ஆபிரிக்க ஒன்றியம் இலங்கையை அங்கீகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆபிரிக்க இலங்கை உறவுகளில் புதிய சகாப்தமாக இந்த நடவடிக்கை கருதப்படுகின்றது.கடந்த ஏப்ரல் மாதம் முதல் இலங்கையை ஆபிரிக்க ஒன்றியம் அங்கீகாரம் செய்துள்ளது,இதற்கு முன்னர் இந்தியா பாகிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகள் மட்டுமே ஆசிய பிராந்திய வலயத்தில் ஆபிரிக்க ஒன்றியத்தினால் அங்கீகாரம் பெற்றுக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையுடன் கூடுதலான சமூகப் பொருளாதார உறவுகளைப் பேண சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாக ஆபிரிக்க ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.அண்மையில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆபிரிக்க நாடுகளுக்கு விஜயம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது,