இந்தோனேஷியாவில் இன்று காலை நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவு

467

இந்தோனேஷியா சுமத்ரா தீவில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவாகியிருந்தது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் இதுகுறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின் படி இந்தோனேஷியா சுமத்ரா தீவின் மேற்கு கடற்கரை நகரம், பந்த ஏஸெ, நகரில் இருந்து 300 கிலோ மீட்டர் தொலைவில் 9 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாகவும் உள்ளூர் நேரப்படி காலை 7 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது என்றும் தெரிவித்துள்ளது. சேத மதிப்புகள் குறித்து உடனடி தகவல்கள் ஏதும் இல்லை. எனினும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.

SHARE