அடுத்த மாதம் ‘ஐ’ ஆடியோ ரிலீஸ்!

415

ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரிப்பில் ஷங்கர் இயக்கும் ‘ஐ’ படம் நீண்டகால தயாரிப்பாக உருவாகி வருகிறது. விக்ரம், எமிஜாக்சன், சுரேஷ்கோபி, ராம்குமார் மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட்புரடக்ஷன்ஸ் வேலைகள் இப்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. சில நாட்களுக்கு முன்தான் இப்படத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், இசையமைப்பாளர் அனிருத் ஒரு பாடலை பாடினார்.
ஐ படத்திற்கு இசை அமைக்கும் ஏ.ஆர்.ரஹ்மான், ‘இப்படத்தின் அனைத்து பாடல்களின் வேலைகளையும் முடித்துவிட்டு ‘மாஸ்டர் காப்பி’யை கொடுத்து விட்டேன், விரைவில் பாடல்கள் வெளியாகும்’ என்று தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். ரஹ்மானிடமிருந்து மாஸ்டர் காப்பி கைக்கு வந்த உடனே ஆடியோவை அடுத்த மாதம் (ஆகஸ்ட்) வெளியிட திட்டமிட்டு, அதற்கான வேலைகளை துரிதப்படுத்தியுள்ளாராம் ஷங்கர். ஆடியோ வெளியீட்டு விழா முடிந்ததும், ஐ படத்தை செப்டம்பர் மாதம் பிரம்மாண்டமான முறையில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்!
SHARE