இப்போது நடிகர் விஜயகாந்த் உடம்பில் என்ன தான் பிரச்சனை-

152

 

தமிழக மக்கள் அரசியலில் மிகவும் எதிர்ப்பார்த்த ஒரு தலைவர் தான் விஜயகாந்த். தனது நாட்டை எவ்வளவு நேசிப்பவர் என்பது அவர் நடித்த படங்கள் மூலமே தெரியும். எப்போதும் மக்களை நினைத்து கவலைப்படும், அவர்களுக்காக பாடுபட நினைப்பவர்.

அகல் விளக்கு என்ற படம் மூலம் சினிமாவில் நுழைத்து நடிகர் என்பதை தாண்டி இயக்குனர், தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார்.

சினிமாவில் பிடித்த பெரிய இடத்தை போல அவர் அரசியலிலும் உயர்ந்து இருப்பார் என்று பார்த்தால் உடல்நலக் குறைவால் இப்போது கேப்டன் வீட்டில் ஓய்வில் இருக்கிறார்.

அவ்வப்போது அவரது புகைப்படங்கள் வெளியாக அதைப்பார்த்த கஷ்டப்பட்ட ரசிகர்கள் தான் அதிகம்.

பிரேமலதா பேட்டி
தனது கணவரை கூடவே இருந்து பத்திரமாக கவனித்து வரும் பிரேமலதா அண்மையில் ஒரு பேட்டியில், அவருக்கு தொடர்ந்து தேவையான சிகிச்சைகள் கொடுக்கப்பட்டு தான் வருகிறது.

இருந்தாலும் அவருக்கு நடப்பதிலும் பேசுவதிலும் குறைபாடு உள்ளது. சுறுசுறுப்பாக ஓடி திரிந்த மனிதனை இப்படி ஒரே இடத்தில் பார்ப்பது வேதனையாக உள்ளது என கண்ணீருடன் பேசியிருக்கிறார்.

SHARE