அபிவிருத்திக்கென இந்தியா கோடிக்கணக்கான ரூபாய்களை அள்ளிக்கொடுத்தது . EPRLF இன் செயலாளர் பத்மநாபா இருந்தபோதிலும், EPRLF இன் வளர்ச்சியிலோ அல்லது கஷ்டங்களிலோ எந்த விதத்திலும் சம்மந்தமில்லாத வரதராஜப்பெருமாளே முதலமைச்சர் பதவியை தட்டி பறித்துக்கொண்டார் .

349

 

இலங்கை இந்திய ஒப்பந்தம் என்பது தமிழர்களின் அரசியல் வரலாற்றில் மறக்கப்பட முடியாத ஒன்றாகும் .இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பின்னரே அதிகாரப்பரவலின் அலகானது மாகாணமாகி , மாகாண சபை முறை உருவாக்கப்பட்டு அதன் பின்னர் வடக்கும் கிழக்கும் தற்காலிகமாக இணைந்து ஓரலகாகியது.

தமிழ் மக்களின் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்று உண்மையாகவே எண்ணுபவர்கள் ,கொடிய யுத்தம் தொடரக்கூடாது என்று எண்ணுபவர்கள், தங்களது தனிப்பட்ட பழிவாங்கும் எண்ணங்களை ஒருபுறம் தள்ளிவிட்டு, அனைவரையும் ஒன்றிணைத்து, இந்த சந்தர்ப்பத்தை சரிவர பயன்படுத்தி தமிழ் மக்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்யக்கூடிய தீர்வுக்கு வழி செய்திருக்க வேண்டும் .


உண்மையிலேயே அப்பேற்பட்ட ஒரு பொன்னான சந்தர்ப்பமானது EPRLF அமைப்பினருக்கே எட்டியது .அந்த நேரத்திலே இந்திய ராணுவம் இலங்கையிலே நிலை கொண்டிருந்தது .இலங்கை இராணுவமோ முகாம்களுக்குள் முடக்கப்பட்டிருந்தது .அபிவிருத்திக்கென இந்தியா கோடிக்கணக்கான ரூபாய்களை அள்ளிக்கொடுத்தது .
EPRLF இன் செயலாளர் பத்மநாபா இருந்தபோதிலும், EPRLF இன் வளர்ச்சியிலோ அல்லது கஷ்டங்களிலோ எந்த விதத்திலும் சம்மந்தமில்லாத வரதராஜப்பெருமாளே முதலமைச்சர் பதவியை தட்டி பறித்துக்கொண்டார் .

அது கூட பரவாயில்லை என்று ஏற்றுக்கொண்டாலும், மாகாண சபையை ஒழுங்காக நடத்தினார்களா என்றால, இல்லவேயில்லை .தாங்கள் பழைய EPRLF இல்லை என்று கூறியவர்கள் ,புலி வேட்டை என்று கூறி EPRLF இன் சுரேஸ் (தற்போதய TNA MP) மற்றும் ஜேம்ஸின் (சிவா ,சாகரன் ,அலம்பல் சிவா) உத்தரவுக்கிணங்க, பொதுமக்கள், கல்விமான்கள், மாணவர்களை கொன்று குவித்தார்கள் .. இதை தொடர்ந்து மக்களின் சீற்றத்துக்கு உள்ளாகியவர்கள் சாதாரண கீழ் மட்ட உறுப்பினரை விட்டுவிட்டு இந்தியா பறந்தார்கள்.

SHARE