அனுமதி பத்திரம் இன்றி எந்தவொரு பேருந்தும் சேவையில் ஈடுபட முடியாது- யாழ்.பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யு.ஜ.விமலசேன

416

யாழ் – கொழும்பு சேவையில் வழிதட அனுமதி பத்திரம் இன்றி எந்தவொரு பேருந்தும் சேவையில் ஈடுபட முடியாது. இதை நாம் அனுமதிக்கமாட்டோம் என யாழ்.பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யு.ஜ.விமலசேன தெரிவித்தார்.

இப்பொழுது நான் சேவையில் ஈடுபடும் பேருந்துகளை பரிசோதிக்க உத்தரவிட்டிருப்பதாகவும் அதேவேளை அனுமதிக்கப்பட்ட பேருந்துகளின் இலக்கங்களை ஊடகவாயிலாக அறிவிக்க இருப்பதாகவும், அதன் மூலம் பொது மக்கள் தேவையற்ற சிரமங்களை தவிர்த்துக் கொள்ள முடியுமென இன்று யாழ் பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியகட்சர் டபிள்யு.ஜ.விமல சேன ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கண்டி வீதியில் பொலிசார் திடீர் பரிசோதனைகளை செய்வதை அறிந்த சிலர் கடந்த வாரம் வேறு பாதைகளில் கொழும்பை நோக்கி பேருந்துகளை செலுத்தியதாலேயே புத்தூர் கப்பூது வெளியில் சென்ற பேருந்து தடம் புரண்டு விபத்துக்குள்ளானதால் ஒருவர் பலியானதுடன் 20 பேர் காயம் அடைந்துள்ளனர் என்றும் தெரிவித்தார்.

இதே வேளை பிரயாண பத்திர அனுமதியுடன் சென்ற பேருந்துகள் மீது கடந்த வாரம் இனம் தெரியாதவர்கள் கல் வீச்சு தாக்குதல் நடத்தியதும் குறிப்பிடதக்கது.

சமய வழிபாடுகளைத் தடுக்கவில்லை

சமய வழிபாட்டு நிகழ்வுகளை தடுக்க வேண்டிய தேவையோ அவசியமோ பொலிஸாருக்கு இல்லையென யாழ்.பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யு.ஜ.விமலசேன குறிப்பிடுள்ளார்.

யாழ். பொலிஸ் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மருதனார்மடம் சபாபதிப்பிள்ளை முகாமில் மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் சார்பில் வலி.வடக்கில் இருந்து இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியேற அனுமதிக்க வேண்டும் என நடைபெறவிருந்த பிரார்த்தனையை இரகசியப் பொலிஸ் எனக் கூறி சென்ற இருவர் மற்றும் இராணுவப் புலனாய்வாளர்கள் தடை செய்தமை தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

சட்டதிட்டத்திற்கு உட்பட்டு நடாத்தப்படும் எந்தவொரு நிகழ்வுகளிற்கும் நாம் தடையாக இருக்கமாட்டோம், அதனை அங்கீகரிப்போம், மாறாக சட்டவிரோதமான முறையில் இடம்பெற்றால் நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற்று தடைசெய்வோம்.

ஆனால் குறித்த முகாமில் நடைபெறவிருந்த பிரார்த்தனையை பொலிஸார் தடைசெய்யவில்லை. மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பிரார்த்தனை செய்யவேண்டாம் என அச்சுறுத்துவதாக சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைக்கப்பெற்ற தொலைபேசி தகவலின் அடிப்படையில் இரண்டு பொலிஸாரை சிவில் உடையில் முகாமுக்கு அனுப்பி யார் என கண்காணிக்குமாறு பணித்தார்.

ஆனால் அவர்கள் போனபோது அங்கு அவ்வாறு யாரும் காணப்படவில்லை. குறித்த சம்பவம் தொடர்பில் எந்தவொரு அமைப்போ, நபரோ பொலிஸ் நிலையம் சென்று முறைப்பாட்டைப் பதிவு செய்யாமையால் மேற்கொண்டு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தெரிவித்தார்.

– See more at: http://www.tamilwin.net/show-RUmsyJSWKUfp6.html#sthash.Vh5yh5sB.dpuf தெரிவித்தார்.

SHARE