இலங்கையை சேர்ந்த பெண்ணொருவர் 20 பிள்ளைகளை பெற்றெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தம்புள்ளை - கலேவல பகுதியை சேர்ந்த 78 வயதான எச்.ஏ.ரொசலின் நோனா என்ற பெண்மணி 20 பிள்ளைகளை பெற்றுள்ளார். இந்த தாயாரின் கணவருக்கு 86 வயதாகின்றது. இந்த தம்பதிகளுக்கு 78 பேரக்குழந்தைகள் உள்ளனர். எனினும் 20 குழந்தைகளை பெற்றெடுப்பதற்காக தான் ஒரு போதும் வைத்தியசாலைக்கு செல்லவில்லை என குறித்த தாயார் தெரிவித்துள்ளார். கணவர் கூலி வேலை செய்தமையினால் கடுமையான...
யுத்தம் முடிவடைந்து எட்டு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையிலும் விடுதலைப்புலிகள் அமைப்பின் கடற்புலிகளின் திறனைக் கண்டு இலங்கை இராணுவம் வியந்துள்ளது. விடுதலைப்புலிகளால் அமைக்கப்பட்ட நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் அதி விரைவுத் தாக்குதல் படகுகளை முள்ளியவாய்கால் பகுதியில் உள்ள இடம் ஒன்றில் வைத்து, தென்னிலங்கையில் இருந்து வருபவர்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் இது குறித்து விளக்கமளிக்கப்படுகிறது. அத்துடன், விடுதலைப்புலிகளின் கடற்படையின் பொறியியல் திறன்களாக இதனை அடையாளம் காட்டப்படுகின்றது. மேலும், அங்கு விடுதலைப்புலிகளின் கடற்கலங்கள், நீர் மூழ்கிக் கப்பல்களின்...
2017ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த மாடலுக்கான கிரீடத்தை இலங்கை பெண் ஒருவர் வென்றுள்ளார். கடந்த 14ம் திகதி ஸ்பெயினில் நடைபெற்ற போட்டியில் சுலக்ஷ் ரணதுங்க என்ற இலங்கை பெண்ணே இந்த கிரீடத்தை வென்றுள்ளார். இலங்கையில் பிரபல வடிவமைத்தல் கலைஞரான செயற்படும் சுலக்ஷி ரணதுங்க, தற்போது சினிமாவிலும் நடித்து வருகிறார். தற்போது ஸ்பெயினில் தங்கியுள்ள சுலக்ஷ் தனது வெற்றியினை சமூக வலைத்தளம் ஊடாக பகிர்ந்துள்ளார்.    
தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான ஹெபடைடிஸ் நோய் தடுப்பு தொடர்பான உலக சுகாதார அமைப்பின் நல்லெண்ண தூதுவராக பிரபல ஹிந்தி நடிகர் அமிதாப் பச்சன் நியமிக்கப்பட்டுள்ளார். ஹெபடைடிஸ் நோய் தடுப்பு தொடர்பான தூதுவராக நியமிக்கப்பட்ட நடிகர் அமிதாப் பச்சன், நோய் தடுப்பு தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் வேலைத்திட்டம் ஒன்றில் கலந்து கொள்ளவுள்ளார். ஹெபடைடிஸ் பீ வைரஸ் தொற்றுடன் வாழும் அமிதாப் பச்சன், இலங்கை, இந்தியா உட்பட தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஹெபடைடிஸ் நோய்...
சிறைச்சாலை அதிகாரிகளின் கவனயீனமே களுத்துறை சிறைச்சாலை தாக்குதல் சம்பவம் இடம்பெறக் காரணம் என விசாரணை மூலம் தெரியவந்துள்ளது. இந்த தாக்குதல் குறித்து விசாரணை நடத்திய மூவர் அடங்கிய விசாரணைக்குழு தெரிவித்துள்ளது. பாதாள உலகக்குழுத் தலைவர் சமயங் உள்ளிட்ட ஐந்து பாதாள உலகக்குழு உறுப்பினர்களும் இரண்டு சிறைச்சாலை உத்தியோகத்தர்களும் இந்த தாக்குதல் சம்பவத்தில் கொல்லப்பட்டனர். சிறைச்சாலை அதிகாரிகள் கவனயீனமும், தவறுமே இந்தக் கொலைகள் இடம்பெறுவதற்கான காரணம் என மூவர் அடங்கிய குழு வெளியிட்டுள்ள அறிக்கையில்...
