய சேவையில் உள்ளீர்ப்பதற்கான நேர்முகத் தேர்வுகள் கடந்த வருடம் யூன் மாதம் நடைபெற்றிருந்தன. இந் நேர்முகத் தேர்வில் 1046 பேர் தோற்றியிருந்த நிலையில் 676 பேர் நியமனம் பெற தகுதியுடையவர்கள்...
  ஐ நா மனிதஉரிமைகள் ஆணையரின் அறிக்கை :- அமெரிக்காவிற்கு வெற்றி ரணில்-சிறிசேனாவுக்கு நற்செய்தி ராஜபக்சாவுக்கு அபாய அறிவிப்பு தமிழ் மக்களுக்கான ஒரு கவுன்சிலிங் இலங்கைக்கும் இலங்கை அரசுக்கும் எதிரான காட்டமான அறிக்கையை ஐநா மனிதஉரிமைகள் ஆணையர் இவ்வாரம் வெளியிட்டுள்ளார். இன-மத வன்முறைகள் நிறைந்த நாடு, சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து நிகழும் நாடு, மனிதஉரிமைகள் பெரிதும் மீறப்படும் ஒரு நாடு எனப் பலவாறாக இவ்வறிக்கை குற்றஞ்சாட்டுகிறது. இறுதிகட்ட யுத்தத்தின் போது இலங்கை அரசு மேற்கொண்ட யுத்தக் குற்ற...
  கனகசபாபதி விசுவலிங்கம் விக்னேஸ்வரன் (C. V. Wigneswaran, சி. வி. விக்னேஸ்வரன், பிறப்பு: அக்டோபர் 23, 1939) இலங்கையின் உச்சநீதிமன்ற இளைப்பாறிய நீதிபதியும், வடக்கு மாகாண சபையின் முதலாவது முதலமைச்சரும் ஆவார். இவர் ஒரு முன்னணி தமிழ் வழக்கறிஞரும், அரசியல்வாதியும் ஆவார். இவர் மாவட்ட நீதிமன்றம், உயர் நீதிமன்றம், உச்சநீதிமன்றம் ஆகியவற்றின் நீதிபதியாகவும், நீதித் துறை நடுவராகவும்பணியாற்றியவர். இவர் 2011 செப்டம்பரில் நடைபெற்ற வட மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு 1,32,255 விருப்பு வாக்குகள் பெற்று வெற்றி பெற்று முதலாவது மாகாண சபையின்முதலமைச்சராகத் தெரிவு செய்யப்பட்டார். வாழ்க்கைச்...
இல்லத்தரசிகளாக இருந்தாலும் சரி, வேலைப் பார்க்கும் பெண்களாக இருந்தாலும் சரி... வீக் எண்ட்டிலாவது உங்கள் உடல்நலனிலும், அழகிலும் அக்கறை கொள்ளவேண்டும். இதோ உங்களுக்கான அழகுக் குறிப்புகள் பற்றிச் சொல்கிறார் பியூட்டிஷியன் மோனிஷா பிரசாந்த். தலைக்குப் பாதாம் ஆயில் பாத்! சனி, ஞாயிறு இரண்டு நாள்கள் விடுமுறை கிடைத்தாலும் சரி, ஞாயிறு அன்றுமட்டும் விடுமுறை கிடைத்தாலும் சரி, காலையில் எழுந்ததும் பாதாம் எண்ணெய்யைத் தலைமுடியின் வேர்க்கால்களில் ஆரம்பித்து நுனி வரை தடவி  ஊற விடுங்கள். பப்பாளி ஃபேஷியல்! தலையில் எண்ணெய் ஊறுகிற...
இன்றைய நாகரிக காலத்தில், அலுவலகம், ஷாப்பிங் மால், வீடு என எல்லா இடங்களிலும் குளிர்சாதன அறையிலேயே இருந்து பழகிவிட்டோம். தாங்கிக்கொள்ள முடியாத வெப்பமான சூழலில், இவை உடலுக்குக் குளிர்ச்சி அளித்தாலும், இதனால் பாதிப்புகளும் உண்டு. அதில் ஒன்றாக, தொடர்ந்து ஏ.சியில் இருப்பதால் சருமம் வறட்சி அடைகிறது. இதிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள எளிமையான வழிமுறைகளைச் சொல்கிறார், அழகுக்கலை நிபுணர் வசுந்தரா.                ...
நாடு முழுவதும் 8,000 உறுப்பினர்கள்; இவ்வளவு பெரும் எண்ணிக்கை தேவைதானா? உள்ளூராட்சித் தேர்தலின்போது அறிமுகப்படுத்தப்பட்ட புதிய தேர்தல் முறையில் பல குறைபாடுகள் காணப்படுவதை நேரடியாக காணமுடிந்துள்ளதால் புதிய தேர்தல் முறையை மேலும் சீரமைப்பது தொடர்பாக விரைவில் பாராளுமன்றத்தின் மூலம் தீர்மானம் எடுக்கப்படுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். நாடு முழுவதுமுள்ள உள்ளூராட்சிச் சபைகளில் இன்று 8,000 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவ்வளவு உள்ளூராட்சிச்சபைகளும், பெரும் எண்ணிக்கையிலான உறுப்பினர்களும் தேவைதானா? என்ற கேள்வியொன்று...
பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் பணிப்புரைக்கமைய நாடளாவிய ரீதியில் இன்று அதிகாலை வீதித் தடைகளை ஏற்படுத்தி பொலிஸாரால்  மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் மொத்தமாக 2,879 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார். மேலும் அதிகாலை 4 மணி முதல் காலை 8 மணி வரை மேற்கொள்ளப்பட்ட இச் சுற்றிவளைப்பில்  7,516 வழக்குகள் போக்குவரத்து குற்றங்களுக்காக பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார் சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்டவர்களில் மது அருந்தி  வாகனம் செலுத்திய 266 பேரும், பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 1,031...