முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் கொழும்பு 07, விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள ஆடம்பரமான உத்தியோகப்பூர்வ இல்லத்தில் மின்உயர்த்தி (lift) வாங்குவதற்காக இரண்டு நாடுகளில் உள்ள நலன் விரும்பிகள் உதவி செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த அந்த வீட்டில் மைத்திரிபால சிறிசேன 6 மாதங்களுக்கு மேலாக வசித்து வந்தார். பின்னர் ரூபா 40 மில்லியன் செலவில் குறித்த வீடு புதுப்பிக்கப்பட்டு மகிந்தவிடம் வழங்கப்பட்டது. எவ்வாறாயினும்,அண்மையில் மகிந்த ஜப்பானுக்கு விஜயம் செய்திருந்த போது தன்னுடைய உத்தியோகப்பூர்வ...
எந்த நேரத்திலும் நாடு பூராகவும் உள்ள அரச வைத்தியர்கள் வேலைநிறுத்தத்திற்கு தயாராக இருப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இதற்கான அனுமதியை தமது சங்கத்தின் மத்திய குழு வழங்கியுள்ளதாக சங்கம் குறிப்பிட்டுள்ளது. சுகாதார திணைக்களத்துக்கு புதிய பணிப்பாளரை நியமித்தல், தேசிய வைத்தியசாலைக்கு பிரதி பணிப்பாளரை நியமித்தல் உள்ளிட்ட சுகாதார அமைச்சின் பல திட்டங்களுக்கு எதிராகவே இந்த அறிவிப்பை அரச வைத்தியர் சங்கம் வெளியிட்டுள்ளது. அதற்கமைய சங்கத்தின் செயற்குழுவினால் குறிப்பிடப்படும் திகதியில் வேலைநிறுத்தத்தில்...
கடத்தப்பட்ட வர்த்தகர் மொஹமட் சாகீப் சுலைமான் தொடர்பில் தகவல் வழங்குவோருக்கு 5 மில்லியன் வழங்குவதாக அவரது தந்தை அறிவித்துள்ளார். பம்பலப்பிட்டியில் நேற்று முன்தினம் வர்த்தகர் மொஹமட் சாகீப் சுலைமான் கடத்தப்பட்டுள்ளார். இந்த நிலையில் இவரின் தந்தை சுலைமான் ஈசா இவர் தொடர்பான தகவல்கள் தெரிந்தால் அறிவிக்குமாறும் வேண்டுகோள்விடுத்துள்ளார். மேலும், இவர் தொடர்பான தகவல்கள் தெரிந்தவர்கள் 0770101971 என்ற இலக்கத்தக்கு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கோப்புகளை எடுத்து சென்ற ”பைல் அக்கா” என்ற அழைக்கப்பட்ட பெண் ஒருவர் அந்த காலப்பகுதிகளில் அதிகமாக பேசப்பட்ட ஒருவராவார். பைல் அக்கா என்று அழைக்கப்பட்டதற்கு அவரது பெயர் அயேஷா மதுஷானியாகும். அவர் இலங்கையின் இளம் தலைமுறையின் புகைப்பட கலைஞராகும். அந்த நாட்களில் அவரை மஹிந்த மாத்திரம் அல்ல நாமல் ராஜபக்ஷவையும் தெரியாதென அயேஷா தெரிவித்திருந்தார். தொழிலுக்காக தான் மேடையில் ஏறியதாக...
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனது 65வது ஆண்டு விழாவை கொண்டாடவுள்ளது. இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வினை கொண்டாடுவதற்கு தற்போது யாழ் குடாநாடும் தயாராகியுள்ளது. முன்னாள் பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவினால் 1951ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆரம்பிக்கப்பட்டு இன்று பெரு விருட்சம்போல எழுச்சியடைந்துள்ளது. இந்நிலையில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 4ஆம் திகதியுடன் 65 ஆண்டுகள் பூர்த்தியடையவுள்ள நிலையில் தனது 65வது ஆண்டு விழாவை கொண்டாடவுள்ளது.   யாழ்ப்பாணத்திலும்...
