அவுஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் ஆரோன் பின்ச், டி20 வரலாற்றில் முதல் வீரராக 900 புள்ளிகளை கடந்து சாதனை படைத்துள்ளார். டி20 கிரிக்கெட்டின் துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசைப் பட்டியல் வெளியானது. இந்தப் பட்டியலில் அவுஸ்திரேலிய வீரர் ஆரோன் பின்ச் முதலிடம் பிடித்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான தொடரின் முடிவில் பின்ச் 891 புள்ளிகள் பெற்றிருந்தார். அதனைத் தொடர்ந்து, முத்தரப்பு டி20 தொடரில் 306 ஓட்டங்கள் (68, 172, 16, 3, 47) குவித்தார். இதன்மூலம், ஐ.சி.சி...
உலக கோப்பை கால்பந்து போட்டியில் இன்று நடைபெறும் முதலாவது அரைஇறுதிப்போட்டியில் பிரான்ஸ்-பெல்ஜியம் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவில் நடந்து வருகிறது. இந்த போட்டி விறுவிறுப்பான இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. லீக், ‘நாக்-அவுட்’ மற்றும் கால்இறுதி சுற்று ஆட்டங்கள் முடிவில் ஐரோப்பா கண்டத்தை சேர்ந்த பிரான்ஸ், பெல்ஜியம், இங்கிலாந்து, குரோஷியா ஆகிய 4 அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறின. இதில் முதலாவது அரைஇறுதிப்போட்டி செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில்...
வெங்கட் பிரபு டைரக்‌ஷனில் அடுத்து திரைக்கு வர இருக்கும் படம், ‘பார்ட்டி.’ இந்த படத்துக்காக நடிகர்கள் சூர்யா, கார்த்தி ஆகிய இருவரும் சொந்த குரலில் ஒரு பாடலை பாடியிருக்கிறார்கள். இதுபற்றி டைரக்டர் வெங்கட் பிரபு கூறியதாவது ‘‘பேச வார்த்தைகளே இல்லை. இந்த அழகான–அன்பான சகோதரர்களின் புகழ், நேரம் மற்றும் அவர்களின் குரல் ஆகியவற்றை எங்களுக்கு அளித்தது, எங்கள் குழுவுக்கு பெருமை. இந்த பாடலுக்கு–இந்த கூட்டணிக்கு உருவாகியுள்ள மிகப்பெரிய எதிர்பார்ப்பு, எங்கள் வணிக...
சரித்திர, புராண படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இருக்கிறது. பாகுபலி வெற்றிக்கு பிறகு இந்த வகையான படங்கள் பக்கம் தயாரிப்பாளர்கள் பார்வை திரும்பி இருக்கிறது. ராணி பத்மினி வாழ்க்கையை மையமாக வைத்து தீபிகா படுகோனே நடிப்பில் வெளிவந்த பத்மாவத் படம் வசூல் சாதனை படைத்தது. அடுத்து ஜான்சி ராணி லட்சுமிபாய் வாழ்க்கை மணிகர்னிகா என்ற பெயரில் தயாராகிறது. இந்தியில் மகாபாரதம் கதையை படமாக்கும் வேலைகள் நடக்கின்றன. இதுபோல் ராமாயணமும் சினிமா...
19 அரச நிறுவனங்களின் நிறைவேற்று அதிகாரிகள் நாளை நாடு தழுவிய ஒருநாள் அடையாளப் பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ளவுள்ள தீர்மானித்துள்ளனர். நீதித்துறை சார்ந்தவர்களுக்கு மாத்திரம் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ளவுள்ளதாக அரச சேவை நிறைவேற்று அதிகாரிகள் ஒன்றிய குழுமத்தின் தலைவர் நிமல் கருணாசிறி குறிப்பிட்டார். 19 அரச நிறுவனங்களின் நிறைவேற்று அதிகாரிகள் இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் பங்கேற்க உள்ளதாக அவர் கூறினார். இதேவேளை, சம்பளப் பிரச்சினை உட்பட தீர்க்கப்படாத பிரச்சினைகள் பலவற்றை முன்னிறுத்தி,...
