அச்சுவேலி பொதுமக்கள் இன்று காலை முதல் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலையில் சுவீகரிக்கப்படவுள்ள தமது காணிகளின் முன்னால் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

509

தமிழ் மக்களிற்கு சொந்தமான காணிகளில் நிலை கொண்டுள்ள படையினர் அவற்றை நிரந்தரமாக சுவீகரிக்க எடுத்துள்ள முயற்சிகளிற்கு மக்கள் எதிர்ப்புக்களை வெளியிடத்தொடங்கியுள்ளனர். அவ்வகையில் அச்சுவேலி தென்மராட்சி நுணாவில் பகுதிகளில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை சுவீகரிக்க ஏதூவாக நில அளவை செய்யும் முயற்சிகளை அவாகள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

அச்சுவேலி பொதுமக்கள் இன்று காலை  முதல் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலையில் சுவீகரிக்கப்படவுள்ள தமது காணிகளின் முன்னால் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

 

யாழ்.குடாநாட்டினை படையினர் கைப்பற்றிய காலம் முதல் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அச்சுவேலி பலநோக்கு கூட்டுறவு தலைமை அலுவலக கட்டிடத்தொகுதி மற்றும் அதனை அண்டியுள்ள சுமார் ஒன்பது ஏக்கர் வரையிலான நிலப்பரப்பினை நிரந்தரமாக சுவீகரிக்க தற்போது இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.   குறித்த காணியில் பெருமளவிலான நிலப்பரப்பு படையினரது விளையாட்டு மைதானமாகவே அமைந்துள்ளதுடன் யாழ்ப்பாணம்- அச்சுவேலி வீதி மற்றும் நிலாவரை வீதிகளை உள்ளடக்கியதாக இத்தளம் அமைந்துள்ளது.

குறித்த காணிகளை சுவீகரிப்பதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கையாக இன்று நில அளவை பணிகள் நடைபெற்றவேளை அங்கு வந்த நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன், வடமாகாணசபை அவைத்தலைவர், அமைச்சர் பொ.ஜங்கரநேசன் உறுப்பினர்கள், மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர், காணி உரிமையாளர்கள் மற்றும்  பொதுமக்களும் இணைந்து நில அளவை பணிகளை தடுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.   அதனைத் தொடர்ந்து நிலஅளவை பணிகள் நிறுத்தப்பட்டதுடன் பொலிஸ் அதிகாரிகள் மக்களுடன் பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டனர். நில அளவை அதிகாரிகள் தாம் திரும்பி செல்கின்ற போதும் இது தொடர்பில் உரிய முறைப்பாடுகளை செய்யப்போவதாக கூறினர்.

இதே போன்று தென்மராட்சியின் ஏ-9 வீதியோரமாக நுணாவில் பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை இன்று நில அளவை செய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.அங்கும் திரண்ட மக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளது முற்றுகையினால் நிலஅளவை பணிகள் நிறுத்தப்பட்டதுடன் பொலிஸ் அதிகாரிகள் மக்களுடன் பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டனர்

.எனினும் நில அளவை பணிகளிற்கு மக்கள் ஆதரவு தர மறுத்து அவர்களை திருப்பி அனுப்பினர்.அதேவேளை இராணுவ முகாமுக்காக காணி அளவீடு செய்வதை தடுக்கும் நோக்குடன் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் வடமாகாண சபை சபாநாயகர் சி.வி.கே. சிவஞானம் மாகாண சபை உறுப்பினர்களான சு.சுகிர்தன் பா.கஜதீபன் எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் பரஞ்சோதி ஆகியோரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரனும் சம்பவ இடத்திற்கு வருகை தந்திருந்தனர்.நேரடியாக களத்தில் நிற்கும் பா.உ சி.சிறிதரன்,

 

 

SHARE