வட – கிழக்கு இலங்கையில் காணமல் போனோரின் குடும்பங்களின் குறைகளை கேட்பதற்கும், அதற்கான நீதியை பெற்றுகொடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடல் ஒன்றின் போது அனுமதியில்லாமல் நுழைந்த அரச அனுசரணை பெற்ற பிக்குகள் உட்பட கும்பல் ஒன்று பாதுகாப்பு தரப்பினர் பார்த்துக்கொண்டு இருக்கும் போதே நடை பெற்றுக்கொண்டு இருந்த கலந்துரையாடலில் குழப்பத்தை ஏற்படுத்தினர்.
எனினும் சட்ட ரீதியாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த இந்த நிகழ்வுக்கு அத்துமீறி நுழைந்த கும்பலை வெளியேற்ற பாதுகாப்பு தரப்பினர் எந்த முயற்ற்சியும் எடுக்காமல் இருந்ததையும் காணக்கூடியதாக இருந்தது.
எவ்வாரெனினும் இந்த கலந்துரையாடலை காணமல் போனோரின் பெற்றோர்களின் சங்கம் மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட ஏனைய அமைப்புகளும் இனைந்து ஏற்ற்பாடு செய்திருந்தன. இந்நிகழ்வுக்கு அமெரிக்க தூதரக அதிகாரிகள், ஐரோபிய ஒன்றிய மற்றும் இதர தூதரக அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டு இருந்தனர்.
இந்த கலந்துரையாடல் நிகழ்வுக்குள் அத்துமீறி நுழைந்த பௌத்த பிக்குகள் அங்கிருந்தவர்களை கெட்ட வார்த்தைகளால் திட்டி கலந்துரையாடலை உடனடியாக நிறுத்துமாறும், இது கோத்தா மகாத்தயாவின் (கோத்தாபய ஐயாவின்) அரசாங்கம் எனக் கூறியதுடன் அங்கிருந்த அனைவரையும் உடனடியாக கைது செய்யுமாறு பொலிசாரை வற்ற்புறுத்தியுள்ளனர்.