அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் கேட்போர் கூடத்தில் நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சின் ஏற்பாட்டில் மேற்படி கலந்துரையாடல்

406

யாழ்ப்பாணம் கிளிநொச்சி நீர்வழங்கல் மற்றும் கழிவகற்றல் திட்டம் தொடர்பாக தொழிற்துறைசார்ந்தவர்களுடனான கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.

கொழும்பில் அமைந்துள்ள அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் கேட்போர் கூடத்தில் நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சின் ஏற்பாட்டில் மேற்படி கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

இதில் வரவேற்பு உரையினையும் அறிமுக உரையினையும் நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சின் செயலாளர் நிஹால் சோமவீர நிகழ்த்தினார்.

தொடர்ந்து யாழ்ப்பாணத்துக்கான ஆற்றுநீர்த்திட்டம் தொடர்பாக முன்னாள் நீர்ப்பாசன பொறியியலாளர் ஆறுமுகம் திருமுகம் விக்னராஜாவும் இரணைமடுத்திட்டம் தொடர்பாக யாழ்ப்பாண பல்கலைக்கழக சிவில் பொறியியல்பீடத் தலைவர் கலாநிதி சிவகுமாரும் நிகழ்த்த ஆசிய அபிவிருத்தி வங்கியின் கருத்திட்டத்தின் பிரதிப் பொது முகாமையாளர் திலின விஜயதுங்க யாழ்ப்பாணம் கிளிநொச்சி நீர்வழங்கல் கழிவகற்றும் திட்டம் பருத்தித்துறை நீர்வழங்கல் திட்டம் ஜெய்க்கா நிறுவனத்தின் கிளிநொச்சி நீர் வழங்கல் திட்டம் தொடர்பாக விளக்கவுரைகளை நிகழ்த்தினார்.

நீர்ப்பாசனத்திணைக்களத்தின் வடமத்திய மாகாண நீர் விநியோகத் திட்டம் மற்றும் மகாவலி நீரை கனகராயன் குளத்திற்கு கொண்டு செல்வது தொடர்பாக நீர்ப்பாசனத்திணைக்களத்தின் ஆலோசகர் தயாரத்ன உரைநிகத்தினார்.

தொடர்ந்து மனிதவள ஆலோசகர் லயனல் பெர்னாண்டோ நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சின் செயலாளர் நிஹால் சோமவீர பொறியியலாளர் ஆறுமுகம் திருமுகம் விக்கினராஜா ஆகியோர் முன்னிலையில் திறந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன்போது யாழ்.குடாநாட்டுக்கான யாழ்.கிளிநொச்சி இரணைமடு குடிநீர்த்திட்டம் யாழ்ப்பாணத்தின் நீர் தேவையை நிவர்த்தி செய்தல் கழிவகற்றல் திட்டத்தை உரிய முறையில் நடைமுறைப்படுத்தல் முக்கியமாக யாழ்.குடாநாட்டுக்கான குடிநீரை பெற்றுக் கொடுப்பதில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள கருத்திட்டங்கள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

அதுமட்டுமன்றி யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டங்களில் விவசாயத்துக்கானதும் கால்நடைகளின் குடிநீர்த் தேவைக்குமாக முன்னெடுக்கப்பட வேண்டிய திட்டங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.

இதனடிப்படையில் மாற்றுவழித்திட்டங்கள் நடைமுறைப்படுத்துவது இன்றைய கலந்துரையாடலில் முன்வைக்கப்பட்ட பிரேரணைகளின் அடிப்படையில் விவசாயிகளினதும் பொதுமக்களினதும் நலத்திட்டங்கள் மற்றும் கருத்திட்டங்கள் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டது.

இதன்பிரகாரம் யாழ்;ப்பாணத்துக்கான நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சின் ஊடான வலையமைப்பு சேவை விரைவில் நிறுவப்படவுள்ளதாக அமைச்சின் செயலாளர் நிஹால் சோமவீர தெரிவித்தார்.

 

SHARE