பாற்சோறு உணவை விட தைப்பொங்கல் உணவு சுவையானது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க யாழ்ப்பாணத்தில் வைத்து தெரிவித்தார். தேசிய தைப்பொங்கல் பண்டிகை நிகழ்வுகள் நேற்று யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், உலக சுற்றுச்சூழலில் மாற்றங்கள் நிகழ்வது போன்று உலக அரசியலிலும் மாற்றங்கள் நிகழ்கின்றன. அவ்வாறு மாற்றமடையும் சூரிய வெளிச்சம் தற்போது முழு இலங்கைக்கும் கிடைத்துள்ளதுடன்,...
வவுனியா, சிதம்பரபுரம் நலன்புரிநிலையத்தில் தங்கியுள்ள 194 குடும்பங்களுக்கும் தற்காலிக வீடுகள் அமைக்க வடமாகாண சுகாதார, மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் பா.சத்தியலிங்கம் அவர்களால் தற்காலிக வீடுகள் அமைக்க நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. வட மாகாண மீள்குடியேற்ற அமைச்சின் ஊடாக ஒரு குடும்பத்துக்கு 69700 ரூபாய்  வழங்கப்பட்டுள்ளது. யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து மீள்குடியேறுவதற்கு காணிகளற்ற நிலையில் கடந்த 25 வருடங்களுக்கு மேலாக இவ் நலன்புரி நிலையத்தில் 194 வரையான குடும்பங்கள் தங்கியுள்ளனர். இவர்களுக்கு தற்போது...
பிரபல ரக்பி வீரர் வசீம் தாஜுடீனின் கொலையுடன் தொடர்புடைய பாதுகாப்பு அதிகாரிகளுக்கும், இதனுடன் சம்பந்தப்பட்ட முன்னாள் அரசாங்கத்தின் உயர்பீட நபர் ஒருவருக்கும் இடையே சம்பவ தினத்தன்று தொலைபேசி கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் இந்த தொலைபேசி கலந்துரையாடலுக்கான ஆதாரங்கள் தங்களிடம் இல்லை என்று தெரிவித்திருந்த தொலைபேசி சேவை வழங்கும் தனியார் நிறுவனம், தற்போது அதற்கான ஆதாரங்கள் அனைத்தையும் விசாரணை நடத்தும் பிரிவினரிடம் ஒப்படைத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில் இந்த...
தங்கல்ல-மாரகொல்ல கடற்பரப்பிற்கு நீராட சென்ற பெண்ணொருவர் கடலில் மூழ்கி பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேற்படி சம்பவத்தில் சுவீடன் நாட்டைச்  சேர்ந்த 80 வயதான பெண்ணொருவரே  பலியாகியுள்ளதாக  பொலிஸார்  தெரிவித்துள்ளனர். மேலும், இந்தப் பெண் கடந்த சில நாட்களுக்கு முன்பே இலங்கைக்கு வருகைத் தந்துள்ளதாகவும் இவர் தங்கல்ல பிரதேச விடுதி ஒன்றில் தங்கியிருந்ததாகவும் முதற்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.  இச்சம்பவம் தொடர்பான  மேலதிக விசாரணைகளை தங்கல்ல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
தலவாக்கலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஒருவரால் தாக்கப்பட்டதாக கூறப்படும் இரண்டு நபர்களுக்கு பொலிஸ் பிணை வழங்கப்பட்டுள்ளது. இப்பொலிஸ் பிணையை வழங்க நுவரெலியா பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் கந்தே வத்த, மேற்படி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு 15.01.2016 அன்று மாலை பணித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, கடந்த வியாழன் அன்று இரவு 9.30 மணியளவில் தலவாக்கலை மத்திய பஸ் தரிப்பு நிலையத்தின் ஓரத்தில் அமைந்துள்ள முச்சக்கரவண்டி நிறுத்துமிடத்தில் நின்றுக்கொண்டிருந்த ஒருவரை, நகரில் இரவு...
கோவிலுக்கு செல்லும் வழியில் முச்சக்கரவண்டி ஒன்றால் மோதுண்டு பலத்த காயங்களுக்குள்ளான 8 வயது சிறுவன் மற்றும் அவருடைய சகோதரன் கண்டி வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஹற்றன் போடைஸ் பிரதான வீதியின் டிக்கோயா பட்டல்கலை பகுதியில் நேற்றிரவு இரவு 7.30 மணியளவில் விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, தைப்பொங்கல் தினமான நேற்று மாலை வேளையில் பட்டல்கலை தோட்ட பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றுக்கு வழிபாட்டுக்கென...
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனுக்குமிடையில் அண்மைக்காலமாக நிலவி வந்த முரண்பாடுகள் யாழில் நடைபெற்ற தேசிய தைப்பொங்கல் நிகழ்வின் மூலம் நிறைவுக்கு வந்துள்ளன. யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற தேசிய தைப்பொங்கல் நிகழ்வில் அதிதியாகப் பங்கேற்பதற்காக வருகைதந்திருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை மண்டபத்தின் வாயிலுக்குச் சென்று கைலாகுகொடுத்து பொன்னாடை போர்த்தி தலைப்பாகை சூடி இன்முகத்துடன் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் வரவேற்றிருந்தார். அதனைத் தொடர்ந்து இருவரும் அருகருகிலுள்ள...
2014ம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதார உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளில் வட மாகாணமும், யாழ்ப்பாண மாவட்டமும் முதலாம் இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளன. பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் சிறந்த மாகாணமாக வட மாகாணமும், சிறந்த மாவட்டமாக யாழ்ப்பாண மாவட்டமும் சாதனை படைத்துள்ளன. கடந்த 2013ம் ஆண்டில் சிறந்த மாகாணமாக சபரகமுவ மாகாணமும், சிறந்த மாவட்டமாக கிளிநொச்சி மாவட்டமும் பதிவாகியிருந்தன. பரீட்சை திணைக்களத்தின் ஆய்வுகளின் அடிப்படையில் வட மாகாணத்தில் பரீட்சையில் சித்தி அடைந்தவர்களின் வீதம் 65.23...
இலங்கை அரசு மேற்கொண்ட இன அழிப்பு யுத்தத்தின் பின்னர் ஒரு லட்சத்து நாற்பதாயிரம் பேருக்கு என்ன நடந்தது என்று குரல் எழுப்பியவர் மதிப்பிற்குரிய மன்னார் ஆயர் இராயப்பு யோசப்பு அவர்களே. இலங்கையில் நடந்த இன அழிப்பு யுத்தம் குறித்து தமிழ் தலைமைகள் கூட மௌனித்திருந்த நிலையில் அதை தன்னுடைய தெளிவான பார்வை ஊடாக முறையாக முன்வைத்தார் அல்லது கேள்வி எழுப்பினார். ஈழத்தில் பல மதபோதகர்களுக்கு என்ன நடந்தது என்பதை கடந்த காலத்தில்...
    கிளிநொச்சி தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் காரியாலயமான அறிவகத்தில் இன்று பொங்கல் நிகழ்வுகள் சிறப்புற நடைபெற்றது. கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கௌரவ மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் பிரதேச சபைகளின் முன்னாள் உறுப்பினர்கள் கட்சியின் அமைப்பாளர்கள் ஆதரவாளர்கள் எனப்பெருமளவானோர் கலந்து சிறப்பித்தனர். இன்று வரை தமிழ்மக்களின் அவலங்கள் துயரங்கள் ஆறாத போதிலும் தமிழர்கள் தமது பண்பாட்டு நிகழ்வாகிய தைப்பொங்கல் தினத்தை மிகவும் அமைதியான முறையில் பொங்கலிட்டு...