அதிவேக பாதையின் நிர்மாணப் பணிகள் குறித்த பேச்சு ஆரம்பம்

547
download

நிர்மாணம், இயக்கம் மற்றும் மாற்றுகை (பிஓடி) என்ற திட்டத்தின் வடக்குக்கான அதிவேக பாதை அமைப்புக்கான பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இது தொடர்பில் தற்போது சீன நிறுவனம் ஒன்றுடன் பேச்சுக்கள் இடம்பெறுவதாக பெருந்தெருக்கள் துறை அமைச்சின் செயலாளர் ரஞ்சித் பிரேமஸ்ரீ தெரிவித்துள்ளார்.

இந்த பாதை தம்புள்ளையில் இருந்து ஆரம்பமாகவுள்ளது. இந்தப்பாதை எந்தரமுல்ல என்ற இடத்தில் இருந்து ஆரம்பிக்கும். அத்துடன் கொழும்பின் சுற்றுப்புற பாதைகளான கம்பஹா, மீரிகம, குருநாகல் முதல் தம்புள்ளை ஆகிய இடங்களில் வெளியேறும் வழிகள் அமைக்கப்படும்.

இந்த பாதையில் நான்கு பிரிவுகள் அமைக்கப்படும் அது பின்னர் 6 பிரிவுகளாக விரிவுப்படுத்தப்படும்.

இதன்படி தம்புள்ளை அதிவேகபாதை திருகோணமலைக்கும் வடக்கும் தமது கிளைகளை கொண்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

 

SHARE