(அஸ்லம் எஸ்.மௌலானா) கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பெரிய நீலாவணை இஸ்லாமிக் ரிலீப் வீட்டுத் திட்டத்தில் கழிவு நீர்த் தொகுதியை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்களின் வேண்டுகோளின் பிரகாரம் அரச தொழில் முயற்சி, கண்டி அபிவிருத்தி பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களின் ஆலோசனையின் பேரில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் அமைச்சருமான சட்டமுதுமாணி ரவூப் ஹக்கீம் இதற்கான...
வடக்கு சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன்   இன்றைய சூழலில் எமது அரசியல் வாதிகள் உற்பட பல்வேறு விதமானவர்கள் மாகாண சபையினுடைய அதிகாரங்களை குறைப்பதிலேயே குறியாக இருக்கின்றனர் என வடக்கு சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் தெரிவித்தார். மன்னாரில் இது அவரது அலுவலகத்தில் இன்று (10) காலை இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் அவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், வட பகுதியில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் வன்முறைகள் அதிகரித்த நிலையில் காணப்படுகின்றது. கொள்ளை,கொலை,...
மட்டக்களப்பு கல்குடா பொலிஸ் பிரிவிலுள்ள பேத்தாழை ஆற்றுப் பகுதியில் வெடிப்பொருட்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் 3 சந்தேக நபர்களை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளதாக கல்குடா பொலிசார் தெரிவித்தனர். இவர்களிடமிருந்து 3 டைனமெட் என அழைக்கப்படும் வெடிப்பொருட்கள் மற்றும் படகு ஒன்றும் அதன் இயந்திரமும் கைப்பற்றப்பட்டதாக தெரிவித்தனர். மட்டக்களப்பு வவுணதீவு விசேட அதிரடி படைப்பிரினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்குறித்த பிரதேசத்திற்கு உடனடியாக விரைந்து ஆழ்கடலில் மீன் பிடிக்க செல்லவிருந்த படகினை சோதனை...
எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் இன்றைய தினம் (10) அமைச்சரவையில் கலந்துரையாடப்பட உள்ளதாக நிதியமைச்சு கூறியுள்ளது. நிதியமைச்சினால் அறிமுகம் செய்யப்பட்ட விலைச் சூத்திரத்திற்கு அமைவாக கடந்த 05ம் திகதி எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டது. எனினும் பின்னர் அந்த விலை அதிகரிப்பு அரசாங்கத்தால் விலக்கிக் கொள்ளப்பட்டது. அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விலைச் சூத்திரத்திற்கு அமைவாக இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை சர்வதேச சந்தைப் படி விலைத்திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று நிதியமைச்சு கூறியிருந்தது. குறித்த விலைச் சூத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி...
இலங்கையில் மரண தண்டனையை அமுல்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கவனம் செலுத்தியுள்ளதாக அரச தகவல் வட்டாரங்களை மேற்கோள் காட்டி கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பான குற்றவாளிகளுக்கு மாத்திரம் மரண தண்டனை வழங்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது. போதைப்பொருள் குற்றங்களுக்கு தொடர்புடைய நபர்களுக்கு மரண தண்டனையை செயற்படுத்துவதற்கு பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். போதை பொருள் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய நபர்கள் சிறையில் அடைக்கப்பட்ட போதும்,...
நேற்று இரவு  கிளிநொச்சி கனகபுரம் பகுதியில் சுமார் ஒருகோடி பெறுமதியான வலம்புரிச் சங்குடன் இருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக கிளிநொச்சி விசேட அதிரடிப்படையினர் தெரிவிக்கின்றனர் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் குறித்த் பகுதியை சுற்றிவளைத்து தேடுதல் செய்தபொழுது டொல்பின் ரக வாகனத்துடன் இரு சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த இருவரையும் இன்று கிளிநொச்சி பொலிசார் மூலம் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த இருப்பதாகவும்  விசேட அதிரடிப்படையினர் தெரிவிக்கின்றனர் இருப்பினும் மீட்க்கப்பட்ட சங்கு...
பாட­சாலை விட்டு வீடு திரும்­பிக்­கொண்­டி­ருந்த சிறு­மியர் மூவரை ஏமாற்றி அழைத்துச் சென்று பாலியல் குற்றம் புரிந்­த­தாகக் கூறப்­படும் நபர் ஒரு­வரை கலஹா பொலிஸார் நேற்று கைது செய்­துள்­ளனர். கலஹா தெல்­தோட்டை கிரேட்­வெலி தோட்­டத்தைச் சேர்ந்த 11,12,13 வய­து­க­ளை­யு­டைய 3 சிறு­மி­க­ளையே இவ்­வாறு சந்­தேகநபர் பாலியல் குற்­றத்­திற்கு உட்­ப­டுத்­தி­யுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. இச்­சி­று­மிகள் தெல்­தோட்­டையில் அமைந்­துள்ள பிர­பல பாட­சா­லை­யொன்றில் கல்வி கற்­று­வரும் நிலையில் பாட­சாலை முடிந்து வீடு திரும்பும் போது சந்­தேகநபர் ஏமாற்றி அழைத்துச்...
(அஸ்லம் எஸ்.மௌலானா) காரைதீவு முச்சந்தியில் அமைந்துள்ள சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசலுக்கு சொந்தமான தைக்கா காணி தொடர்பான வழக்கை விசாரிப்பதற்கு கல்முனை மாவட்ட நீதிமன்றம் இரு தினங்களை விசேடமாக ஒதுக்கியுள்ளது. இதன் பிரகாரம் எதிர்வரும் செப்டெம்பர் 19 மற்றும் 21 ஆம் திகதிகளில் இவ்வழக்கு விசாரணை இடம்பெறவுள்ளது. இந்த வழக்கு கல்முனை மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே நீதிபதி பயாஸ் ரஸ்ஸாக் இந்த அறிவித்தலை விடுத்தார். இவ்வழக்கில் சாய்ந்தமருது...
கடந்த ஞாயிற்றுக்கிழமை (08/07/2018) அன்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின்  பிரித்தானியா பணிமனையில்  கரும்புலிகள் நாள் நடைபெற்றது. ஒரு நிமிட அகவணக்கத்துடன் ஆரம்பமான நிகழ்வில் தமிழீழ தேசியக்கொடியினை  நா.க.த.அ செயற்பாட்டாளரும்  முன்னாள் போராளியுமான கரன் என்பவர்  ஏற்றினார். அதனைத் தொடர்ந்து டிவோன் என்ற செயற்பாட்டாளர் கரும்புலிகளின் படத்திற்கு மாலை அணிவித்தார். அதனைத்தொடர்ந்து நா.க.த.அரசின்  விளையாட்டு மற்றும் சமூகநல பிரதி அமைச்சர்  சொக்கலிங்கம் யோகலிங்கம் கரும்புலிகளின் உருவ படத்திற்கு நினைவுச்சுடர்  ஏற்றிவைத்து கரும்புலிகள்...
  2009 க்குப் பிறகு உருவாகிய தமிழ் அரசியலில் “முன்னாள் போராளிகள்” என்றொரு புதிய சொல் அறிமுகப்படுத்தப்பட்டது. 2009 வரையும் களத்தில் நின்று போராடிய விடுதலைப்புலிகளே இந்தச் சொல்லின் மூலம் அடையாளப்படுத்தப்பட்டனர். (1980 களில் ஈழப்போராட்டத்தில் ஈடுபட்ட அத்தனைபேரும் போராளிகளாகவே கருதப்பட்டனர்). போரினால் தோற்கடிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த போராளிகள், இந்தச் சொல்லின் மூலம் ஓய்வு நிலைக்குத் தள்ளப்பட்டதாக உணர்த்தப்பட்டது. அதாவது களத்திலிருந்து அகற்றப்பட்டதாக. இதற்குப் பிறகு போராட்ட (கால) அரசியற் களத்தில்...