போக்குவரத்து குற்றங்கள் தொடர்பில் விதிக்கப்படும் அபராதத் தொகை எதிர்வரும் 15ஆம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனடிப்படையில், 33 விதமான போக்குவரத்துக் குற்றங்கள் தொடர்பில் விதிக்கப்படும் அபராதம் 15ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் எனத் தெரிவித்துள்ளனர். அதற்காக புதிய தண்டப் பத்திரம் அடங்கிய 1 இலட்சத்திற்கும் அதிக புத்தகங்கள் நாடளாவிய ரீதியில் 489 பொலிஸ் நிலையங்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் வீதிப்பாதுகாப்பு தொடர்பான பொலிஸ் அத்தியட்சகர் இந்திக ஹப்புகொட தெரிவித்துள்ளார். இதற்கான...
மாகாண சபைகள் 6இற்கான தேர்தலை எதிர்வரும் ஜனவரி மாதம் 5 ஆம் திகதி நடத்துவதற்கு இயலும் என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். நியூஸ்லைன் நிகழ்ச்சியில் பங்கேற்ற தேர்தல்கள் ஆணையாளரிடம் பழைய முறைமைக்கே தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என அரசாங்கத்தினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறித்து கேட்கப்பட்டபோது, பாராளுமன்றத்தில் நடைபெறும் விவாதங்களைப் பார்க்கும்போது, அரசாங்கத்திலுள்ள ஒருசாரார் பழைமை முறைமையில் தேர்தலை நடத்துமாறு கோருகின்றதாகவும் அரசாங்கத்திலுள்ள மற்றுமொரு பிரிவினர் புதிய முறையின் கீழ்...
சர்ச்சையைத் தோற்றுவித்துள்ள முறிகள் கொடுக்கல் – வாங்கல் தொடர்பில் கணக்காய்வை மேற்கொள்வதற்கு பொருத்தமான நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்களைக் கோருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இந்தநிலையில், இதுவரை 5 நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி குறிப்பிட்டுள்ளார். சர்வதேச கணக்காய்வு நிபுணர் ஒருவரின் தலைமையில் கணக்காய்வு குழு நியமிக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அரச ஏல விற்பனைப் பிரிவு , கணக்காய்வுத் திணைக்களம் மற்றும் மத்திய வங்கி...
அரசாங்கப் பணியாளர்களாக உள்ளவர்களில் 17 வீதமானோர், க.பொ.த.சாதாரண தேர்வில் சித்தியடையவில்லை என்று, சிறிலங்கா அரசாங்க சனத்தொகை மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. அரச பணியாளர்களில் ஆண்களில் 27.2 வீதமானோரும், பெண்களில், 4.8 வீதமானோரும், க.பொ.த.சாதாரண தேர்வில் சித்தியடையவில்லை. பொதுச்சேரைவயினர் என்ற வகைக்குள் பொதுவாக, அரசாங்கத்தினால் நிர்வகிக்கப்படும், கல்வி, சுகாதாரம், தேசிய பாதுகாப்பு, இராணுவம், காவல்துறை, உட்கட்டமைப்பு (வீதிகள், பாலங்கள், சுரங்கங்கள், நீர்விநியோகம், நில அளவை, மின் விநியோகம், தொலைத்தொடர்பு...
இந்தியாவில் இருந்து தபால் ஊடாக இலங்கைக்கு ஹெரோய்ன் கடத்தி வந்த சம்பவம் தொடர்பில் மூன்று பேர் இலங்கை சுங்கப் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தில் வைத்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட 227 கிராம் ஹெரோய்ன் நேற்று மாலை கண்டுபிடிக்கப்பட்டதாக சுங்க ஊடகப் பேச்சாளர் சுனில் ஜயரத்ன கூறினார். குறித்த ஹெரோய்ன் போதைப் பொருளை நாட்டுக்கு கொண்டு வந்த நபர் உட்பட மூவர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த...