‘புதிய ஆட்சியில் புதிய புலனாய்வாளர்கள்’ இவர்கள் மத்தியில் தான் எம் போராட்டம் நடைபெறுகிறது ஒரு அரசியல் கைதியை மட்டும் விடுவித்து விட்டு சர்வதேசத்திற்கு நல்ல பிள்ளையாக தனது முகத்தை காட்டி வருகின்றது இந்த புதிய அரசாங்கம் இவ்வாறு வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்தார். இன்று யாழ்.பேருந்து நிலையத்தில் யாழ்.வருகை தரவுள்ள ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட அரச தரப்பினர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட கறுப்புக் கொடிப் போராட்டத்தில் கலந்து...
இலங்கை ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ள தேசிய பொங்கல் விழா நடைபெறவுள்ள பலாலி இராஜேஸ்வரி ஆலயத்திற்கு அண்மையில் உள்ள படைமுகாங்களை அகற்றும் நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். இராணுவ அதி உயர்பாதுகாப்பு வலையத்திற்குள் உள்ள பலாலி கண்ணார் வயல் சிறீ இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலையத்தில் தேசிய பொங்கல் விழாவினை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த நிகழ்வு நடைபெறவுள்ள ஆலயத்தினை சூழவும், அதனை அண்மித்தும் உள்ள படைமுகாங்கள் அகற்றும் நடவடிக்கையில் இராணுவத்தினர்...
ஈரான் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த 10 அமெரிக்க கடற்படை வீரர்கள் ஈரான் ராணுவத்தால் கைது செய்யப்பட்டனர். இந்தக் கைது நடவடிக்கையின் போது அவர்கள் மன்னிப்பு கேட்டு சரணடைந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் தீயாக பரவி வருகிறது. ஈரானுக்குச் சொந்தமான பார்சி தீவை ஒட்டிய கடல் எல்லைக்குள் இரு அமெரிக்க போர்ப் படகுகள் நேற்று முன் தினம் நுழைந்தன. இதையடுத்து, அந்தப் படகுகளில் இருந்த 10 கடற்படை வீரர்களை ஈரான்...
விநாயகர் சதுர்த்தி, கிருஷ்ண ஜெயந்தி உள்ளிட்ட பண்டிகைகளுக்கு விடுமுறை இருக்கும்போது, தைப்பூசத்துக்கு ஏன் விடுமுறை இல்லை என்று கேள்வி எழுப்பி உள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான். அண்டை மாநிலங்கள் கொண்டாடும் பண்டிகைகளுக்கு தமிழக அரசு பொது விடுமுறை அளித்து வரும் நேரத்தில் கடந்த சில வருடங்களாக தைப்பூசத் திருநாளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என்கிற கோரிக்கைக்கு தமிழக அரசு ஏன் செவி சாய்க்கவில்லை என்று கேள்வி எழுப்பி உள்ளார்...
ஈராக்கில் நடைபெற்ற போரில் ரமாடி நகரத்தை இழந்துவிட்டதன் காரணமாக கோபம் கொண்ட ஐ.ஸ் அமைப்பு தனது படைவீரர்களை உயிருடன் எரித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஈராக்கின் அன்பர் மாகாணத்தில் உள்ள ரமாடி நகரை கடந்த ஆண்டு மே மாதம் ஐ.எஸ் தீவிரவாதிகள் கைப்பற்றினர், அந்நகரை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்ட வந்த பின்னர், அங்கு பொதுமக்களை கொடுமைப்படுத்தி பல்வேறு அட்டூழியங்களை செய்து வந்தனர். இந்நிலையில், அமெரிக்க கூட்டுப்படை உதவியுடன் ஈராக் நாடு, ஐஎஸ்...
பப்புவா நியூ கினியா பகுதியில் சுற்றுலா சென்ற பிரித்தானிய தொலைக்காட்சி நடிகர் ஒருவர் பழங்குடியினரால் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பிரித்தானியா தொலைக்காட்சி நடிகரான Matthew Iovane என்பவர் தமது அமெரிக்க தோழியான Michelle உடன் விடுமுறையை கழிக்கும் பொருட்டு பப்புவா நியூ கினியா வனப்பகுதிக்கு சென்றுள்ளனர். அங்கு அவர்கள் வனத்தினை ஒட்டி வாழ்ந்து வரும் கிராம மக்களை சந்தித்து அவர்களுடன் தங்கி அவர்கள் தரும் உணவினை உண்டு 5 நாட்கள்...
பிரான்சின் ஆல்ப்ஸ் மலையில் பள்ளி மாணவர்கள் அடங்கிய குழு பனிச்சறுக்கில் ஈடுபட்டிருந்த போது திடீர் பனிச்சரிவில் சிக்கி 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பிரான்சின் லியோன் நகரில் அமைந்துள்ள Saint-Exupery பள்ளி மாணவர்கள் அடைங்கிய குழு ஒன்று ஆல்ப்ஸ் மலையில் உள்ள Les Deux பகுதியில் பனிச்சறுக்கில் ஈடுபட்டுள்ளனர். அப்போது திடீரென்று அப்பகுதியில் கடுமையான பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது, அதில் பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும் அடங்கிய குழு சிக்கியுள்ளது. தகவல் அறிந்து...
புதிய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்க நாடாளுமன்றத்தை அரசியலமைப்புச் சபையாக மாற்றுவதற்காக பிரதமர் முன்வைத்த யோசனைக்கு திருத்தங்களையும் யோசனைகளையும் முன்வைத்த போது அவற்றை ஏற்றுக்கொண்டு விட்டுக்கொடுப்பு பிரதமர் நடந்து கொண்டதாக அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். யோசனை சம்பந்தமாக முன்னாள் அமைச்சர் தினேஷ் குணவர்தன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிடம் திருத்தங்களை முன்வைத்த போதிலும் அவற்றின் மூலம் கட்டமைப்பு ரீதியான எந்த மாற்றங்களும்...
இலங்கையின் புலனாய்வு பிரிவில் ஆளணி வளப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குற்ற விசாரணைப் பிரிவில் நீண்டகாலமாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் 7000 கோவைகள் குவிந்து கிடக்கின்றன. இந்த விசாரணைகளை மேற்கொள்ள அந்த துறைகளைச் சார்ந்த புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர்கள் 650 பேர் மட்டுமே கடமையாற்றி வருகின்றனர். ஒவ்வொரு உத்தியோகத்தருக்கும் சுமார் 125 கோவைகள் என்ற அடிப்படையில் விசாரணைகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் விசாரணைகளை துரிதப்படுத்துவதில் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக பொலிஸார், பொலிஸ் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு...
இலங்கை விமானப்படைக்காக போர்விமானங்களை கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படு வருவதாக பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவி்த்துள்ளார். இலங்கை விமானப்படையில் காணப்படும் போர் விமானம் 30 வருடங்கள் பழைமையானது எனவும் அதன் பாவனைக்காலம் முடிவடைந்துள்ளதாகவும் விமானப்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இதனால் விமானப்படைக்கு புதிய ரக போர் விமானங்கள் தேவைப்படுவதாகவும் தெரிவித்தார். இதற்காகவே போர்விமானங்கள் கொள்வனவு செய்யப்படவுள்ளன. ஆனால் எந்த நாட்டிலிருந்து போர் விமானங்கள் கொள்வனவு செய்வது என்பது பற்றி இதுவரை தீர்மானிக்கப்படவில்லை...