இந்தோனேஷிய அதிபர் தேர்தல்: முதல் சுற்றில் எதிர்க்கட்சிக்கு வெற்றி

560
இந்தோனேஷியாவில் அதிபர் தேர்தல் ஜூலை மாதம் 9-ந்தேதி நடக்கிறது. இதில் முக்கிய எதிர்க்கட்சியான இந்தோனேஷிய ஜனநாயக கட்சி சார்பில் ஜகார்த்தா மாநில கவர்னர் ஜோகோ ஜோகோவி விடோடோ என்பவர் நிறுத்தப்பட்டுள்ளார். இதற்காக கடந்த மாதம் நடந்த முதல்சுற்று தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன.

அப்போது இந்தோனேஷிய ஜனநாயக கட்சிக்கு 18.9 சதவீத ஓட்டுகளே கிடைத்தன. ஜனாதிபதி தேர்தலின் இறுதிச் சுற்றில் போட்டியிடவேண்டும் என்றால் குறைந்த பட்சம் 25 சதவீத ஓட்டுகளை முதல் சுற்றில் ஒரு வேட்பாளர் பெறவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் 6.7 சதவீத ஓட்டுகளை பெற்ற தேசிய ஜனநாயக கட்சி, ஜோகோவிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இதனால், அவர் இறுதிச் சுற்றில் போட்டியிடுவது உறுதியாகிவிட்டது.

அதே நேரம் இந்தோனேஷியாவின் முக்கிய கட்சிகளான கோல்கர், கெரிந்திரா ஆகியவற்றுக்கு முறையே 14.8 சதவீதம் மற்றும் 11.8 சதவீத ஓட்டுகளும் கிடைத்தன. அதிபர் சுசிலோ பாப்பாங்கின் ஜனநாயக கட்சிக்கு 10.2 சதவீத ஓட்டுகளுமே கிடைத்தன.

ஜூலை 9-ந்தேதி நடக்கும் அதிபர் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காவிட்டால், செப்டம்பர் மாதம் 2-வது கட்ட தேர்தல் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE