பழைய கோட்டை வீதி , ராஜகிரிய பிரதேசத்தில் நடாத்தப்பட்டு வந்த விபச்சார விடுதியொன்று நேற்றிரவு சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. காவற்துறைக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய குறித்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் , இதன் போது 6 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்த விபச்சார விடுதி மசாஜ் நிலையம் என்ற போர்வையில் நடாத்திச் செல்லப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்தது. குறித்த விடுதியின் முகாமையாளராக செயற்பட்ட பெண்ணொருவரும் மற்றும் விபச்சார தொழிலில் ஈடுபட்ட 5 பெண்களுமே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது...
கடந்த மூன்று வருடங்களில் தற்காலிக குடிநீர் வசதி வழங்குவதற்காக மட்டும் நல்லாட்சி அரசாங்கம் 5000 கோடி ரூபாவை செலவிட்டுள்ளது என அனர்த்த நிவாரண அமைச்சின் மேலதிக செயலாளர் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கொன்றில் இந்த தகவலை தெரிவித்துள்ளார் அவர் மேலும் தெரிவிக்கையில், வறட்சி மற்றும் இயற்கை அனர்த்தங்கள் காரணமாக மக்கள் பாதிக்கப்படும் சந்தர்ப்பங்களில் தற்காலிக குடிநீர் வசதிகளை வழங்குவது அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சின் செயற்பாடுகளில் ஒன்று. கடந்த 2015ஆம் ஆண்டு...
விசுவாசம் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் நடந்து வருகின்றது. இந்நிலையில் அஜித் இப்படத்தில் இரண்டு கெட்டப்பில் நடித்து வருகின்றார். தம்பி ராமையா அஜித்தின் தாய் மாமனாக நடிக்க, விவேக் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பில் போது நடிகர் விவேக் நயன்தாராவை கேரவனிலேயே சந்தித்து மன்னிப்பு கேட்டதாக முன்னணி பத்திரிகையாளர் கூறியுள்ளார். அது சரி, விவேக் எதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நீங்கள் நினைப்பது புரிகின்றது, அது வேறு ஒன்றுமில்லை...
இலங்கை அணியின் நட்­சத்­திர வேகப்­பந்­து­ வீச்­சாளர் லசித் மலிங்க எமது அவ­தா­னிப்­பில்தான் இருக்­கிறார் என்று இலங்கையின் துடுப்­பாட்டப் பயிற்­சி­யாளர் திலான் சம­ர­வீர தெரி­வித்­துள்ளார். ஆனால் அவர் எதிர்­வரும் போட்­டி­களில் விளை­யா­டு­வாரா, இல்­லையா என்­பதை நான் தீர்­மா­னிக்க முடி­யாது என்றும் அநே­க­மாக தென்­னா­பி­ரிக்­கா­வுக்கு எதி­ரான இரு­ப­துக்கு 20 போட்­டியில் லசித் மலிங்க கள­மி­றங்க வாய்ப்­புள்­ள­தா­கவும் திலான் சம­ர­வீர குறிப்­பிட்டார். நட்­சத்­திர வேகப்­பந்து வீச்­சா­ள­ரான லசித் மலிங்க அணி­யி­லி­ருந்து கடந்த சில கால­ங்களாக ஓரம்...
தென்னாபிரிக்க அணித் தலைவர் டூப்பிளஸ்ஸியின் வலது தோள் பட்டையில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக அவர் இலங்கைக்கு எதிரான இறுதி இரு ஒரு நாள் போட்டிகளிலும் ஒரு இருபதுக்கு 20 போட்டிகளிலும் விளையாட மாட்டார் என தென்னாபிரிக்க அணியின் முகாமையாளர் மெஹமட் முசாஜி தெரிவித்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இலங்கைக்கு எதிரான மூன்றாவது போட்டியின் போது தென்னாபிரிக்க அணி வீசிய 10 ஓவரில் பிடியெடுப்பு ஒன்றுக்கான முயற்சியொன்றை மேற்கொண்டபோது அவர் கீழே...
வவுனியா மன்னார் பிரதான வீதி வேப்பங்குளம் 6ம் ஒழுங்கைக்கு முன்பாக நேற்று 06 மாலை 5.15 மணியளவில் இ.போ.ச மற்றும் தனியார் பஸ்கள் போட்டித்தன்மை காரணமாக பயணிகள் பாரிய அசோகரியங்களுக்கு முகங்கொடுத்தனர். திருகோணமலையிலிருந்து மன்னார் நோக்கி பயணித்த இ.போ.ச பஸ் ஒன்றும் வவுனியாவிருந்து செட்டிக்குளம் நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்றும் வவுனியா மன்னார் பிரதான வீதியில் பட்டானீச்சூர் பகுதியிலிருந்து வேப்பங்குளம் 6 ம் ஒழுங்கை வரை போட்டி போட்டுக்கொண்டு...
வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிறுவனங்களின் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் 160 வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பிரதி அமைச்சர் மனுச நாணயக்கார தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில், இந்த ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் சட்டவிரோதமாக இயங்கி வந்த வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிறுவனங்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளன. சட்டவிரோதமாக இயங்கி வரும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர்...
டென்மார்க்கில் இருந்து இலங்கை நோக்கி புறப்பட்ட நபர் விமானம் நடுவானில் பயணித்துக் கொண்டிருக்கும் நேரம் திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். கடந்த முதலாம் திகதி எமிரேட்ஸ்க்கு சொந்தமான விமானத்தில் தனது தாயகத்தை நோக்கி புறப்பட்ட பரமலிங்கம் பாலச்சந்திரன் என்ற 58 வயதுடைய தமிழரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி - வட்டகச்சி பகுதியை பிறப்பிடமாக கொண்ட பாலச்சந்திரன் 3 பிள்ளைகளின் தந்தை எனவும் தெரிய வந்துள்ளது. மேலும் விமானம் புறப்பட்டு ஒன்றரை மணித்தியாலத்தின் பின்னரே...
இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் அரசாங்கம் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு விசா இல்லாமல் அனுமதி வழங்க ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பரிசீலனை செய்வதற்கு சுற்றுலாத்துறையின் அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி...
திருகோணமலையில் ஆசிரியை ஒருவரை கொலை செய்த குற்றத்திற்காக இருவருக்கு மரண தண்டனை விதித்து திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கு விசாரணை இன்று திருகோணமலை மேல் நீதிமன்றில் விசாரணைக்கு வந்த போதே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 4 சந்தேகநபர்களில் முதலாவது, இரண்டாவது சந்தேகநபர்கள் கூரிய ஆயுதத்தால் தாக்கி ஆசிரியைரை படுகொலை செய்தனர் என்ற குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில் இவர்களுக்கு மரண தண்டனை...