இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் தொடர்ச்சியாக குண்டு வெடிப்புக்கள் மற்றும் துப்பாக்கி பிரயோகங்கள் இடம்பெற்று வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், தற்போது துப்பாக்கிச்சூட்டுச் சத்தங்கள் தொடர்ச்சியாக கேட்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவத்தில் மூவர்  உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடக தகவல்கள் குறிப்பிடுகின்றன. மேலும், இந்த குண்டு வெடிப்பானது இந்தோனேஷிய ஜனாதிபதி மாளிகைக்கும், அந்நாட்டு ஐ.நா அலுவலகங்கள் அருகே இடம்பெற்றுள்ளது. அந்த நாட்டு பொலிஸாரின் தகவல்களின் அடிப்படையில், இந்த தாக்ககுதலின் பின்னால் பலமான ஒரு ஆயுதக்குழு இருப்பதாகவும், இதன்போது...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண முதலமைச்சராகவே நீங்கள் செயற்பட வேண்டும். இந்தப் பெயரைப் பயன்படுத்திக்கொண்டு வேறு தளங்களில் நீங்கள் இயங்குவதை நாம் விரும்பவில்லை. எங்களுடைய முதலமைச்சராகவே இருக்கவேண்டும். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட வடக்கு மாகாணசபையின் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் அழுத்தம் திருத்தமாக முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எடுத்துரைத்துள்ளனர். "உங்களை யாரோ சிலர் தவறாக வழிநடத்த முயற்சிக்கின்றனர். இதிலிருந்து விடுபட்டு நீங்கள் மீண்டும் எங்களின் முதலமைச்சராக எங்களோடு இணைந்து பணியாற்றவேண்டும்" என்றும்...
இறுதிக்கட்ட போரில் நிகழ்ந்த போர்க்குற்றங்கள் தொடர்பில் முழுமையான தகவல்களை அறிந்துள்ள இராணுவ ஜெனரல் ஒருவருக்கு வெளிநாடொன்றில் இராஜதந்திரப் பதவி வழங்கப்பட்டுள்ளது. வன்னியில் நடைபெற்ற இறுதிக்கட்டப் போரின் போது அடிப்படை மனித உரிமைகள் மற்றும் போர் விதிகள் கடுமையாக மீறப்பட்ட நிலையிலேயே இராணுவத்தினர் புலிகளுக்கு எதிரான யுத்த வெற்றிகளைப் பெற்றிருந்தனர். இதன் காரணமாக போர் நிறைவடைந்து ஆறு ஆண்டுகள் கடந்த பின்னரும் போர்க்குற்றங்கள் தொடர்பிலான சர்வதேச விசாரணைக்கு பாதிக்கப்பட்ட மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில்...
ஆட்கடத்தல் சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் அடிப்படையில் கடற்படை உத்தியோகத்தர்கள் சிலர் விரைவில் கைது செய்யப்படவுள்ளனர். எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் இவ்வாறு கடற்படையினர் கைது செய்யப்படவுள்ளனர். சம்பவம் தொடர்பில் கடந்த 12ம் திகதி கொழும்பு கோட்டே நீதிமன்றில் வழக்கு விசாரணை நடத்தப்பட்டது. இதன் போது, சம்பவத்துடன் தொடர்புடைய கடற்படை உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட உள்ளதாக புலனாய்வுப் பிரிவினர், கோட்டே நீதவான் பிரியந்த லியனகேவிடம் தெரிவித்துள்ளனர். புலனாய்வுப் பிரிவின்...
அரசமைப்பு உருவாக்கம் தொடர்பில் நல்லாட்சிக்குள் பாரிய கருத்து முரண்பாடுகள் நிலவிவருவதால் இச்சட்டமூலம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு அதன் அனுமதி பெறப்பாடமல் நாடாளுமன்றத்தில் நேரடியாக சமர்ப்பிக்கப்பட்டது. இதனாலேயே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி திருத்த யோசனைகள் முன்வைத்துள்ளது. இவற்றினை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக் கொண்டுள்ளதாக சு.க. கூறினாலும் அதனை அவர் நிராகரித்துள்ளார். இவ்வாறு கூட்டு எதிர்க்கட்சி தெரிவித்தது. அரசமைப்பு உருவாக்கம் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முன்வைத்துள்ள திருத்த யோசனைகளும் கூட்டு எதிர்க்கட்சி முன்வைத்துள்ள யோசனைகளும்...
