இந்திய சந்தையில் கால்பதித்த Redmi K70 ஸ்மார்ட்போன் சீரிஸ்: அறிமுக விழாவில் அசத்திய சியோமி

115

 

சியோமி நிறுவனம் தன்னுடைய Redmi K70 சீரிஸ் ஸ்மார்ட்போன்களும், கூடுதலாக பல தயாரிப்புகளை அறிமுக விழாவில் வெளியிட்டுள்ளது.

அறிமுக விழா
சியோமி (Xiaomi) நிறுவனம் கடந்த நவம்பர் 29ம் திகதி தன்னுடைய புதிய Redmi K70 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுக விழாவில் வெளியிட்டுள்ளது.

இந்த Redmi K70 ஸ்மார்ட்போன் சீரிஸில், Redmi K70, Redmi K70E மற்றும் Redmi K70 Pro போன்ற ஸ்மார்ட்போன்களை சியோமி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

Redmi K70 ஸ்மார்ட்போன் சீரிஸில் டாப் மாடலான Redmi K70 Pro ஸ்மார்ட்போன் புதிய Snapdragon 8 Gen 3 SoC ப்ராசஸரை கொண்டுள்ளது.

அதைப்போல் Redmi K70E ஸ்மார்ட்போன் மாடல், MediaTek Dimensity 8300-Ultra SoC ப்ராசஸரை கொண்டுள்ளது.மேலும் புதிதாக வெளியாகியுள்ள Redmi K70 சீரிஸில் உள்ள 3 மாடல் ஸ்மார்ட்போன்களும் Xiaomi HyperOSல் இயங்கும் என தெரியவந்துள்ளது.

பல தயாரிப்புகளை அறிமுகப்படுத்திய சியோமி
இந்த Redmi K70 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுக விழாவில், ஸ்மார்ட்போன்கள் மட்டும் இல்லாமல் சியோமி நிறுவனம் தன்னுடைய பல்வேறு தயாரிப்புகளையும் சேர்த்து அறிமுகப்படுத்தியுள்ளது.

அதில், ரெட்மி வாட்ச் 4(Redmi Watch 4), ரெட்மி புக் 16( Redmi Book 16 ), ரெட்மி பட்ஸ் 5 ப்ரோ செட்(Redmi Buds 5 Pro) ஆகியவற்றை சேர்த்து சியோமி அறிமுகப்படுத்தியுள்ளது.

SHARE