அனுஷ்காவுக்கு டூப் போட்ட ஸ்டன்ட் மாஸ்டர் 

445
அனுஷ்காவுக்கு டூப் போட்டார் ஸ்டன்ட் மாஸ்டர். டாப் ஹீரோக்களுக்கு ஸ்டன்ட் மாஸ்டர்கள் அல்லது ஸ்டன்ட் நடிகர்கள் ரிஸ்க்கான சண்டை காட்சிகளில் டூப் போட்டு நடிப்பார்கள். கோச்சடையான் படத்தில் ரஜினிக்காக பல காட்சிகளில் டூப் போட்டு நடித்தார் இளம் நடிகர் ஜீவா. டி.வி மற்றும் மேடை நிகழ்ச்சிகளில் இவர் ரஜினி குரலில் மிமிக்ரி செய்தும் அவரது ஸ்டைலில் நடித்தும் வருபவர்.

தமிழ் தெலுங்கில் ராஜ்மவுலி இயக்கும் பாஹுபாலி படத்தில் ஆக்ஷன் காட்சிகளில் நடிக்கிறார் அனுஷ்கா. இதற்காக பிரத்யேகமாக குதிரை ஏற்றம், கத்தி சண்டை பயிற்சி பெற்றார். இப்படத்துக்கான ஸ்டன்ட் காட்சிகளை பீட்டர் ஹெயின் அமைக்கிறார். இவர் அந்நியன், சிவாஜி போன்ற பல்வேறு பெரிய பட்ஜெட் படங்களுக்கு ஸ்டன்ட் அமைத்திருக்கிறார்.

ரிஸ்க் நிறைந்த காட்சிகளில் அனுஷ்கா நடித்தபோதும் ஒரு சில காட்சிகளில் அவருக்கு டூப்பாக பெண் வேடம் அணிந்து பீட்டர் ஹெயின் நடித்தார். இதுபற்றி ஹெயின் கூறும்போது, அனுஷ்கா நன்கு பயிற்சி எடுத்து காட்சிகளில் நடித்திருக்கிறார். ஹீரோக்களே செய்யத் தயங்கும் பல ரிஸ்க்கான காட்சிகளில் அவரே நடித்திருக்கிறார். அவரது ரிஸ்க்கை குறைக்கும் எண்ணத்துடன் சில காட்சிகளில் அவருக்கு பதிலாக நானே டூப்போட்டு நடித்தேன் என்றார்.

 

SHARE