மன்னார் பிரதேச சபையின் புதிய செயலாளராக வரணி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இராசையா தயாபரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர், கடந்த திங்கட்கிழமை தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் கடந்த 17 வருடங்கள் அரச சேவை அனுபவத்தை கொண்டிருப்பதுடன், பிராந்திய சுகாதார சேவைகள் அலுவலகம், பிரதி விவசாயப் பணிப்பாளர் அலுவலகம், வலயக்கல்வி அலுவலகம் என்பவற்றில் பணியாற்றியுள்ளதுடன், கிளிநொச்சி, யாழ்ப்பாணம், வவுனியா என பல மாவட்டங்களிலும் கடமையாற்றியுள்ளார். முகாமைத்துவ உதவியாளர் சேவையின் தரம் I I , I என...
பௌத்த பிக்குகள் குறித்த உத்தேச சட்டத்தில் பல பாதக விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்ன தேரர் தெரிவித்துள்ளார். இந்த உத்தேச சட்டத்தில் பௌத்த பிக்கு சமூகத்திற்கு பாதகமான தீங்கு ஏற்படுத்தக் கூடி பல விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இவ்வாறான சட்டங்கள் மிக விரிவான பேச்சுவார்த்தைகள் கலந்துரையாடல்களின் பின்னரே சமர்ப்பிக்கப்பட்டிருக்க வேண்டும். எடுத்த எடுப்பிலேயே இவ்வாறான சட்டங்களை சமர்ப்பிக்கக் கூடாது. அவசர அவசரமாக இவ்வாறான சட்டங்களை அமுல்படுத்துவதனால் பௌத்த சாசனத்திற்கோ அல்லது பௌத்த...
புதிய வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் வாகனங்களின் விலைகள் 20 வீதத்தினால் அதிகரிக்கப்படவுள்ளன. வாகன இறக்குமதியாளர் சம்மேளன தலைவர் மஹிந்த சரத்சந்திர இதனை தெரிவித்துள்ளார். வரவு செலவுத்திட்ட யோசனைப்படி நவம்பர் 18. 2015 முதல் சுங்கத்தீர்வையும், சுங்க மதிப்பீட்டு கட்டணமும் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாகவே இறக்குமதி வாகனங்களின் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளன. குறிப்பாக வாகனம் ஒன்றின் விலை சுமார் 5 லட்சம் ரூபாய்களால் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
2016 ஜூனில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை அமர்வின் முன்னர் இலங்கையில் ஐக்கிய நாடுகளின் யோசனைகளை நடைமுறைப்படுத்தும் என்று பிரித்தானிய அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. இலங்கைக்கு இன்று விஜயம் செய்யவுள்ள பிரித்தானிய வெளியுறவு இராஜாங்க அமைச்சர் ஹுகோ ஸ்வைர், விஜயத்துக்கு முன்னர் இந்தக்கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். கடந்த தடவை தாம் இலங்கைக்கு சென்றிருந்தபோது குறுகிய காலத்துக்குள் இலங்கை அரசாங்கம் யோசனைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் சந்தேகம் இருந்தது. எனினும் தற்போது இலங்கை அரசாங்கம்...
உத்தியோகபூர்வ பயணம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார செயலாளர் எஸ். ஜெய்சங்கர், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனை சந்தித்துள்ளார். உத்தியோகபூர்வ பயணம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார செயலாளர் எஸ். ஜெய்சங்கர், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனை சந்தித்துள்ளார். கொழும்பில் இன்று காலை நடைபெற்ற இந்த சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் நீடித்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார். பிரதானமாக அரசாங்கம் தயாரிக்க உள்ள உத்தேச...