அமெரிக்காவில் காட்டுத்தீ: ஒருவர் சாவு

600
அமெரிக்காவில் உள்ள தெற்கு கலிபோர்னியா வனப்பகுதியில் கடுமையான வெயில் கொளுத்துகிறது. இதனால் ஏற்பட்ட வெப்பத்தில் அங்குள்ள மரங்கள் தீப்பிடித்து எரிகிறது. இந்த காட்டுத்தீ நேற்று 2-வது நாளாக பயங்கரமாக எரிந்து கொண்டு இருக்கிறது.

தெற்கு கலிபோர்னியாவில் உள்ள 9 வனப்பகுதியில் உள்ள மரங்களில் தீப்பிடித்து உள்ளது. உயர்ந்த மரங்களில் பிடித்த இந்த தீயினால் அந்த பகுதியையொட்டி உள்ள சான்மார்கோஸ் மற்றும் வடக்கு சான்டியோங்கோவில் உள்ள எஸ்கோன்டிடோ நகரங்களுக்குள் பரவும் அச்சுறுத்தல் ஏற்பட்டு உள்ளது.

காட்டுத்தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் அந்த பகுதியில் முகாமிட்டு தீயை அணைக்க கடுமையாக போராடி வருகிறார்கள். அவர்கள் அந்த பகுதியில் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஒரு லட்சத்து 25 ஆயிரம் மக்களை அவர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றினார்கள்.

இந்த தீவிபத்தில் சான்மார்கோஸ் பகுதியில் ஒரு வீடு முழுமையாக எரிந்து சாம்பல் ஆனது. இந்த தீவிபத்து பற்றி அதிகாரி ஒருவர் கூறுகையில் ‘சான்டியோங்கோ பகுதியில் 7 வீடுகள் எரிந்து சாம்பலானது என்றும் 18 அடுக்கு மாடி குடியிருப்புகளும் பாதிக்கப்பட்டு உள்ளது.

இந்த தீவிபத்தில் சான்டியோங்கோவில் ஒருவர் பலியானார். புறநகர் பகுதியான சான்மார்கோவில் வீடுகள் தீக்கிரயானதை அங்குள்ள டெலிவிஷன் ஒளிபரப்பி உள்ளது. சான்டியோங்கோவில் உள்ள சுமார் 6 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு வனப்பகுதி எரிந்து உள்ளது.

மேலும் கடற்கரையொட்டி உள்ள வனப்பகுதியில் 400 ஏக்கரில் தீப்பிடித்து எரிகிறது. இந்த தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகிறார்கள்.

SHARE