ஆகஸ்ட்டை குறி வைக்கும் 37 படங்கள் 

380ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் ஆவதற்கு 37 படங்கள் காத்திருக்கின்றன.சமீப காலமாக அதிக அளவில் படங்கள் தயாராகி வருகின்றன. தயாரான படங்களை ரிலீஸ் செய்வதில் சிக்கல் அதிகரித்து வருகிறது.  தியேட்டர் கிடைப்பதிலும் பிரச்னை ஏற்படுகிறது. எப்போதும் இல்லாத அளவுக்கு அடுத்த மாதத்தைக் குறி வைத்து 37 படங்கள் ரிலீஸுக்கு காத்திருக்கின்றன. கடந்த 18 ம் திகதி வெளியான வேலையில்லா பட்டதாரி படமும் சதுரங்க வேட்டையும் நன்றாக ஓடிக்கொண்டிருப்பதால் 25-ம்  திகதி வெளியாக வேண்டிய சில படங்கள் அடுத்த மாதத்துக்குத் தள்ளிப்போனது.

அவற்றையும் சேர்ந்து, அஞ்சான், காவியத்தலைவன், கதை திரைக்கதை வசனம் இயக்கம், வானவராயன் வல்லவராயன், 49 ஓ, கன்னக்கோல், சண்டியர், சரபம், ஜிகிர்தண்டா, பட்டைய கிளப்பணும் பாண்டியா, சிநேகாவின் காதலர்கள், ஆள், பூலோகம், பரணி, ஆ, தகடு தகடு, மொசக்குட்டி, சேர்ந்து போலாமா, ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி, வாலிப ராஜா, அரண்மனை, வாலு, மெட்ராஸ், கங்காரு, புலிப்பார்வை, இரும்புக்குதிரை, சலீம், காதலைத்தவிர வேறொன்றுமில்லை, வெண்நிலா வீடு, சோன்பப்டி, திருடன் போலீஸ், தொட்டால் தொடரும், பூலோகம், கடவுள் பாதி மிருகம் பாதி, காமராஜர் மற்றும் ஆங்கிலப் படங்களான ஹெர்குலீஸ் ரிட்டர்ன், தி எக்ஸ்பெண்டபிள் 3 ஆகிய 37 படங்கள் ஆகஸ்ட் மாத ரிலீஸுக்கு காத்திருக்கின்றன. இன்னும் சில டப்பிங் படங்களும் இந்த லிஸ்டில் சேரும் என்றும் கூறப்படுகிறது.

அடுத்த மாதம் பெரிய படமான அஞ்சான் ரிலீஸ் ஆவதால் அதற்கு முன்போ பின்போ படத்தை ரிலீஸ் செய்ய பலர் நினைக்கின்றனர். அதற்கான முயற்சியிலும் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே இரண்டு படங்கள் நன்றாக ஓடிக்கொண்டிருப்பதால் தியேட்டர் கிடைப்பதில் பிரச்னை இருக்கிறது. அதனால் 37 படங்கள் ரிலீஸ் முயற்சியில் இருந்தாலும் அவ்வளவும் ரிலீஸ் ஆகும் வாய்ப்பில்லை என்று வினியோகஸ்தர் ஒருவர் சொன்னார்

 

SHARE