-மன்னார் நிருபர்- வவுனியாவில் சுகாதார திணைக்கள ஊழியர்களுடன் இணைந்து முன்னெடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் மக்களின் முறைப்பாடுகளுக்கு அமைவாக மக்களின் நலனை கருத்தில் கொண்டே முன்னெடுக்கப்பட்டதாக வடக்கு சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் தெரிவித்தார். மன்னாரில் உள்ள உப அலுவலகத்தில் இன்று சனிக்கிழமை காலை 10.30 மணியளவில் இடம் பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், வவுனியாவில் கடந்த 31 ஆம் திகதி...
பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்-சமந்தா முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்துள்ள படம் சீமராஜா. பெரிய எதிர்ப்பார்ப்பில் இருக்கும் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று மாலை மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. வழக்கம் போல் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் அவருக்கு மாஸ் வரவேற்பை கொடுத்தனர். அதேபோல் சீமராஜா பட டீஸரும் வெளியாகி இருந்தது. சிவகார்த்திகேயன் ரசிகர்கள் டீஸருக்கு கொடுத்த வரவேற்பால் இதுவரை வீடியோவை 1 மில்லியன் பார்வையாளர்கள் பெற்றுள்ளது. இதனால் #AMillionLoveForSeemaRajaTeaser, #1MViewsForSeemaRajaTeaser டாக்குகளை கிரியேட் செய்து...
ஏ.ஆர்.ரகுமான் தமிழகம், இந்தியா தாண்டி தற்போது உலகம் முழுவதும் பிரபலமடைந்துவிட்டார். இரண்டு ஆஸ்கர் விருதுகளை இந்தியாவிற்கு கொண்டு வந்தவர். இவர் பல ஹாலிவுட் படங்களில் பணியாற்றி வருகின்றார், இந்நிலையில் சமீபத்தில் இவர் ஹாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர் வில்ஸ் ஸ்மித் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு இருவரும் நீண்ட நேரம் பேசியுள்ளனர், இதனால், வில்ஸ் ஸ்மித்தின் அடுத்தப்படத்தில் ரகுமான் பணியாற்றுவார் என்று கிசுகிசுக்கப்படுகின்றது, இச்செய்தி ரகுமான் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்.
மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் பல தடவைகள் சிறியளவான மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும், மேல் மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப 2 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. ஹம்பாந்தோட்டை மற்றும் பதுளை...
விண்வெளிக்கு பயணிகளை சுற்றுலா அனுப்ப விண்கலம் தயாரிப்பில் அமேசான் தீவிரம் காட்டி வருகிறது. அமேசான் நிறுவனர் ஜெஃப் பெஸோசுக்கு சொந்தமான ப்ளு ஆரிஜின் என்ற நிறுவனம் விண்வெளிக்கு சுற்றுலா அழைத்துச் செல்லும் விண்கல தயாரிப்பில் தீவிரம் காட்டி வருகிறது. அந்த  விண்கலம் வேகமாக வடிவமைக்கப்பட்டு வருகிறது. பலகட்ட சோதனைகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டு  வருகிறது. இருந்தாலும் இன்னும் இரண்டுமுறை சோதிக்க வேண்டியுள்ளதாக நிறுவனம் கூறியுள்ளது. அநேகமாக 2020-க்கு பின்  பயணிகள் மற்றும் செயற்கைகோள்...
திரைப்படங்களுக்கு தணிக்கை குழு தேவை இல்லை என்று நடிகர் கமல்ஹாசன் கூறினார். ‘விஸ்வரூபம்–2’ படத்தை விளம்பரப்படுத்த ஐதராபாத் சென்ற கமல்ஹாசன் அங்கு நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:– ‘‘நடிகர்களை தேர்வு செய்வது, அவர்களை உருவாக்குவது என்று இரண்டு விதத்தை சினிமாவில் பார்க்கலாம். பாலசந்தர் நடிகர்களை உருவாக்கினார். மண் பொம்மைகளைகூட தேவதைகளாக மாற்றினார். அவருடையை தொழில் யுக்தி எனக்கு பிடிக்கும். சினிமாவை நேசிப்பவர்களால் மட்டும்தான் அவர் மாதிரி இருக்க முடியும். கேரவனில் தங்குவது,...
நடிகை சதா நடித்துள்ள டார்ச் லைட் படத்துக்கு தணிக்கை குழு ‘ஏ’ சான்றிதழ் அளித்துள்ளது. ‘ஜெயம்’ படத்தில் அறிமுகமான சதா, அந்நியன், பிரியசகி, வர்ணஜாலம், திருப்பதி போன்ற படங்களிலும் நடித்தார். பின்னர் இந்தி, தெலுங்கு பக்கம் போனார். நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் ‘டார்ச் லைட்’ என்ற தமிழ் படத்தில் விலைமாதுவாக நடித்துள்ளார். இந்த படத்தை மஜீத் இயக்கி உள்ளார். படத்தை தணிக்கை குழுவுக்கு அனுப்பியபோது சதா நடித்துள்ள காட்சிகள் ஆபாசமாக...
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பத்திரிகையாளர்களிற்கு எதிராக வன்முறைகளை தூண்டும் விதத்தில் கருத்து தெரிவித்து வருகின்றார் என ஐநா நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். டொனால்ட் டிரம்ப் வெளியிட்டு வரும் கருத்துக்கள் மூலோபாயரீதியிலானவை அவை பத்திரிகை சுதந்திரத்தை அலட்சியம் செய்கின்றன என ஐ.நா நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர். கருத்து சுதந்திரம் தொடர்பான ஐநாவின் நிபுணர்களான டேவிட் கே,எடிசன் லன்சா ஆகியோரே இந்த கரிசனையை வெளியிட்டுள்ளனர். பத்திரிகை சுதந்திரம் மற்றும் சர்வதேச மனித உரிமை சட்டம் ஆகியவை...
அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளில் வீசிய பலத்த காற்றினால் 217 வீடுகள் சேதமடைந்துள்ளன. அம்பாறை மாவட்டத்தின் நவகம்புர, சத்தானிஸ்ஸபுர, மிஹிந்துபுர, ஜயவர்தனபுர, ஹரங்காவ ஆகிய பகுதிகளில் பலத்த காற்று வீசியுள்ளது. சுமார் 10 நிமிடங்கள் பலத்த காற்று நீடித்ததாக பிரதேச மக்கள் தெரிவித்தனர். காற்றினால் மூன்று வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதாக அம்பாறை மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார். பலத்த காற்றினால் சுமார் 5000 வீடுகளுக்கு மின்சாரத்தடை ஏற்பட்டதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. மின்...
இன்றைய தொழில்நுட்ப உலகில் ஸ்மார்ட்போன் இல்லாமல் அணுவும் அசையாது என்ற நிலை தான். எது இருக்கிறதோ இல்லையோ ஸ்மார்ட்போன்கள் இருந்தால் போதும் என்ற நிலைக்கு இளசுகள் வந்துவிட்டனர். அதுவும் புதுப்புது ஆப்களை தரவிறக்கம் செய்து பயன்படுத்துவதே பேஷனாகிவிட்டது, இதனால் நன்மைகள் இருந்தாலும் ஆபத்துகள் மிக அதிகம். கடந்த இரண்டு நாட்களாக Track View செயலி மூலம் சகோதரி, உறவுக்கார பெண்கள், தோழிகள் என அந்தரங்க படங்கள், வீடியோக்களை எடுத்து மிரட்டி வந்த தினேஷ்குமார்...