அலரி மாளிகை மற்றும் ஜனாதிபதி மாளிகை ஆகியனவற்றை மக்கள் பார்வையிடுவதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அலரி மாளிகை மற்றும் ஜனாதிபதி மாளிகை ஆகியவற்றில் தங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மாளிகைகளை தூய்மைப்படுத்தும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்தப் பணிகள் பூர்த்தியானதன் பின்னர் அடுத்த வாரமளவில் மாளிகைளை மக்கள் பார்வையிட அனுமதியளிக்கப்படும்.
மேலும், நாடு முழுவதிலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் பயன்படுத்தப்பட்ட மாளிகைகள் மக்கள் பார்வைக்காக விடப்படும் என அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.