இந்­தியா இலங்­கையின் அயல்­நாடு மாத்­தி­ர­மல்ல. ஒரு பிராந்­திய வல்­ல­ர­சா­கவும் திகழ்­கி­றது- இரா.சம்பந்தன்

432
இந்­தி­யாவின் புதிய அர­சாங்கம் மௌன­மாக இருக்­கி­றது என்­ப­தற்­காக இலங்கை தமிழ் மக்கள் மீது அதற்கு அக்­க­றை­யில்­லை­யென்று கரு­தக்­கூ­டாது. உரிய நிலை வரு­கிற போது எல்­லாமே நடை­பெறும் என்று தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான இரா. சம்­பந்தன் தெரி­வித்தார்.

இது தொடர்பில் மேலும் அவர் கூறு­கையில்,

இந்­தி­யாவின் நிலைப்­பாட்டில் சில சந்­தர்ப்­பங்­களில் ஒரு மௌனம் ஏற்­பட்­டி­ருக்­கலாம். அதற்­காக இலங்கை தமிழ் மக்­களை இந்­தி­யாவின் புதிய அர­சாங்கம் கைவிட்டு விட்­டது என அர்த்தம் கொள்ள வேண்­டிய அவ­சி­ய­மில்லை.

இந்­தியா இலங்­கையின் அயல்­நாடு மாத்­தி­ர­மல்ல. ஒரு பிராந்­திய வல்­ல­ர­சா­கவும் திகழ்­கி­றது. இந்­தி­யாவைப் பொறுத்­த­வரை அயல்­நாடு எல்­லா­வற்­று­டனும் சிநே­கித நிலையைப் பேணவும் வளர்க்­க­வுமே விரும்பும். அக் கொள்கை நியா­ய­மா­னது. அவ்­வி­த­மான நிலைப்­பாட்­டையே இலங்­கை­யு­டனும் தொடர முற்­ப­டு­கின்­றது.

இதே­வேளை இலங்­கையில் வாழும் தமிழ் மக்­க­ளுக்கு தீர்க்­கப்­ப­டாத பாரிய பிரச்­சி­னை­யொன்று இருக்­கி­றது. அது தீர்த்து வைக்­கப்­பட வேண்டும் என்ற யதார்த்­தத்தை புரிந்து கொண்டு அதற்­கா­கவே இந்­தியா நீண்ட கால­மாக செயற்­பட்டு வந்­தி­ருக்­கி­றது.

இந்­தி­யாவின் இந்த முயற்­சி­யா­னது 1983ம் ஆண்டு ஆரம்­பிக்­கப்­பட்­டது. இலங்கை – இந்­திய ஒப்­பந்தம் 13வது அர­சியல் சாச­னத்­தி­ருத்தம் ஆகி­யன அத­ன­டிப்­ப­டையில் உண்­டாக்­கப்­பட்ட விட­யங்­க­ளாகும்.

இது தவிர இலங்கை – இந்­திய ஒப்­பந்­தத்தில் இந்­தியா அக்­கறை கொண்ட வேறு சில விட­யங்­களும் உள்­ள­டங்கும்.

இந்­தி­யாவின் அந்த முயற்சி தொடர்ந்து கொண்­டி­ருக்­கி­றது. அது கைவி­டப்­ப­ட­வில்லை. மஹிந்த ராஜபக்ச ஜனா­தி­ப­தி­யாக முதல் முதல் தெரிவு செய்­யப்­பட்ட காலத்­திலும் தமிழ் மக்­களின் இனப்­பி­ரச்­சினை சம்­பந்­த­மாக இலங்கை – இந்­திய அர­சு­க­ளுக்­கி­டையில் பேச்­சு­வார்த்தை நடை­பெற்­றுள்­ளது.

அவ்­வாறு நடை­பெற்ற போதெல்லாம் இலங்கை ஜனா­தி­பதி வெளி­வி­வ­கார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் ஆகியோர் இந்­திய மத்­தி­ய­ர­சாங்­கத்­துக்கு பல்­வேறு வாக்­கு­று­தி­களை அளித்­துள்­ளனர்.

