அந்த விஷயத்தில் விஜய்யை தொடவில்லையா அஜித்- கலாய்த்து விமர்சிக்கும் ரசிகர்கள்

46

 

எம்.ஜி.ஆர்-சிவாஜி, ரஜினி–கமலுக்கு அடுத்து தொடர்ந்து வருகிறது விஜய்-அஜித் ரசிகர்களின் சண்டை. எந்த பிரபலங்களின் ரசிகர்களும் போடாத சண்டையெல்லாம் விஜய்-அஜித் ரசிகர்களால் நடந்துவிட்டது.

ஒருகட்டத்தில் சமூக வலைதளம் பயன்படுத்தும் அனைவருமே இந்த ரசிகர்களின் நாயகர்கள் இவர்களுக்கு ஏதாவது கூறலாமே, கண்டுகொள்ளலாமே என புலம்பியுள்ளனர். அந்த அளவிற்கு இவர்களின் சண்டை ஒருகாலத்தில் பயங்கர பிரச்சனையாக மாறி இருந்தது.

ஆனால் இப்போது புயல் பாதிப்பில் இருக்கும் மக்களுக்கும் இவர்களின் ரசிகர்கள் ஒன்றுசேர்ந்து உதவி வருகிறார்கள். ஆனாலும் இவர்களுக்குள் சில சண்டைகளும் வர தான் செய்கிறது.

கலாய்க்கும் ரசிகர்கள்
தற்போது விஜய் ரசிகர்கள் அஜித்தை ஒரு விஷயத்திற்காக கலாய்த்து வருகிறார்கள். மகிழ்திருமேனி படத்தை தொடர்ந்து அஜித்தின் 63வது படத்தை மார்க் ஆண்டனி பட புகழ் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தான் இயக்க உள்ளாராம்.

இந்த படத்திற்காக நடிகர் அஜித்துக்கு ரூ. 165 கோடி சம்பளம் பெற உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. ஆனால் விஜய் 68வது படத்திற்காக ரூ. 200 கோடி வரை சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாம்.

முன்னணி நடிகராக இருந்தும் இன்னும் விஜய்யின் சம்பளத்தை அஜித் நெருங்க வில்லையே என ரசிகர்கள் சிலர் கலாய்த்து வருகிறார்கள்.

SHARE