இனவாதத்தைத் தூண்டும் வகையில் உரையாற்றிய ஞானசார தேரர் கைது செய்யப்பட வேண்டும்-புலனாய்வுப் பொலிசார் விசாரணை

417

பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் அளுத்கமவில் நடைபெற்ற கூட்டத்தில் வெளியிட்ட கருத்துக்கள் குறித்து குற்றப்புலனாய்வுப் திணைக்களம் விசாரணை ஒன்றை ஆரம்பித்துள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அளுத்கமவில் நடைபெற்ற கூட்டத்தில் வன்முறையை தூண்டும் வகையில், ஞானசார தேரர் வெளியிட்ட கருத்து தொடர்பில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்கவிடம் கேட்ட போது அவர் இதனை கூறியதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த கூட்டத்தில் ஞானசார தேரர், ஜனாதிபதி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களையும் கடும் அவதூறாக பேசியதாகவும் ராஜித மேலும் தெரிவித்துள்ளார்.

பொது பல சேனா தீவிரவாத அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரிடம் இரகசியப் பொலிசார் விசாரணைகளை மேற்கொளள்வுள்ளனர்.

அண்மையில் அளுத்கமவில் நடைபெற்ற பொதுபல சேனா அமைப்பின் கூட்டத்தில் ஞர்னசார தேரர் இனவாதத்தைத் தூண்டும் வகையில் உரையாற்றியிருந்தார். மேலும் அவரது வன்முறையைத் தூண்டும் வகையிலான பேச்சு சிங்கள இளைஞர்களை உசுப்பேற்றி விட்டிருந்தது. இதன் காரணமாக ஏற்பட்ட இனக்கலவரத்தில் 400 கோடி ரூபா வரையான சேதம் ஏற்பட்டிருந்தது. நான்கு உயிர்கள் பலி கொள்ளப்பட்டிருந்தன.

இந்நிலையில் அளுத்கம வில் வன்முறை மற்றும் இனவாதத்தைத் தூண்டும் வகையில் உரையாற்றிய ஞானசார தேரர் கைது செய்யப்பட வேண்டும் என்று பலரும் வலியுறுத்தினர். எனினும் அவர் அவ்வாறு உரையாற்றவில்லை என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே அளுத்கமவில் நடைபெற்ற கூட்டத்தில் வன்முறையைத் தூண்டும் வகையில் மட்டுமன்றிஇ ஜனாதிபதியின் குடும்பத்தாரையும் கேவலப்படுத்தும் வகையில் ஞானசார தேரர் உரையாற்றியிருந்தார். இது தொடர்பாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனநாயக்கவிடம் அதிருப்தி வெளியிட்ட அமைச்சர் ராஜித சேனாரத்தின, ஞானசார தேரர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்தார்.

இதற்குப் பதிலளித்துள்ள அனுர சேனநாயக்க, அளுத்கம சம்பவம் தொடர்பில் ஞர்னசார தேரரிடம் புலனாய்வுப் பிரிவு பொலிசார் விசாரணைகளை நடத்தவுள்ளதாக தெரிவித்துள்ளார

 

SHARE