மலையகப் பகுதிகளில் தமிழ் மொழி அமுலாக்கலில் உள்ள குறைபாடுகளை ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டுகின்ற பட்சத்தில் அமைச்சர் மனோ கணேசனூடாக உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென மத்திய மாகாணசபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன் தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, மலையகப் பகுதிகளில் பொது விளம்பரங்கள், அறிவித்தல்கள் என்பனவற்றில் தமிழ் மொழிக்கு உரிய இடம் கொடுக்கப்படாமை, அரச நிறுவனங்களில் தமிழ் மொழிக்கு உரிய அந்தஸ்து வழங்கப்படாமை போன்றன தொடர்பில் எனக்கு ஆதாரங்களுடன் அறியத்தந்தால் இவ்விடயம்...
வவுனியா மாவட்டத்திலுள்ள வர்த்தகர் சங்கம், கட்டிட நிர்மாணப்பொருள்கள் விற்பனையாளர்கள் சங்கம் என்பனவற்றிற்க இடம் ஒதுக்கும்போது, முச்சக்கர வண்டி சங்கம் ,ஊடகவியலாளர் சங்கம் என்பவற்றுக்கும் இடம் ஒதுக்குமாறு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான கே.காதர் மஸ்தான் தெரிவித்தார். மாவட்ட அரசாங்க அதிபர் ரோஹன புஷ்பகுமார தலைமையில் இன்று  இடம்பெற்ற வவுனியா மாவட்டத்துக்கான மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். வவுனியா மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்ட...
மட்டக்களப்பு - கல்லடி கடற்கரையில் ஆண் ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சுமார் 35 - 40 வயது மதிக்க தக்க ஆணின் சடலமே இவ்வாறு கரையொதுங்கியுள்ளது. கல்லடி திருச்செந்தூர் பகுதியில் உள்ள கடற்கரையில் கரையொதுங்கிய நிலையில் இந்த ஆணின் சடலம் மீட்கப்பட்டதாக காத்தான்குடி பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் காத்தான்குடி பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.    
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் 2017 ஆம் ஆண்டுக்கான 39 ஆவது தேசிய இளைஞர் விருதுப்போட்டிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இப்போட்டியானது பிரதேசம், மாவட்டம், தேசியம் என மூன்று மட்டங்களில் நடாத்தப்படவுள்ளன. வவுனியா மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் யுவதிகளை இவ் தேசிய இளைஞர் விருதுப் போட்டியில் பங்கேற்று, வெற்றிபெற்று மாவட்டத்தின் பெருமையை பறைசாற்ற வேண்டும் என இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ.கேசவன்  கோரிக்கை விடுத்துள்ளார். போட்டிக்காக விண்ணப்பிப்பவர்கள் 13 வயதிற்கும், 29 வயதிற்கும் உட்பட்டவர்களாக...
நாவலப்பிட்டியில் பிள்ளைகளின் பசியை தீர்ப்பதற்காக பலா மரத்தில் ஏறிய தந்தையொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பிள்ளைகள் பசியினால் வாடுவதால் அவர்களுக்கு இரவு உணவாக பலா சுளைகளை அவித்து கொடுக்கும் நோக்கில் பலா மரத்தில் ஏறிய நபர் அதிலிருந்து கீழே வீழ்ந்து உயிரிழந்துள்ளார். நாவலப்பிட்டி, கெட்டபுலா தோட்டத்தைச் சேர்ந்த 37 வயதான எஸ்.பெரியப்பன் என்ற நபரே சம்பவம் காரணமாக அண்மையில் உயிரிழந்துள்ளார். பெருந்தோட்டத் தொழிலாளர் சமூகத்தைச் சேர்ந்த குறித்த நபர் கடுமையான வறுமையில் வாடியவர் எனவும்,...