கூட்டு எதிர்க்கட்சியில் இணைந்து செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களை தம்பக்கம் இழுப்பதற்காக ஐக்கிய தேசியக்கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் நடவடிக்கை ஒன்றை ஆரம்பித்துள்ளதாக தெரியவருகிறது. ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து சென்று மகிந்த ராஜபக்ஸவுடன் இணைந்து கொண்டவர்கள் மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்ள தயாராகி வருவதாக கூறப்படுகிறது. கட்சியில் இருந்து சென்ற இவர்கள் தொடர்பாக கடும் நிலைப்பாட்டில் இருந்து வந்த ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, அவர்களை...
  தம்பி விக்னேஷ்.. வேதனையுடன் ஈழத்து அண்ணா எழுதுகின்றேன்... தம்பி விக்னேஷ்.. நீ போய்விட்டாய் உன் முடிவை சொல்ல வேறு வழிகள் இருந்தது. அவ்வாறு இருக்க நீ இறந்து போனது முட்டாள்தனம். நீ என் தம்பி என்பதற்காக உன் முடிவை ஆமோதிக்க முடியாது. நீ நெருப்பு. நீ இருந்திருக்க வேண்டியவன் இறந்திருக்க வேண்டியவன் அல்ல. நீ கட்சியின் தொண்டன் அல்ல நீ தமிழர்களின் தொண்டன் நீ இருந்திருக்கவேண்டியவன். நீ உண்மையானவன் நீ இறந்திருக்க வேண்டியவன் அல்ல...
  பதுளை - ஹாலி - எல பிரதேசத்தில் கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கி தனது தந்தையை கொலை செய்த 16 வயதான மகனை பொலிஸார் கைது செய்துள்ளனர். மதுபோதையில் வந்து தனது தாயை தாக்கியதன் காரணமாக ஆத்திரமடைந்த மகன் தந்தையை கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தாக்குதலில் படுகாயமடைந்த 41 வயதான தந்தை, வீட்டில் இருந்து வெளியேறியுள்ளதுடன் வீட்டுக்கு அருகில் விழுந்து இறந்துள்ளதாக கூறப்படுகின்றது. சந்தேக நபரான மகன் இன்று...
  அனுராதபுரம் சந்தஹிரு சேய தாதுகோபுரத்தில் நிர்மாணப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்த நான்கு இராணுவத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர். இராணுவத்தின் அனுமதியின்றி தனியார் வீட்டு நிர்மாணப் பணிகளில் ஈடுபட்ட குற்றத்திற்காக இராணுவ பொலிஸாரினால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அனுராதபுரம் நகர எல்லைக்குள் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் இரண்டு மாடி வீடு ஒன்றின் கூரையின் நிர்மாணிப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இராணுவத்தில் கொடுப்பனவுகளை பெற்றுக்கொண்டு சந்தஹிரு சேய தாதுகோபுரத்தின் நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டிருந்த...
  பாணந்துறை கடற்கரையில் நீராட சென்று காணாமல் போன இரு இளைஞர்களின் சடலங்கள் இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று பாணந்துறை கடற்கரையில் நீராட சென்ற நான்கு இளைஞர்கள் அலையில் இழுத்துச் செல்லப்பட்டனர். இந்த நிலையில், பொதுமக்களின் உதவியுடன் இரு இளைஞர்கள் காப்பாற்றப்பட்டனர். ஏனைய இருவரும் காணாமல் போன நிலையில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய ஒருவரின் சடலம் பாணந்துறை – கல்வெட்டிமோதர பிரதேசத்தில் கரையொதுங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது. மற்றைய இளைஞரின்...
  ஏறாவூர் பிரதேசத்தில் இடம்பெற்ற இரட்டைக்கொலை தொடர்பாக சந்தேகத்தில் பேரில் நான்கு பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். ஏறாவூர் பிரதேசத்தைச் சேர்ந்த மூவரும் ஓட்டமாவடிப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் பல தகவல்கள் வெளிவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 11.09.2016ம் திகதி ஏறாவூர்- முகாந்திரம் வீதியிலுள்ள வீட்டில் படுத்துறங்கிய 56 வயதான என்எம்.சித்தி உசைரா மற்றும் அவரது திருமணமான மகளான 32...
  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோர் ஒன்றாக சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பு கடந்த புதன் கிழமை நடந்துள்ளது. ஜனாதிபதியின் புதல்வர் டட்லி சிறிசேனவின் புதல்வரது திருமண நிகழ்வு கொழும்பு ஹில்டன் ஹொட்டலில் நடைபெற்றது. இதன் போதே மூவரும் சந்தித்துள்ளனர். மூன்று பேரும் ஒரு மேசையில் அமர்ந்து சுமார் 20 நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்தாக கூறப்படுகிறது. எது எப்படி இருந்த போதிலும் ஜனாதிபதி மைத்திரிபால...
  வாழ்கையில் அதிர்ஷ்டம் பலமுறை வந்தாலும் அதற்கான தக்க முயற்சிகளை சரியான சந்தர்ப்பத்தில் எடுக்காவிடின் ஒருபோதும் வெற்றி பெறாது. ஓர் காலகட்டத்தில் சென்னை தெருக்களில் பிச்சை எடுத்த ஓர் இளைஞர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் தனது பட்டப்படிப்பினை வெற்றிகரமாக முடித்துள்ளார். ஆந்திர மாநிலத்தில் ஏற்பட்ட பஞ்சம் காரணமாக சென்னை வந்த ஜெயவேல் என்ற இளைஞர் வேலை ஏதும் கிடைக்காததால் வறுமையின் பொருட்டு தனது பெற்றோருடன் பிச்சை எடுத்து வந்துள்ளார்.அப்போது தெருவோரம் வசிப்போரின் வாழ்க்கையை ஆவணப்படமாக...
  பூமிக்கு அருகாமையில் ஆபத்து ஒன்று ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளதாக புவியியல் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். பூமிக்கு அருகில் இன்று பயணிக்கும் பாரிய விண்கல் ஏதாவதொரு சமயத்தில் பூமி மீது மோதுண்டால், பாரிய அழிவுகள் ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளது. இந்த விண்கல்லின் நீளம் 200 அடி நீளம் கொண்டதென கண்டறியப்பட்டுள்ளது. எனினும் அவ்வாறான வாய்ப்புகள் மிகவும் குறைவு என துறைசார் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த விண்கல் பூமியில் மோத வாய்ப்பில்லை என இலங்கை வானியல் ஆராய்ச்சியாளர் சந்தன...
  நாட்டிற்குள் ஒரு மதம், ஒரு மொழி, ஒரே இனம் என்று செயற்பட்ட காலம் முடிவுக்கு வந்துள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். புதிய தலைமுறையினர் பல்லின, பல மதங்கள் மற்றும் பல மொழிகள் என்ற எண்ணக்கருவை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். முக்கிய பிரமுகர்கள் அரசியல் அதிகாரத்திற்காக இனவாதத்தை பரப்பி வருகின்றனர். விகாரைகள், பள்ளிவாசல்கள் மற்றும் கோவில்களுக்கு சென்றாலும் தனக்கு மதங்கள் எதுவும் இல்லை எனவும் மதங்களை தான் நம்புவதில்லை எனவும்...