இந்தியா உடனான 2 வது டெஸ்ட் போட்டியிலிருந்து இங்கிலாந்து அணி வீரர் பென் ஸ்டொக்ஸ் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்தியா உடனான 2-வது டெஸ்ட் போட்டி விளையாடவுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. குறித்த போட்டி எதிர்வரும் 9 ஆம் திகதி லண்டனின் லோட்ஸ் மைதானத்தில் இடம்பெறவுள்ளது. முதலாவது டெஸ்ட் போட்டியின் போது துடுப்பாட்டத்தில் சோபிக்க தவறிய டேவிட் மலன் நீக்கப்பட்டார். இந்நிலையில் கடந்த ஆண்டு மதுபான விடுதி ஒன்றில் வாலிபரை தாக்கிய...
நோட்டன் பிரிட்ஜ்  நிருபர் மு.இராமசந்திரன் பொகவந்தலாவ பிளான்டேசனுக்குட்பட்ட நோர்வுட் பகுதியை சேர்ந்த 7 தோட்ட தொழிலாளர்களே 06.08.2018 காலை பொகவந்தலாவ அட்டன் பிரதான பாதையில் கிளங்கள் வைத்தியசாலைக்கருகில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. அம்பகமுவ பிரதேச செயலகத்தினால் அட்டன் பகுதியில்  இயற்கை அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு  நோர்வூட்  கிளங்கன் தோட்டத்திற்கு சொந்தமான சுமார் 5 ஏக்கர் நிலப் பகுதியை பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுத்துள்ள நிலையிலே இவ் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. தோட்ட நிலங்களை வெளியாருக்கு வழங்குவதை ஏற்க முடியாதென்றும், தோட்ட...
கிளிநொச்சி ஏ 9 வீதி  இயக்கச்சி பகுதியில் வீதியில் முறையற்ற விதத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மின்சார சபையின் வாகனத்தின் மீது கொழும்பு விமான நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற ஹயஸ் வாகனம் மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளனர். குறித்த விபத்து இன்று காலை இடம்பெற்றுள்ளது. விமான நிலையத்தில் இருந்து ஹயஸ் ரக  வாகனம் வெளிநாட்டில் இருந்து 8 பேரை  ஏற்றிக்கொண்டு யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த போது இயக்கச்சி ஏ 9 வீதியில் மின்கம்பங்களுடன்...
ஐக்கிய அமெரிக்காவும் இலங்கைங்கையும் பல்தேசிய பங்காளர்களுடன் இணைந்து பசுபிக் ஏஞ்சல் 2018 நடவடிக்கையின் ஓரங்கமாக அநுராதபுரத்திலும் அதனை அண்டிய பிரதேசங்களிலும் இன்று முதல் எதிர்வரும் 20ஆம் திகதி வரை மனிதாபிமான உதவி நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளன.   பசுபிக் ஏஞ்சல் என்பது வருடாந்தம் நடத்தப்படும் கூட்டு மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரண நடவடிக்கையாகும். இது பொது சுகாதாரம், பல் மருத்துவம், கண்பரிசோதனை, குழந்தைகள் மருத்துவம் மற்றும் பொறியியல் ரீதியான உதவிகள் அதேபோல்,...
சட்டவிரோதமான முறையில் படகொன்றின் மூலம் கடல் மார்க்கமாக வெளிநாடு செல்ல முற்பட்ட 21 பேரை இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர். கொழும்பிலிருந்து 117 கடல் மைல் தொலைவில் வைத்து இவர்களை கைதுசெய்த இலங்கை கடற்படையினர் அவர்கள் பயணித்த படகையும் கைபற்றியுள்ளனர். இது தொடர்பில் கடற்படையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மாணவிக்கு பாலியல் ரீதியான இடையூறுகளை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் மன்னார், முள்ளிக்குளம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு கிடைத்த முறைப்பாடொன்றுக்கு அமைய அவர் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். கடந்த டிசம்பர் மாதம் 15 வயதான குறித்த பாடசாலை மாணவி, சுத்தம் செய்யும் பணிக்காக அழைக்கப்பட்டு, அதிபரினால் பாலியல் இடையூறுகள் விளைவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் 3 ஆசிரியர்கள் உட்பட 10 பேரிடம் வாக்கு மூலம்...
மாணவி ஒருவரை மாணவன் பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 13 வயதான பாடசாலை மாணவியை பாலியல் வல்வுறவுக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் 14 வயதான பாடசாலை மாணவனை பொலிஸார் கைது செய்துள்ளனர். வெல்லவாய குடாஓயா பொலிஸார் மாணவனை கைது செய்துள்ளனர். பாடசாலை மாணவி கடந்த 31 ஆம் திகதி பாடசாலை முடிந்து வீட்டுக்கு வந்து ஆடைகளை மாற்றிக்கொண்டிருந்த போது, வீட்டுக்கு சென்ற மாணவனை மாணவியை பாலியல் வல்லுறவுக்கு...
நீதித் துறையை பிரதிநிதித்துவப்படுத்துபவர்களின் சம்பள உயர்வை போன்று ஏனைய அரச ஊழியர்களினதும் சம்பளம் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கும் கருத்துக்களில் எவ்வித உண்மையும் இல்லை என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டதன் மூலம் நிதி அமைச்சு இதனை தெரிவிக்கின்றது. நீதித் துறையை பிரதிநிதித்துவப்படுத்துபவர்களின் சம்பள உயர்வு தொடர்பில் கடந்த 2006 ஆம் ஆண்டு அமைச்சரவை தீர்மானம் முன்வைக்கப்பட்டததாகவும் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில், நீதிமன்ற அதிகாரிகள், சட்டமா அதிபர் திணைக்களத்தினதும் சட்ட...
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஷாப்பிங் சென்டர் அருகே சிறிய ரக விமானம் மோதி விபத்திற்குள்ளானதில் 5 பேர் பலியாகினர். அமெரிக்காவின் கலிபோர்னியாவில் சான்டா அன்னா நகரில் ஷாப்பிங் சென்டர் ஒன்று உள்ளது.  இந்த நிலையில் கன்கார்டுக்கு உட்பட்ட ஈஸ்ட் பே புறநகர் பகுதியில் இருந்து 2 என்ஜின்கள் பொருத்தப்பட்ட சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. அது திடீரென அவசரமுடன் தரையிறங்க முற்பட்டு உள்ளது.  இதில் ஷாப்பிங் சென்டர் அருகே இருந்த வாகனங்கள் நிறுத்தும்...
சமந்தாவுக்கு மெர்சல், இரும்புத்திரை ஆகிய இரண்டு படங்களின் வெற்றி மகிழ்ச்சியை கொடுத்தது. தெலுங்கில் கிராமத்து பெண்ணாக நடித்து இருந்த ரங்கஸ்தலம் படமும் பெயர் வாங்கி கொடுத்தது. இப்போது தமிழ், தெலுங்கில் தயாராகும் ‘யூடர்ன்’ படத்தில் நடிக்கிறார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையம்சத்தில் இது தயாராகிறது. சிவகார்த்திகேயனுடன் சீமராஜா, விஜய்சேதுபதியுடன் சூப்பர் டீலக்ஸ் படங்களிலும் நடிக்கிறார். தற்போது தென்கொரியாவில் பெரிய வெற்றி பெற்ற மிஸ் கிரேனி என்ற படத்தின் ரீமேக்கில் 70...