அந்த வாக்­கு­று­தி­களில் 13வது திருத்த சட்டம் கட்­டி­யெ­ழுப்­பப்­பட்டு அதன் மூல­மாக அர்த்­த­புஷ்­டி­யுள்ள அதி­காரப் பகிர்வை நாங்கள் ஏற்­ப­டுத்­துவோம் என்ற பல வாக்­கு­று­தி­களை அளித்­தி­ருந்­தார்கள்.

இந்­தி­யாவின் புதிய பிர­த­ம­ராக தெரிவு செய்­யப்­பட்­டுள்ள நரேந்­தி­ர­  மோ­டியின் பதவிப் பிர­மாண வைப­வத்­திற்கு இலங்கை ஜனா­தி­பதி சென்­றி­ருந்தார். வைபவம் முடிந்த மறுநாள் புதிய பிர­தமர் நரேந்­திர மோடியை இலங்கை ஜனா­தி­பதி சந்­தித்து உரை­யா­டிய வேளையில் இந்­தி­யா­வுக்கு இலங்கை அளித்த வாக்­கு­று­திகள் பற்றி இந்­தியப் பிர­தமர் வின­வி­யுள்ளார்.

வின­வி­யது மாத்­தி­ர­மல்ல யுத்தம் முடிந்து 5 வரு­டங்­க­ளுக்கு மேலா­கியும் வாக்­கு­று­திகள் ஏன் நிறை­வேற்­றப்­ப­ட­வில்­லை­யென்ற கேள்­வி­யையும் இந்­தியப் பிர­தமர் எழுப்­பி­யி­ருந்தார். இது எதைச் சுட்­டிக்­காட்­டு­கின்­ற­தென்றால் இந்­தி­யாவின் நிலைப்­பாட்டில் கடு­க­ளவு மாற்­றமும் நிக­ழ­வில்­லை­யென்­ப­தையே ஆகும்.

பல்­வேறு விட­யங்­களை ஆராய்ந்து பார்க்­கின்ற போது இந்­தியா இலங்­கையை பகைக்­காமல் இருக்­கலாம். அதற்­காக இலங்கைத் தமிழ் மக்கள் மீது இந்­தியா காட்டி வந்த அக்­க­றையை கைவிட்டு விட்­டது என நாம் அச்சம் கொள்ள வேண்­டிய தேவை­யில்லை.

இந்­திய மத்­தி­ய­ரசின் அழைப்பை ஏற்று தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு டில்லி சென்று வரு­வ­தற்கு முன்பு மக்­க­ளுக்கு எதையும் சொல்ல முடி­யாது. அது விட­ய­மாக பேசு­வது ஏற்­ற­தல்ல. அப்­படி பேசு­வது பாத­க­மாக அமை­யலாம். ஆனால் நடை­பெற வேண்­டிய கரு­மங்கள் நன்­றா­கவே நடை­பெ­று­மென மக்­க­ளுக்கு கூற விரும்­பு­கின்றோம் என்றார்.

தமிழத் தேசியக் கூட்­ட­மைப்­புடன் நேரடிப் பேச்­சு­வார்த்­தைக்கு இலங்கை அர­சாங்கம் தயா­ராகி வரு­கி­றது பற்றி தெரிவிக்கையில்,

கூட்­ட­மைப்பைப் பொறுத்­த­வரை எமது பிரச்­சி­னைக்கு நியா­ய­மான அர­சியல் தீர்வு ஏற்­பட வேண்­டு­மென்­பதில் கவ­ன­மாக இருக்­கிறோம். எங்கள் மக்­களின் இறைமை மதிக்­கப்­பட வேண்டும். அவர்­களின் பொரு­ளா­தார அர­சியல் சமூக கலா­சா­ரங்­களை மதிக்­கக்­கூ­டிய விதத்தில் அந்த அர­சியல் தீர்வு அமைய வேண்டும். என்றார் இரா.சம்பந்தன் அவர்கள்.

– See more at: http://www.newstamilwin.com/show-RUmsyHRULclqz.html#sthash.aYRjHcng.dpuf

SHARE