ஆனந்தி சசிதரனின் ஏற்பாட்டில் நடைபெறவிருந்த கவனயீர்ப்பு போராட்டம் இராணுவத்தினரால் திட்டமிட்டு முறியடிப்பு.

474

 

நேற்றைய தினம் கவனயீர்ப்புபு; போராட்டம் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டிருக்கும் 12 ஆட்கொணர்வு மனுவுக்கு ஆதரவு தெரிவித்தும், 05 வருடங்கலாக சரணடைந்த மற்றும் காணாமற்போன உறவினர்களை தேடிக்கொண்டிருக்கும் குடும்ப அங்கத்தவர்களின் நிலைமைகளை உணர்த்துவதற்குமானதொரு போராட்டம் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.
திட்டமிட்ட நிகழ்வுகள் இராணுவத்தினராலும், இராணுவ புலனாய்வாளர்களாலும், அரச சார்பான குழுக்களும் இணைந்து இரு பேரூந்துகளில் மக்களை ஏற்றிவந்ததுடன், அவர்களுக்கு பணம், நிவாரணம் வழங்குவதாகக் கூறியே கேப்பாப்புலவு பண்ணையில் கடமையாற்றும் மக்களைக் கொண்டுவந்து விடுதலைப்புலிகளுக்கு எதிரானதும், தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினருக்கும் எதிரானதுமான கோசங்களை எழுப்பினர்.

இதில் முக்கிய பங்கு வகித்தவர் ஒரு அரச உத்தியோகத்தர் என்பதுடன் அவர் செயற்பட்ட விதம் கவலைக்குறியது. ஆனால் அவர்கள் நடத்திய போராட்டம் பெருமளவில் எடுபடவில்லை. உண்மையில் மக்களுக்கு இறுதியாகத்தான் தெரியும். இதை யார்? என்ன செய்கிறார்கள் என்று. வந்தவர்களின் சிலர் என்னிடம் தாங்கள் விருப்பமில்லாமல் அந்த பேரூந்துகளில் ஏறிவந்ததாகவும என்னிடம் தெரிவித்திருந்தார்கள்.

தங்களை பேரூந்துகளில் கொண்டுவந்து இறக்கியவுடன் பதாதைகளை கைகளில் வழங்கியதாகவும் கூறினார்கள்.
ஆனால் மக்கள் ஒன்றிணைப் புரிந்துகொள்ளவேண்டும். வழமையாக தமிழ்மக்கள் உரிமைகளை வென்றெடுக்கும் ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்கின்றபோது, இதனை முறியடிக்கும் வகையில் அரசு செயற்படுவது என்பது. அதனை நாம் விளங்கிக்கொண்டு இனிவரும் காலங்களிலாவது தமிழ்த்தேசிய உணர்வோடு செயற்படவேண்டும்.

அரசாங்கத்திடம் அனுமதிபெற்றே கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெற்றது என்பதும் சுட்டிக்காட்;;;டவேண்டிய விடயமாகும். இதேநேரம் இவ்கவனயீர்ப்பு நிகழ்வில் கலந்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் கருத்துத்தெரிவிக்கையில், இக்கவனயீர்ப்பு போராட்டத்திற்கு இராணுவத்தினர் இரு பேரூந்துகளில் மக்களை நாங்கள் இருந்த இடத்திற்கு அருகாமையில் ஏற்றிவந்தனர். நாங்கள் கோசங்களை எழுப்புகின்றபொழுது பொலிஸாருக்கும், எங்களுக்கும் பிரச்சினை உருவாகியது.

 

SHARE