தனது நாட்டில் வசிக்கும் மக்களுக்காக மாதாந்தம் 2,500 டொலர்களை வழங்குவதற்கு சுவிஸ் அரசு தீர்மானித்துள்ளது. அதற்கமைய மக்கள் தொழில் புரியும் இடங்களிலேயே இதனைப் பெற்றுக்கொடுப்பதற்கும் அரசு தீர்மானித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதார இலாபத்தை நாட்டு மக்களுக்கு வழங்கும் நோக்கிலேயே இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய குழந்தைகளுக்காக மாதாந்தம் 675 டொலர்கள் வழங்கவுள்ளதோடு, வெளிநாடுகளில் இருந்து வந்து சுவிஸ்லாந்தில் வசிப்பவர்களுக்கான கொடுப்பனவாக குறித்த பணம் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களின் நிதி தேவையை நிவர்த்தி செய்யும்...
பிலிப்பைன்ஸ் நாட்டில் கடலில் மீன் பிடிக்க சென்ற மீனவர் ஒருவருக்கு ரூ.1,455 கோடி மதிப்ப்புள்ள உலகின் மிகப்பெரிய முத்து கிடைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள Palawan என்ற தீவில் பெயர் வெளியிடப்படாத மீனவர் ஒருவர் கடலில் மீன் பிடிக்க சென்றுள்ளார். அப்போது, கடலில் புயல் வீசத்தொடங்கியபோது பாதுகாப்பிற்கு நங்கூரத்தை வீசியுள்ளார். ஆனால், அந்த நங்கூரம் பாறை ஒன்றில் சிக்கியுள்ளது. நீண்ட நேரம் போராடி நங்கூரத்தை வெளியே எடுத்தப்போது அதில்...
என் வீட்டிற்கு பக்கத்து வீட்டில் ஒரு குடும்பம் வசித்துவந்தார்கள்…குடும்பத்தலைவர் அரசு வேலையில் இருந்தார் நல்ல குடும்பம் அன்பான மனைவி அழகான குழந்தைகள்.. திடீரென அவர் உடல் காரணமில்லாமல் இளைக்க ஆரம்பித்தது… இவரும் ஏதோ காய்ச்சல் போலிருக்கிறது என்று “SELF MEDICATION” எடுத்துக்கொண்டார் ஆனால் என்ன செய்தாலும் உடல் இளைத்துக்கொண்டே போவதை தடுக்கமுடியவில்லை இந்நிலையில் ஒரு நாள் நடக்கவே முடியாமல் அவர் நடந்துபோவதை பார்த்த நான் கிராமத்தில் இருக்கும் அவர்...
விவசாய நாடான இலங்கையில் பயிர்களை நட செய்து அறுவடை செய்யும் வரை விவசாயிகள் எதிர்கொள்ளும் சவால்களோ ஏராளம். குறிப்பாக கோடை காலங்களில் நீர் இல்லாமல் பயிர்கள் கருகி விவசாயிகள் பாரிய நட்டங்களை எதிர்கொண்டு வருகின்றமை யாவரும் அறிந்ததே. நீரை மிகவும் சிக்கனமாக பயன்படுத்தி வெற்றிகரமாக எவ்வாறு விவசாயம் செய்யலாம் என்பதே இன்று இலங்கையில் விவசாயிகள் எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்சினைகளில் ஒன்றாக காணப்படுகின்றது. அதற்கு சிறந்ததொரு தீர்வாக அமைந்ததே “அசையும் தூவல் நீர்ப்பாசனத்”...
திரைப்படத்தில் நடிக்க ஆரம்பித்துவிட்டாலே அவர்களது வாழ்க்கை, ஆடம்பரமாக மாறிவிடும், உல்லாசமான வாழ்வியல் முறை, வெளிநாடுகளுக்கு ஓசியில் செல்லலாம். பல பிரபலங்களுடன் நட்பு பெருகும். ஊடகங்களில் நமது பெயர் பெரிதாகும் என்ற எண்ணங்கள் தான் சாமானிய மனிதர்கள் மனதில் எழும். ஆனால், சினிமா வாழ்விலும், அதன் வாய்ப்புகளுக்கு பின்னணியிலும் மறைக்கப்பட்ட கருப்புப் பக்கங்கள் இருக்கின்றன. சினிமா வாய்ப்பு கிடைக்கவும், சில காலத்திற்கு பிறகு வாய்ப்புகள் இழந்த பிறகும் நடிகைகள் தள்ளப்படும்...