அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் அரசாங்கத்தை விட்டு விலகுவன் எண்டு வெருட்டி இருக்கிறார். இது உலக அதிசயம்

499


 images (3)
அட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் அரசாங்கத்தை விட்டு விலகுவன் எண்டு வெருட்டி இருக்கிறார். இது உலக அதிசயம் எண்டு சில பேர் சொல்லுயினம். ஏணெடால் மனுசன் அரசாங்கத்தோட எப்பிடி ஒட்டிக் கொண்டு இருக்கிறார் எண்டு இந்த அகிலமும் அறியும். பிறகு எப்பிடி? 

இப்ப கொஞ்ச நாளாய் மகிந்த வளக்கிற நாய்க்குட்டியள் அவரைப் பாத்தே குலைச்சுக் கொண்டு நிக்குதுகள். விமல் வீரவன்சவும் சம்பிக்கவும் அரசாங்கத்த விட்டு எப்ப விலகுறது எண்டு கணக்கு போடுதாய் கதை அடிபடுது. சம்பிக்க மகிந்தவ எச்சரித்துக் கொண்டிருந்தார். இப்ப விமலும் தொடங்கிட்டார்.

கொலை, கொள்ளை எண்டு எல்லா அக்கிரமங்களுக்கும் மகிந்தவுக்கு முண்டு குடுத்தவையளுக்கு இப்ப என்ன பிரச்சினை எண்டு நீங்கள் நினைப்பியள்? மான ரோச நரம்பு புதுசா முளைச்சிட்டே எண்டு குழம்பாதீங்கோ. எல்லாம் யாவாரத்தின்ட அடுத்த கட்டம் தொடர்பான பிரச்சினைதான். 

மெல்ல மெல்ல மகிந்தவின்ட கோட்டையை உடைக்கப் பாக்கினம் போல கிடக்குது. மகிந்த இடதுசாரியளையும் இனவாதியளையும் முன்னாள் புலிகளையும் முஸ்லீம் தரப்பையும் எண்டு எல்லா தரப்பையும் ஒரு குடையில வைச்சு அரசாட்சி புரிஞ்சிருக்கிறார். அதுக்குள்ள உந்த இன மதவாதிகள் இப்ப கிளம்ப பாக்கிறினம். 

இந்த குழப்பத்திற்குள்ள டக்ளஸ் தேவானந்தாவும் அரசாங்கத்தை விட்டு விலகத் தயார் எண்டுற மாதிரி சொல்லி இன்னொரு விசயத்தையும் கக்கியிருக்கிறார். தெரிவுக்குழுவுக்கு எல்லாரும் வரவேணுமாம். அதில தீர்வு தராட்டி அரசாங்கத்தை விட்டு விலகுறாராம். எப்பிடி பகிடி பாத்தியளே? 

உவர் அரசாங்கத்த விட்டு விலகத் தயார் எண்டதும் நான் என்ன நினைச்சன் தெரியுமே? எலக்சன் வருகுதாக்கும். ஆட்சி மாறப் போகுது போல. மனுசன் வேற கட்சி தாவி அமைச்சர் ஆகப் போகுது எண்டெல்லே நினைச்சன். ஏண் எண்டால் ஆர் ஆண்டாலும் இவர் அமைச்சராய் எல்லோ இருக்கிறவர். 

இப்ப உவர் உதுக்கு ன்ன சொல்லுறார் தெரியுமே? மக்களுக்கு உரிமை பெற்றுக் குடுக்கிறதுதான் என்ட இலட்சியமாம். சர்வதேச அழுத்தால ஒண்டும் செய்ய ஏலாதாம். தெரிவுக்குழுவுக்கு வறட்டாம். மகிந்த ஏமாத்தின தானும் அரசாங்கவிட்டு விலத்துவாறாம். இலட்சிப் போராளி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இப்படிச் சொல்லுறினம்? 

மகிந்த பாடுற எல்லாப் பாட்டுக்கும் ஆடுறவர் இப்ப அரசில இருந்து விலகப் போறாராம்? குடுத்த காசுக்கு மேலால ஓவராய் கூவுற மாதிரி கிடக்கே?

SHARE