அஜீத் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு தகுதியானவர் கே.எஸ். ரவிக்குமார்.

398
அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு தகுதியானவர் அஜீத் தான்: கே.எஸ். ரவிக்குமார்

அடுத்த சூப்பர் ஸ்டார் அஜீத் தான் என்று இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இருக்கையில் அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற பேச்சு அவ்வப்போது எழுவதும் அடங்குவதும் வழக்கம்.

இந்நிலையில் பிரபல வார பத்திரிக்கை ஒன்று அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற கருத்துக்கணிப்பை நடத்தி முடிவை வெளியிட்டது. கருத்துக்கணிப்பில் விஜய் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

கருத்துக்கணிப்பை நடத்தி தன்னை அடுத்த சூப்பர் ஸ்டாராக அறிவித்த பத்திரிக்கைக்கு விஜய் நன்றி தெரிவித்து கடிதம் ஒன்றை எழுதி அனுப்பினார்.

இயக்குனர் கே.எஸ். ரவிக்குமாரிடம் அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு யார் பொருத்தமானவர் என்று ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கேட்டனர்.

என் மனச்சாட்சிபடி அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு தகுதியானவர் என்றால் அது அல்டிமேட் ஸ்டார் தான் என்று ரவிக்குமார் பதில் அளித்துள்ளார்.

ரவிக்குமார் அஜீத்தை வைத்து வில்லன் மற்றும் வரலாறு ஆகிய படங்களையும், விஜய்யை வைத்து மின்சார கண்ணா படத்தையும் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரவிக்குமார் தற்போது ரஜினிகாந்தை வைத்து லிங்கா படத்தை இயக்கி வருகிறார். நிஜத்திலும் ரவிக்குமார் ரஜினிக்கு நெருக்கமானவர்.

 

SHARE