அம்மா வேடமாவது கிடைக்க பச்சை குத்திக்கொண்ட கனிகா 

517

 

அம்மா வேடத்தில் நடிக்க முடிவு செய்திருக்கும் கனிகா, அதற்காக சான்ஸ் பிடிக்கும் வகையில் உடலில் பச்சை குத்திக்கொண்டார்.‘பைவ் ஸ்டார், ‘ஆதிரை, ‘டான்ஸர் படங்களில் நடித்துள்ள கனிகா தமிழில் கடைசியாக கடந்த 2006ம் ஆண்டு ‘வரலாறு என்ற படத்தில் நடித்தார். அதன்பிறகு தமிழ் பக்கம் தலைவைக்காதவர் மலையாள படங்களில் மட்டும் நடித்து வந்தார். இந்நிலையில் கடந்த 2008ம் ஆண்டு அமெரிக்க மாப்பிள்ளை ஷியாம் ராதாகிருஷ்ணன் என்பவரை மணந்துகொண்டு குடும்பம் நடத்த சென்றுவிட்டார். ஒரு வருடத்திலேயே குடும்ப வாழ்க்கை போரடித்துவிட மீண்டும் நடிக்க வந்தார். ‘பழஸி ராஜா’வில் தொடங்கி தொடர்ச்சியாக அம்மா மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.ஹீரோயின்கள் நயன்தாரா, திரிஷா, இலியானா தங்கள் உடலில் பிறர் பார்வைபடும் இடங்களில் காதலன் பெயர், அல்லது வேலைப்பாடுடன் கூடி டிசைனில் டாட்டூ வரைந்துகொள்கின்றனர். இந்த பட்டியல் நீள்கிறது. திருமணத்துக்கு பிறகு படங்கள் தேடி வராததால் கனிகா வருத்தம் அடைந்தார். அம்மா வேடம் வந்தால் கூட போதும் என்ற தனது எண்ணத்தை வெளிப்படுத்தும் விதமாக சமீபத்தில் தனது வலது கை மேல்புறத்தில் குழந்தையை அன்பாக அரவணைத்து முத்தமிடும் தாய் உருவத்தை டாட்டூவாக வரைந்திருக்கிறார்.

 

SHARE