அவுஸ்ரேலியாவின் மனுஸ் தீவில் தடுத்து வைத்துள்ள புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் கோமா நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

379

அவுஸ்ரேலியாவின் மனுஸ் தீவில் தடுத்து வைத்துள்ள புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் கோமா நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அகதிகள் அதிரடி கூட்டணி அமைப்பாளர் இயன் ரிண்டோல் இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் மிகவும் நோய் வாய்ப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர், தற்போது கோமா நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

புகலிடக் கோரிக்கையாளரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் எந்த நேரத்திலும் அவர் உயிரிழக்கலாமென மனுஸ் வைத்தியசாலை வைத்தியர்கள் தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், குடிவரவு அதிகாரிகளும் குறித்த புகலிடக் கோரிக்கையாளரைப் பார்வையிட்டு உள்ளார்கள் என தெரிவிக்கப்படுகிறது.

தஞ்சம்கோரி வந்த புகலிடக் கோரிக்கையாளர்களை அவுஸ்ரேலியாவுக்கு அரசாங்கம் அண்மைத் தீவுகளுக்கு அனுப்புவதால் தற்கொலை அதிகரிதுள்ளதாக இயன் ரிண்டோல் தெரிவித்துள்ளார்.

இந்த அரசாங்கம் பதவிக்கு வந்த பின் புகலிடக் கோரிக்கையாளர்கள் மன ரீதியாக பாதிக்கப்பட்டு தனக்கு தானே துன்புறுத்தி தற்கொலை மற்றும் மரணம் என பல வழிகளிலும் ஈடுபடுவதற்கு காரணமாக உள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.

மிகவும் குறைவான வசதிகள் கொண்ட வைத்தியசாலையே கோமா நிலைக்கு கரணம்

கோமா நிலயில் இருக்கும் இந்த புகலிடக் கோரிக்கையாளர் மனுஸ் தீவில் தங்க வைக்கப்பட்ட போது, அவருடைய கைகளில் சிறிய காயம் ஏற்பட்டதாகவும் இதற்கு கரணம் அங்கு சுகாதார நிலை மிகவும் மோசமாக இருந்ததாகவும் செப்டிகேமியா நோயால் அவர் அவதியுற்று வந்த நிலையில், மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டதாக இயன் தெரிவித்தார்.

இதன் காரணமாக இவரை அனைத்து புகலிடக் கோரிக்கையாளர்களும் புறக்கணித்துள்ளனர்.

இதனால் மிகவும் மனமுடைந்த இவர் மாரடைப்பு காரணமாக பிரீஸ் வேண் வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்டு சுகவீனமுற்ற நிலையில் மனுஸ் தடுப்பு முகாமுக்கு மீண்டும் அனுப்பப்பட்டுள்ளார்.

தற்போது மனுஸ் வைத்தியசாலை மருத்துவர்கள் இவருடைய மூளை செயல் இழந்துள்ளதாக அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுதியுள்ளதாக இயன் தெரிவித்துள்ளார்.

இவருக்கு நடந்த நிலை சக புகலிடக் கோரிக்கையளர்களுக்கும் நடப்பதுக்கு முன் காப்பாற்ற வேண்டும் என்றும் இன்னும் 140 புகலிடக் கோரிக்கையாளர்கள் அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

2013 ம் ஆண்டு முதல் தடவையாக மனுஸ் தீவுக்கு அனுப்பப்பட்ட புகலிட கோரிக்கையாளரில் இவரும் ஒருவராவர்.

ஏற்கனவே மனுஸ், நவுரு போன்ற தீவுகளில் சுகாதாரம் மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக பல தடவை இந்த அரசாங்கத்துக்கு எடுத்துச் சொல்லியும் அரசாங்கம் பாரிய தவறிழைதுள்ளது என்றார்.

அது போன்று அங்குள்ள வைத்தியர்களும் பல தடவை அரசுக்கு சொல்லி இருந்தும் போதிய வைத்திய வசதிகள் இங்கு இல்லை என்றும் இவர் இன்னும் ஓரிரு தினங்களுக்கு தான் உயிர் வாழ்வாரென மனுஸ் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ள நிலையில் இவரின் மரணத்துக்கு அவுஸ்திரேலிய அரசாங்கமே கரணம் என இயன் மேலும் தெரிவித்துள்ளார்.

TPN NEWS

 

SHARE