-
சிங்கப்பூரில் நிரந்தரமாகக் குடியேறியவர்கள், பணி நிமித்தமாக தங்கியிருப்பவர்கள் என அனைவருக்கும் சிங்கப்பூர் பொதுவானது என்று அந்நாட்டு பிரதமர் லீ சியான் லூங் கூறினார்.
ஒரு சமூகம் சார்ந்த கொண்டாட்டம் ஒன்றில் சனிக்கிழமை இரவு பங்கேற்று, கூட்டத்தினரிடையே அவர் பேசியதாவது:
சிங்கப்பூரில் உள்ளவர்கள், புதிதாக இங்கு வந்து நிரந்தரமாக குடியேறியவர்கள், வேலைக்காக வந்திருப்பவர்கள் என அனைவரும் ஒரு பெரும் சிங்கப்பூர் குடும்பமாக உள்ளோம். எனவே இது அனைவருக்கும் பொதுவான, சிறப்பான இடம் என்று கருதுகிறோம். அனைவரது கொண்டாட்டங்களையும், மகிழ்ச்சியான தருணங்களையும் எல்லோரும் கொண்டாடுகிறோம் என்று அவர் பேசினார்.
புலம்பெயர்ந்து சிங்கப்பூர் வந்தவர்களிடையே அந்நாட்டினர் பாரபட்சம் காட்டி வரும் நிலையில், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், வளமைக்கும் புலம்பெயர்ந்தவர்களின் வருகை முக்கியம் என்று லூங்கின் அரசு வலியுறுத்தி வருகிறது.