அஜித் மெக்கானிக்கல் இன்ஜினியர் ஆனாரா?

407

ajith_008

அஜித் தற்போது கௌதம் மேனன் படத்தில் நடித்து கொண்டிருக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே. இதில் தல கல்லூரி மாணவனாக ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பார் என்றும் அதை படக்குழு ரகசியம் காத்துவருகிறது எனவும் நெருங்கியவட்டாரங்கள் தெரிவிக்கின்றன.தற்போது இப்படத்தை பற்றி ருசிகர தகவல் ஒன்று வந்துள்ளது. எப்போதும் கௌதம் தன் படத்தின் நாயகர்களை மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்தவராக வெளிப்படுத்துவார். அதே போல் சமீபத்தில் வந்த படத்தின் அஜித் லுக்கில், தல கையில் ஒரு காப்பு அணிந்திருந்தார்.அந்த காப்பில் ஸ்பேனரை வளைத்து வைத்தது போல் வித்தியாசமாக தெரிகிறது. இதை பார்த்தால் ஒருவேளை அஜித்தும் மெக்கானிக்கல் இன்ஜினியராக வருவார் என்று கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.

SHARE