அவுஸ்திரேலிய அணிக்கு ஏதிரான போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!

46

 

அவுஸ்திரேலியாவிற்கு எதிரான சர்வதேச ஒருநாள் தொடரை தென்னாபிரிக்க அணி வெற்றிகொண்டுள்ளது.

தொடரின் 5 ஆவதும் இறுதியுமான போட்டியில் 122 ஓட்டங்களால் வெற்றிபெற்றதன் மூலம் தென்னாபிரிக்க அணி வெற்றியை தனதாக்கியது.

தென்னாபிரிக்க அணி வெற்றி
சுற்றுலா அவுஸ்திரேலியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 5 ஆவதும் இறுதியுமான போட்டி ஜோகானர்ஸ்பேர்க்கில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 315 ஓட்டங்களைப் பெற்றது.

அதிகபட்சமாக ஏய்டன் மார்க்ரம் 93 ஓட்டங்களையும் டேவிட் மில்லர் 63 ஓட்டங்களையும் பெற்றதுடன், சீன் அபொட் 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

316 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி ஆரம்பம் முதல் தடுமாற்றத்தை எதிர்கொண்டது.

இறுதியில் 34 புள்ளி 1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 193 ஓட்டங்களைப் பெற்று 122 ஓட்டங்களால் தோல்வி அடைந்துள்ளது.

அதிகபட்சமாக மிச்சேல் மாஸ் 71 ஓட்டங்களையும் மர்னூஸ் லபுசேங் 44 ஓட்டங்களையும் பெற்றதுடன், மார்க்கோ ஜான்சன் 5 விக்கெட்டுக்களையும் கேசவ் மகாராஜா 4 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

போட்டியின் சிறப்பாட்டகாரராக மார்க்கோ ஜான்சனும் தொடரின் சிறப்பாட்டகாரராக ஏய்டன் மார்க்ரமும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர் என்பது குறி்ப்பிடத்தக்கது.

SHARE