ஆண்டு தோறும் பாகிஸ்தானில் இருந்து வெளியேறும் 5 ஆயிரம் இந்துக்கள்

533

பாகிஸ்தானில் இந்துக்கள் ‘மைனாரிட்டி’ ஆக உள்ளனர். அவர்கள் சிந்து மாகாணத்தில் பெருமளவில் வசிக்கின்றனர். அங்கு அவர்கள் மீது சமூக விரோதிகளும், தீவிரவாதிகளும் அடிக்கடி தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

கடத்தல், வழிப்பறி, கற்பழிப்பு போன்ற சம்பவங்களை நடத்தி மிரட்டி வருகின்றனர். அங்குள்ள இந்து கோவில்கள் தீயிட்டு எரிக்கப்படுகின்றன. சாமி சிலைகள் உடைக்கப்படுகின்றன.

எனவே, தீவிரவாதிகளின் மிரட்டலுக்கு பயந்து ஆண்டு தோறும் பாகிஸ்தானில் இருந்து 5 ஆயிரம் இந்துக்கள் வெளியேறி வருகின்றனர். இந்த தகவலை ஆளும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ் பிரிவு) எம்.பி. ரமேஷ்குமார் வாங்வானி பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறியதாவது:–

இந்துக்களை தீவிரவாதிகள் தொடர்ந்து மிரட்டி வருகின்றனர். சிந்து மாகாணத்தில் கடந்த 2 மாதத்தில் மட்டும் 6 சம்பவங்கள் நடந்துள்ளன. ஆனால் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் பாகிஸ்தானில் பாதுகாப்பு இல்லை என இந்துக்கள் அஞ்சுகின்றனர். எனவே, இந்தியா உள்ளிட்ட மற்ற நாடுகளுக்கு சென்று தஞ்சம் அடைகின்றனர் என குற்றம் சாட்டினார்.

SHARE