இந்தியாவில் எந்த அரசாங்கம் ஆட்சிசெய்தாலும், தமிழர் விவகாரத்தில் தலையிட்டே ஆவார்கள் – பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன்.

469

இந்தியாவில் நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள நரேந்திர மோடி எதிர்வரும் திங்கட்கிழமை பதவியேற்கவுள்ள இந்நிலையில், ஈழத்தமிழர்கள் தொடர்பில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தைகளை நடத்தும் அளவிற்கு அவர்களின் அரசியல் நிலைப்பாடுகள் அமையப்பெற்றுள்ளது. மறுபுறத்தில் இலங்கையரசாங்கத்துடன் இந்தியரசு இன்று நேற்றல்ல கடந்த பல வருடங்களுக்கு மேலாக நெருங்கிய நட்புறவுகளை பேணிவருகின்றது.

அதற்கு முக்கிய காரணம் அவர்களின் வியாபார, அரசியற் தந்திரோபாயமும், ஈழத்தமிழர்களினது பிரச்சினையுமேயாகும். நரேந்திரமோடி ஆட்சிபீடமேறி குறைந்தது ஒரு வருடங்களாவது கால அவகாசம் தேவைப்படும். அதற்கிடையில் இலங்கையரசினால் யுத்தக் குற்றங்கள் தொடர்பில் எங்கெல்லாம் மூடிமறைக்கமுடியுமோ அவற்றையெல்லாம் இலங்கையரசு செய்துமுடித்துவிடும். புதைக்கப்பட்ட இடங்களிலெல்லாம் மாளிகைகளும் கட்டப்பட்டுவிடலாம். தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு இலங்கை, இந்திய நட்புறவில் நல்லதொரு நிலைப்பாட்டையே கொண்டிருக்கின்றது. காங்கிரஸ் அரசு ஈழத்தமிழர் விவகாரத்தில் துரோகம் இழைத்ததைப்போன்று தற்போதைய மோடியின் அரசு தமிழ்மக்களுக்கான குறைந்தபட்சமான தீர்வுகளை வழங்க முன்வரலாம்.

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் இவ்விவகாரம் தொடர்பில், முட்டாள்தனமான முடிவுகளை எடுக்காது சிறந்த முடிவுகளை எடுப்பார் என்பது என்னுடையதும், மக்களினதும் எதிர்பார்ப்பாகும்.

SHARE