இன்று 10 அலுவலக புகையிரதங்கள் மாத்திரம் சேவையில்

45
இன்று (15) 10 அலுவலக புகையிரதங்கள் மாத்திரம் சேவையில் ஈடுபடும் என இலங்கை புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.

புகையிரத நிலையம் வெறிச்சோடி காணப்படுவதாகவும், அதன் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தின் அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.

இதேவேளை, புகையிரத சேவையை தொடர்ந்தும் நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு நேற்று (14) இரவு அறிவித்தது.

இன்று காலை 13 அலுவலக புகையிரதங்கள் இயக்கப்பட உள்ளதாக அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

அவிசாவளை, சிலாபம், ரம்புக்கன, கனேவத்தை, மஹவ, கண்டி, பெலியஅத்த, காலி, அளுத்கம மற்றும் தெற்கு களுத்துறை ஆகிய இடங்களில் இருந்து கொழும்பு வரை இந்த புகையிரதங்கள் சேவையில் ஈடுபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE