அரசாங்கம் தனக்கு தொடர்ச்சியாக அநீதி இழைத்துக் கொண்டிருப்பதாக பொதுமக்கள் நல்லுறவு அமைச்சர் மேர்வின் சில்வா

390
அரசாங்கம் தனக்கு தொடர்ச்சியாக அநீதி இழைத்துக் கொண்டிருப்பதாக பொதுமக்கள் நல்லுறவு அமைச்சர் மேர்வின் சில்வா பரபரப்புக் குற்றச்சாட்டொன்றை முன்வைத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, இந்த அரசாங்கம் தொடர்ச்சியாக எனக்கு அநீதி இழைத்துக் கொண்டிருக்கின்றது. நானும் எவ்வளவு காலத்துக்குத்தான் பொறுமையாக இருக்க முடியும்? மிக விரைவில் நான் இது தொடர்பில் தீர்க்கமான முடிவொன்றை எடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளேன். ஜனாதிபதி மிகவும் நல்லவர், அவர் எனக்கு எந்தவித அநீதியும் இழைக்கவில்லை, அவரைச் சுற்றியுள்ளவர்கள்தான் என்னை சீண்டிப் பார்க்கின்றார்கள். எனது பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என்று தெரிவித்துள்ளார். ஊவா மாகாண சபைத் தேர்தலின் பின் ஐ.தே. க. தொடர்பில் பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ள வரவேற்பு காரணமாக ஆளுங்கட்சி மிக விரைவில் அதிகாரத்தை இழக்கும் நிலையை நோக்கி பயணிக்கின்றது. இதனை மனதில் கொண்டு ஐ.தே.க. விற்கு தாவும் மனோநிலைக்கு அமைச்சர் மேர்வின் தள்ளப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

SHARE